Author: Mukthiyaar Basha

08) ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி

ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி! மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும் வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது. நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து […]

07) குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர்

குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர் உலகெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பலவகையான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு மிக முக்கிய காரணம், தவறு செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப் படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்ய தூண்டப்படுகிறான். மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களை செய்துவிட்டு தப்பிப்பதற்கு பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, […]

01) முன்னுரை

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனமற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது. பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் […]

06) நீதியை நிலை நாட்டியவர்

நீதியை நிலைநாட்டியவர்! ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்ப்பதற்கு, ‘அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா?’ என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். தாமும் பக்குவப்பட்டு, மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்கு மிக்கவனும், சாமானியனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த அளவுகோல் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் […]

05) நிர்வாக திறன் நிறைந்தவர்

நிர்வாகத் திறன் நிறைந்தவர் ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது. உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும். உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் […]

04) வர்க்க பேதங்களை ஒழித்து கட்டியவர்

வர்க்க பேதங்களை ஒழித்துக் கட்டியவர் ஒன்றே குலம்! அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள். ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும் நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) […]

03) ஆட்சி தலைவர் நபிகள் நாயகம்

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும். திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல், முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் […]

02) நபிகளாரின் வாழ்க்கை குறிப்பு

நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : முஹம்மது பிறப்பு : கி.பி. 570ஊர் : சவுதி அரேபியாவில் உள்ள மக்கா. குலம் : மிக உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்தார். குலப் பெருமையை ஒழித்தார்கள். நிறம் : அழகிய சிவந்த நிறம் கொண்டவர்கள். நிறவெறியை ஒழித்தார்கள். மொழி : தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்ட அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மொழிவெறியை ஒழித்தார்கள். கல்வி : பள்ளி சென்று படிக்கவில்லை. கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சென்று […]

14) தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்

ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. (அல்குர்ஆன்: 04:103) ➚ அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: (புகாரி: 631) ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். […]

06) நபித்துவத்தின் துவக்கம்

நபி(ஸல்) அவர்கள் இறைச்செய்தி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலேயே தம் வாழ்வை அமைத்திருந்தார்கள். சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்ததில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாட்டார்கள் (புகாரி: 3826) நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்த போது இறைவனின் புறத்திலிருந்து செய்திகள் வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. சில அற்புத நிகழ்ச்சிகளும் வெளிப்பட்டது. ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : நான் மக்காவில் ஓரு கல்லை பார்க்கிறேன். அது என் மீது […]

04) நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே. (முஸ்லிம்: 4575) நபி (ஸல்) அவர்களின் பரம்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா’வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா’வின் வழித்தோன்றல்களில் குறைஷியைரத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியலிருந்து […]

03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்

அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம் செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. சிலைகளை வழிபட்டனர் அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். […]

02) முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தவ்ராத், இன்ஜீல் உள்ளிட்ட முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றி முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முஹம்மது என்றொரு தூதர் வருவார் என்றும் அவர் மகத்தான சில நற்குணம் கொண்டவராக இருப்பார் என்றும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையே […]

05) அனுமதிக்கப்பட்டவை

மருத்துவக் காப்பீடு மருத்துவக் காப்பீடு நிறுவனத்தில் சேர விரும்புபவர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி குறிப்பிட்ட காலத்துக்கு உறுப்பினராக இருப்பார். உதாரணமாக ஒருவருடத்துக்கு 4000 ஆயிரம் ரூபாய் ஒருவர் செலுத்துகிறார். இந்தத் தொகையை உறுப்பினரின் வயது உடல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிறுவனே முடிவு செய்யும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான தொகையை நிர்ணயிக்கமாட்டார்கள். இந்த ஒருவருடத்துக்குள் இவருக்கு நோய்கள் ஏதாவது ஏற்பட்டால் இந்த நிறுவனம் அவருக்கு இலவசமாக மருத்துவம் செய்யும். அவர்கள் செலுத்திய தொகையை விட அதிகமாக […]

04) தடைசெய்யப்பட்டவை

நாணய மாற்றுதல் ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும். பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும். அது போல் ஒரு நாட்டின் […]

13) திருமணத்தில் நடைபெறும் பித்அத்கள்

திருமணத்தில் நடைபெறும் பித்அத்கள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வு திருமணம். அத்திருமணம் குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் இஸ்லாத்தில் உண்டு. மணத் துணைகளை தேர்வு செய்தல், மணமக்களின் தகுதி, மணமக்களின் சம்மதம், மஹ்ர் முடிவு செய்தல், எளிமையான திருமணம், வலிமா என்று இவை போன்ற அனைத்து திருமண சட்டங்களையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அகிலத்துக்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் குறித்த அழகிய வழிமுறைகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அதை விட்டு விட்டு […]

12) குர்ஆனின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்து விட்டது. (அல்குர்ஆன்: 10:57) ➚ உன்னத குர்ஆனின் உண்மைச் சிறப்பை உணராத முஸ்லிம்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக கருணை இறைவனால் காருண்ய நபிக்கு அருளப்பட்ட வேதமே திருமறைக் குர்ஆன் ஆகும். உலகம் நெடுகிலும் கோடான கோடி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேதம் குர்ஆன் ஆகும். அவ்வேதம் திக்கற்று நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். மனக்குழப்பத்திற்கு […]

11) அன்றாட வாழ்வில் அரங்கேறும் பித்அத்கள்

உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன்: 07:03) ➚ கனியிருப்பக் காய் கவரும் முஸ்லிம்கள்: இஸ்லாம் முஸ்லிம்களுக்கான ஒட்டு மொத்த வாழ்க்கைத் திட்டம். மார்க்க அடிப்படையில் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. இறை வேத்திலும், இறைத்தூதர் போதத்திலும் விளக்கப்படாத சட்டங்களே இல்லை எனலாம். அதை உள்ளது உள்ளபடி பின்பற்றி விட்டால் […]

10) நோன்பின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:) ➚ நோன்பின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள் இஸ்லாமிய வணக்கங்களில் நோன்பு மிக முக்கியமானதாகும். ரமலான் மாதத்தில் கடமையாக்கப்பட்ட நோன்பு மற்றும் பல சுன்னத்தான நோன்புகளும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நோன்பை நோற்பதன் மூலமாக ஒரு முஸ்லிமிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இறையச்சம் பெறுதல் இறைநம்பிக்கை கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது […]

09) துஆக்களின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும் (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!) (அல்குர்ஆன்: 2:186) ➚ இஸ்லாமிய வணக்கங்களில் மிகவும் முக்கியமானதும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்கும் உரிய வணக்கம் பிரார்த்தனை (துஆ) ஆகும். ஒரு இஸ்லாமியன் தன் வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் கேட்க வேண்டிய துஆக்கள் பற்றியும் அவற்றின் ஒழுங்குகள் […]

08) திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

உமது மனதிற்குள் பணிவுடனும், அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமின்றியும் உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் நினைவு கூர்வீராக. அலட்சியும் செய்வோறுள் ஒருவராக ஆகிவிடாதீர். (அல்குர்ஆன்: 7:205) ➚ மனிதனையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காக அன்றி படைக்க வில்லை. என்று இறைவன் கூறுகிறான். எனவே இஸ்லாமியர்களுக்கு இறையச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அதிகமதிகம் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கங்களை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் ஒன்று தான் திக்ருகள். காலையில் எழுந்தவுடன் ஓதும் திக்ருகள், இரவில் படுக்கச் செல்லும் போது […]

07) ஜனாஸாவின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஒரு குறிப்பிட்ட வாழ்நாளை ஏற்படுத்தியுள்ளான். அவனது காலக்கெடு வந்து விட்டால் மனிதன் மரணத்தைத் தழுவுகின்றான். அவ்வாறு இறந்தவர்களை மார்க்க அடிப்படையில் எவ்வாறு நல்லடக்கம் செய்வது என்பது உள்ளிட்ட சட்டங்களை இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ஆனால் ஜனாஸாக்கள் தொடர்பாக மார்க்கத்தில் இல்லாத பல பித்அத்தான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும், பிற மதக்கலச்சாரங்களையும் இஸ்லாமியர்களில் சிலர் கடைபிடித்து வருகின்றனர். ஜனாஸாவின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள் : »இறந்தவரைக் குளிப்பாட்டும் போது நெற்றியில் சந்தனம் அல்லது நறுமண பொருட்களால் எழுதுதல். […]

