Category: ஹதீஸ் கலை

a104

11) இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை

11) இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை இப்னு ஜவ்ஸியின் கூற்று الموضوعات – (ج 1 / ص 99) وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றம்செய்யப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.   நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99 இப்னுல்கய்யும் அவர்களின் கூற்று […]

04) இல்லத் (மறைமுக குறையுள்ள) ஹதீஸ்கள்

முஅல்லல் ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது எவ்விதக் குறைபாடும் இல்லாததைப் போன்று இருக்கும். ஆனால் ஆழமாக ஆய்வு செய்யும் போது ஹதீஸின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் குறை காணப்படும். இத்தகயை செய்திக்கே முஅல்லல் என்று கூறப்படும். அதாவது குறையானது மறைமுகமாகவும், பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இல்லத் என்றால் என்ன? மறைமுகமானதாகவும், ஹதீஸின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ள குறைகளுக்கே ”இல்லத்” என்று கூறப்படும் இது போன்ற குறைகளை அறிகின்ற வழிமுறைதான் ஹதீஸ் […]

10) ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில் அவர்கள் சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்… அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும். நினைவாற்றல் உள்ளவராக இருக்க […]

09) புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள்

புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள் புகாரி இமாமின் மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்பவரிடமிருந்து பல மாணவர்கள் புகாரி நூலைப் பிரதி எடுத்துள்ளனர். அவர்களில் பின்வரும் மாணவர்கள் முக்கியமானவர்கள். இப்ராஹீம் பின் அஹ்மத் அல்முஸ்தம்லீ அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்ஹமவீ முஹம்மத் பின் மக்கீ குஷ்மீஹனீ அபூ அலீ அஷ்ஷப்பூவீ இப்னு ஸகன் அல் பஸ்ஸார் அபூ ஸைத் அல்மரூஸீ அபூஅஹ்மத் அல்ஜுர்ஜானீ இவர்களிடம் இருந்த பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும் வாசக […]

08) நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, […]

07) முரண்படும் ஹதீஸ் பற்றி அறிஞர்கள்

முரண்படும் ஹதீஸ்கள் முடிவு தரும் அறிஞர்கள் உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும் அதற்குரிய விளக்கமாகத் தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ எனும் இறைச் செய்திகளாகும். اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا […]

06) ஸஹீஹை மறுக்கும் விதிகள்

ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ்கலை விதிகள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பவர்களைப் பார்த்து ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று குறை சொல்லக்கூடியவர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ அவர்களும் பல ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் மறுப்பது திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தினால் ஆகும். ஆனால் அவர்கள் மறுப்பதோ ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஆகும். ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணாகிறது என்று மறுப்பதை விட குர்ஆனுக்கு முரணாகிறது என்று கூறி மறுப்பது மிகவும் உறுதியானது என்பதை இங்கே […]

05) அறிவிக்கப்படுபவரை கவனித்து ஹதீஸின் வகைககள்

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள் 1. குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.   குத்ஸீ அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படும். உதாரணம்: […]

03) குறைகளை கவனித்து ஹதீஸ்களின் வகைகள்

அறிவிப்பாளர்களிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படும் செய்திகள் மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். ஒரு அறிவிப்பாளர் நபியின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று விமர்சிக்கப் பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ”மவ்ளூவு” என்று கூறப்படும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும். திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் […]

02) எண்ணிக்கை கவனித்து ஹதீஸின் வகைககள்

ஹதீஸின் வகைககள் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். 1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது) 2. கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)   முதவாதிர் (அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது) ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் […]

01) ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு! இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே! திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். 7702 – […]