Author: Kamila

26) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா قال الغزالي: وفي خبر آخر: “من غش أمتي فعليه لعنة الله والملائكة والناس أجمعين، قيل يا رسول الله، وما غش أمتك، قال: أن يبتدع بدعة يحمل الناس عليها“. قال العراقي: أخرجه الدارقطني في الأفراد من حديث أنس بسند ضعيف جدا “எனது சமுதாயத்தில் யார் ஏமாற்றுகின்றாரோ அவர் மீது […]

25) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

“(அடுத்தவர் பேச்சை) செவியுறு வதை விட (தான்) பேசுவதையே அதிகம் விரும்புவது ஆலிமின் குழப்பமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி), இந்தச் செய்தியை முஆத் (ரலி)யே சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார். இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை, ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது. அபூ நயீம், இப்னுல் ஜவ்ஸி ஆகியோர் இந்த ஹதீஸை தங்களது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட […]

17) எத்தி வைக்கும் யுக்தி – 3

செல்லும் வழியெங்கும் ஏகத்துவப் பிரச்சாரம் நமது பிரச்சாரங்களுக்குத் தடையாக இருக்கின்ற பயிற்சின்மையைப் பற்றி கடந்த இதழில் கண்டோம். மேலும் பேச்சாளர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதைப் பற்றி இவ்விதழில் நாம் காண்போம். இன்பத்திலும், துன்பத்திலும் நம்மால் இயன்றளவு எத்திவைப்போம் என்ற உறுதிப்பாட்டை நாம் எடுக்க வேண்டும் என்பதற்கு கீழ்க் கண்ட ஹதீஸ்கள் சிறந்த முன்னுதாரணங்களாகும். سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ […]

24) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

பொய்யான ஹதீஸ்: 6 “அல்லாஹ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மக்களிடம் கோபம் கொள்கின்ற வரையிலும், குர்ஆன் வசனங்களுக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் இருக்கின்றன என்று புரிகின்ற வரையிலும் ஒர் அடியான் மார்க்கத்தை முழுமையாக விளங்கிய வனாக ஆவதில்லை” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை “கல்வியின் சிறப்பு’ என்ற பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வந்துள்ளார். “மக்கள் அனைவரிடமும் கோபம் கொள்கின்ற வரை” என்ற கூடுதல் வார்த்தையுடன் இதே செய்தி பதிவாகியுள்ளது. “அவரிடத்தில் அவரை விடவும் […]

இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி! முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி! அவர் அல்லாஹ் வுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விட்டால் அவர் நிச்சயமாக நிரந்தர நரகத்தைத் தான் அடைவார். அந்த நரகத்திலிருந்து அவர் ஒரு போதும் இவ்வுலகத்திற்குத் திரும்ப வரவே முடியாது. அப்படிப்பட்ட நரகத்திலிருந்து அவரை எப்பாடு பட்டாயினும் காப்பாற்றியாக வேண்டும். வெள்ள நிவாரணத்தில் நாம் காட்டிய அவசரத்தை விட அதிகமான அவசரத்தை நாம் இதில் காட்டியாக […]

23) இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா இதுவரை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக்கூடாது என்று விரிவாகப் பார்த்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏற்படுகின்ற பயங்கர விளைவுகள் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் பார்த்தோம். இந்த அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் அள்ளிக் கொட்டி யிருக்கின்ற பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட, அறிவிப்பாளர் தொடரில்லாத சில ஹதீஸ்களைப் பார்ப்போம். பொய்யான ஹதீஸ் – 1 நான் […]

பொய்த்துப் போன பைபிளின் முன்னறிவிப்புகளும், உண்மையில் நிலைக்கும் குர்ஆனும்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த உரையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் கிறித்தவ மத போதகர்களுடன் சென்னையில் ஒரு விவாதத்தைச் சந்தித்தது. பைபிள் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா என்பது விவாதத்தின் தலைப்புகள். அல்லாஹ்வின் அருளால் குர்ஆன் இறைவேதமே என்பதும், பைபிள் இறைவேதமே அல்ல என்பதும் அடுக்கடுக்கான பல சான்றுகளுடன் […]

22) பலவீனமான ஹதீஸைப் பின்பற்றி அமல் செய்யலாமா?

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற தலைப்பிட்டு விட்டு, பலவீனமான ஹதீஸ் பற்றிய ஆய்வுக்குள் நூலாசிரியர் மக்ராவி சென்றதற்குக் காரணம், இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அமல்களின் சிறப்பு பற்றிய ஹதீஸ்களைப் பொறுத்தவரை அது ஆதாரப்பூர்வமான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்று பார்க்கத் தேவையில்லை, அதைப் பின்பற்றி அமல் செய்யலாம் என்ற கருத்து ஆரம்ப காலம் முதல் பரவலாக இருந்து வருகின்றது. […]

இணைவைப்பை துடைத்தெறிவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஷிர்க் எனும் இணை வைப்பு சம்பந்தமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இது குறித்து கணக்கில்லா செய்திகள் இருக்கின்றன. இருப்பினும், இன்னும் நிறைய மக்கள் இதனை முழுமையாக அறியாமலும் சரியாக விளங்காமலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இணை வைப்பு குறித்து […]

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு

இந்துத்துவ பாஜக ஆளுகின்ற அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது. பீகாரில் தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ, பாசிச பாஜகவுக்கு இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இதைப் பற்றி மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேசும் போது “யாராவது தெருவில் போகின்றவர் நாயின் மீது கல்லெறிந்தால் அதற்கு மத்திய அரசு […]

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம் இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது. விழுப்புரம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோயில் தேர் செல்கின்ற பாதை பற்றி இரு பிரிவினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் தேர் ஓட்டுகிறவர்களும் ஹிந்துக்கள், அதற்குத் தீ வைத்த வர்களும் ஹிந்துக்கள். இது […]

21) பலவீனமான ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் முல்லாக்கள் அல்ல! முட்டாள்கள்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது, அவற்றின்படி அமல் செய்வது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி மக்ராவி குறிப்பிட்ட விமர்சனத்தைக் கடந்த இதழில் கண்டோம். ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை இங்கு வெளியிட விருந்த வேளையில், அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலில் இடம்பெற்ற அல்பானி அவர்களின் முன்னுரை கிடைத்தது. அந்த முன்னுரை, ஸஹீஹ் […]

20) ராபிளிய்யாவின் தகிய்யா கொள்கை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா ராபிளிய்யாக்களின் மார்க்கம் “தகிய்யா’ ஆகும். அதாவது தங்களுடைய கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது தங்களது உண்மையான கொள்கையை மறைத்து விடுவார்கள். இவர்களது பிரச்சாரத்தை ஏற்று மக்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது தங்களது உண்மையான கொள்கையை வெளியிடுவார்கள். இதற்குப் பெயர் தான் தகிய்யா எனப்படுகின்றது. இவ்வாறு பொய் சொல்லி பிரச்சாரம் செய்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கையும் நாசக் கொள்கையுமாகும். […]

ஸைபுத்தீன் ராபிளிக்கு மந்திரிகளே முன்மாதிரி

தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு ஆலிம்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஸைபுத்தீன் ராபிளி சொன்ன பொய்யைத் தவிடுபொடியாக்கும் வகையில், இதோ இத்தனை ஆலிம்கள் சத்தியத்தில் சங்கமித்திருக்கிறார்கள்; இன்னும் ஆலிம்கள் வந்து கொண்டிருக் கிறார்கள் என்று பதிலடி கொடுத்தோம். ஆலிம்களின் இந்த சங்கம நிகழ்ச்சி, தவ்ஹீதுக் கொள்கையின் வளர்ச்சியை யும் எழுச்சியையும் தமிழகமெங்கும் பறைசாற்றியது. இதற்குப் பரேலவிகளின் அசத்தியக் கூடாரத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இக்கால கட்டத்திலும் இதற்கு முன்னரும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கை யுடையவர்கள் என்ற […]

