
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், இவர் […]