
அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது. தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது. எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது. ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய […]