
அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம். அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம். அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் […]