03) விபரீதங்களும் தீர்வுகளும்

வட்டி என்றால் என்ன? வட்டி குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஹலாலான தொழில் எது? ஹரமான தொழில் எது? என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். நபிமொழிகளை படிக்கும் போது வட்டி இரண்டு வகைப்படும் என்பதை அறியலாம். ஒரே இனத்தைச் சார்ந்த பொருட்களில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் போது அந்த கொடுக்கல் வாங்கல் சம அளவில் இருக்க வேண்டும். கூடுதல் குறைவுடன் இருக்கக்கூடாது. உதாரணமாக மட்டமான இரண்டு கிலோ […]

02) வட்டிக்கு எதிரான எச்சரிக்கை

வட்டி வாங்குவது ஹராம் திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வட்டியின் மூலம் சம்பாதித்து வந்தனர். இதை அல்லாஹ் தடைசெய்து வசனங்களை இறக்கினான். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக்  கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:275) ➚ ஆயிஷா (ரலி) […]

01) முன்னுரை

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற காரியங்களை முற்றிலுமாக தடைசெய்யக்கூடிய அற்புதமான மார்க்கம். மனிதனை துன்புறுத்துகின்ற அனைத்து பாவங்களும் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் காரணமாக இருக்கின்றன. மனிதன் தன்னுடைய சுயநலத்தாலும் குறை மதியினாலும் இது போன்ற பாவங்களை துணிந்து செய்யக்கூடியவனாக இருக்கின்றான். இத்தகைய பாவங்களில் வட்டி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வட்டி மிகப்பெரிய பொருளதார சுரண்டலாகவும் மோசடியாகவும் இருப்பதால் இஸ்லாம் இதை முழுவதுமாக தடைசெய்துள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இது சாதாரண வணிகம் என்று கூறி இதைத் […]

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும். இந்த விதி ஏன்? எதற்கு? ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும். “புகை […]

33) திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம்

மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும். வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் கொள்வதாகும். இன்று ஏழை முதல் […]

44) குடும்பவியல் சட்டங்களின் சுருக்கம்

திருமணச் சட்டங்கள் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் […]

43) தாம்பத்தியத்திற்குத் தடையா?

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும். பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர். இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட நேரம் என்றும், […]

42) அனுமதிக்கப்பட்ட பொய்கள்

நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது. வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் […]

41) கொஞ்சி விளையாடி…

சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது. வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம். நியாயத்தைப் பேசும்போது கூட, மனைவி […]

40) மாமியார் மருமகள் உறவு

இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ என்று நான் ஆயிஷா […]

39) வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்

குடும்பத்தில் பெண்கள் ஒரேயடியாக வேலை வேலை என்று இருந்தால் அதுவே மனச் சோர்வை ஏற்படுத்தக் கூடும். அவ்வப்போது ரிலாக்ஸாக வெளியிடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வர வேண்டும். பூங்காவுக்குச் செல்வது, சில நேரங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் பெண்களின் மனதிற்கு சந்தோஷத்தையும் குடும்ப உறவில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பையும் பெற்றுத்தரும். மார்க்க வரம்புகளை மீறாத வகையில் கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பார்க்கலாம்; பீச்சுக்குச் செல்லலாம். இதற்கு ஆண்களுக்கு […]

38) பெண்கள் விருந்து பரிமாறலாமா?

திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனைவி தன்னை மாற்றிக் கொண்டால்தான் தம்பதிகள் இருவரும் உளப்பூர்வமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும். அதேபோன்று திருமணம் முடிக்கும் போது ஏழ்மையாக இருந்து, பின்னர் செல்வந்தராக கணவர் மாறினாலும் நமக்குத்தானே அவைகளும் கிடைக்கும் என்று பெண்கள் […]

37) கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். […]

36) பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை […]

35) பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

நிர்வாகத் தலைமைப் பொறுப்பும், பொருளாதாரப் பொறுப்பும் ஆண்களையே சார்ந்துள்ளது என்பதை இதுவரை குடும்பவியலில் பார்ததுள்ளோம். அடுத்ததாக இஸ்லாமியக் குடும்பவியலில் பெண்களின் முக்கிய பொறுப்புக்கள் குறித்து பார்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் எப்படியிருக்க வேண்டும்? வீட்டில் பொறுப்புக்கள் என்ன? வெளியில் எப்படி இருக்க வேண்டும்? அதேபோன்று மாமனார் மாமியாருக்கு வேலை பார்ப்பதைப் பாரமாக நினைப்பது சரியா? என்பன போன்ற பல விஷயங்களை இந்தத் தலைப்பின் கீழ் பார்க்கப் போகிறோம். பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல் பெண்கள் வெளியிடங்களில் மக்கள் பார்வையற்ற […]

34) விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக, இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் […]

33) மஹர் ஒரு கட்டாயக் கடமை

மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! […]

32) மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை. மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். […]

31) பணம் மட்டும் தான் வரதட்சணையா?

வரதட்சணைக் கொடுமையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத் திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப் பார்க்கிறோம். பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான் வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது […]

30) பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள். ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல! வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தனது […]

29) பெண்களின் உரிமைகள்

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வரு வதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன. நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை. அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த பொருளா […]

28) பெண்களின் பொறுப்புகள்

குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள். முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்கும் போது, “நீ உண்ணும் போது அவளுக்கும் […]

27) குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்களைப் பார்த்து வருகிறோம். பெண்கள் வேலைக்குச் செல்வதால் பெண்களுக்குப் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதுடன் ஆண்களின் வேலை பாதிப்பதாகவும் கள ஆய்வு சொல்கிறது. ஆண்களை மட்டும் வேலைக்குச் சேர்த்தால் போட்டி போட்டுக் கொண்டு வேலை நடக்கிறது. அதுவே பெண்களுடன் வேலை செய்யும் ஆண்கள், வேலை செய்வதில் காட்டும் அக்கறையை விட, தன்னுடன் வேலைக்கு வந்த பெண்களின் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது ஆண்களைத் திசை திருப்புகின்ற காரியமாக பெண் […]

26) ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்

இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம். குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும் கொடுத்துவிடக் கூடாது. அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் […]

25) காட்சிப் பொருளாகும் கன்னியர்

அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களில் பாதி பேரைத் தான் வேலை பார்ப்பதற் கென்று சேர்க்கிறார்கள். இன்னொரு பாதி பெண்களைச் சேர்ப்பது அவர்களைக் காட்டி ஆள் பிடிப்பதற்குத் தான். வேலை பார்க்கும் இடத்தில் ஆண்களை உட்கார வைத்தால் ஆண்கள் கூட்டம் வராது. பெண்களை மேக்கப் போட்டு உட்கார வைத்து விட்டால் அவளிடம் வழிவதற்காக வருகிறவர்கள் அதிகம் பேர் உள்ளனர். வருகின்ற வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத்தான் பெண்களை வேலைக்கு வைக்கிறார்கள். அப்படியெனில் பெண்களை, ஆண்கள் ரசிக்கும் போகப் பொருளாக ஆக்கிவிட்டனர் என்பது […]

24) பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல […]

23) பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

இதுவரை ஆண்களைப் பற்றியும் அவர்கள் மனைவிமார்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பார்த்துள்ளோம். அதாவது ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்து பவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனை களைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் […]

22) எல்லை மீறாதீர்…

இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் பெண்களின் பலவீனங்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் அவர்களது இயற்கைத் தன்மைகளையும் ஆண்கள் புரிந்துகொண்டு, முடிந்தளவுக்கு அவர்களை மன்னித்து அரவணைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களை அரவணைத்துச் சென்றுள்ளார்கள் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இப்படிப் பெண்களை ஆண்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்வதைப் பெண்களும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நாம் வேண்டுமென்றே கணவன்மார் களிடத்தில் வம்புச் சண்டை வளர்க்கலாம், இதற்கு ஆயிஷா […]

Next Page » « Previous Page