பரேலவிகளுக்கு தொழுகை ஒரு யோகாதான்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது. பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும். سَأَصْرِفُ عَنْ ءَايَـٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن […]

பாஜகவின் பசுநேசம் ஒரு பகல்வேஷம்

புகை உயிருக்குப் பகை, புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற எச்சரிக்கைகளுக்கு இந்தியாவில் ஒன்றும் குறைச்சலில்லை. சிகரெட் பாக்கெட்டுகள் இந்த எச்சரிக்கை மணியைத் தாங்கித் தான் வருகின்றன. ஆனால் புகைப்பவர்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. 2011ல் வெளியான ஒரு புள்ளி விபரம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதன் காரணமாக உயிரிழப்பதாகக் கூறுகின்றது. இது புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும். மதுவினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கொண்டால் அதற்கு […]

17) நபி மீது பொய்! நரகமே கூலி!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா பலவீனமான ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இஹ்யாவில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் சொல்வதற்கு நரகமே கூலி என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் கண்டோம். நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்றும், அதற்கு மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை என்றும் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றை இப்போது பார்ப்போம். நபி […]

பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலுக்கு ஜனவரி 2015 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 60 பேர் பலியாகியுள்ளார்கள். நாடு முழுவதிலும் இதுவரை 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 925 பேரை இந்த நோய் தனது பசிக்கு இரையாக்கியுள்ளது. அண்டை மாநிலமான ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு வருகையளித்த பன்றிக் […]

15) அறிவிலிகள் கூறும் அகமிய ஞானம்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி தமிழில்: எம். ஷம்சுல்லுஹா ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்கள், விஷயங்களின் ரகசியங்கள் அப்படியே காட்சியளிக்கும் போது தான் செவிவழிச் செய்தியான ஹதீஸை ஏற்பார்கள். இல்லையென்றால் அதை ஏற்க மாட்டார்கள். இப்படி ஒரு சாரார் இருப்பதாக கஸ்ஸாலி வாதிடுகின்றார். இந்த சாராரின் இத்தகைய சிந்தனை இறை மறுப்பாகும் என ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சுருக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். […]

கொலைகாரர்களாகும் குறிகாரர்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 2012ஆம் ஆண்டு, ஜூன் 19 அன்று சவூதியிலுள்ள நஜ்ரான் என்ற ஊரில், முரீஃபின் அலீ பின் ஈஸா என்பவர் மக்கள் முன்னிலையில் தலை சீவப்பட்டு கொல்லப்படுகின்றார். இவர் செய்த குற்றம் என்ன? பில்லி, சூனியம், ஜோதிடத் தொழில் செய்தது தான் அவருடைய குற்றம். அத்துடன் இரண்டு பெண்களுடன் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சேர்த்து கணக்குத் தீர்க்கும் விதமாக அவருடய கழுத்து வெட்டப்பட்டது. காவல்துறை கைது செய்த மாத்திரத்தில் தண்டனை அளிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு […]

குழந்தைகளைக் கொன்ற கொடிய பாவிகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாநிலம், பெஷாவர் நகரில் வார்சாக் சாலையில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கூடத்தில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெஹ்ரீக் தாலிபான் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கொலை வெறியர்கள், ராணுவ உடையில் மதில் ஏறி இந்தப் பள்ளியின் பின்புறமாக நுழைந்தனர். அப்போது பள்ளியின் பெரிய வளாகத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் முதலுதவிக்கு வேலையே இல்லை எனுமளவுக்கு, உள்ளே நுழைந்த காட்டுமிராண்டிகள் குழந்தைகள் […]

19) அலீயின் சிறப்பை ஏற்க மறுத்த யூனூஸ் நபி ஆழ்கடலில் சிறை வைப்பு

நபிமார்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள் وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (அல்குர்ஆன்: 25:74)➚ இது திருக்குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதியாகும். ‘உன்னை அஞ்சுவோருக்கு எங்களை முன்னோடியாகவும் ஆக்குவாயாக!’ என்பது இதன் பொருள். இந்த வசனம் அபூ அப்தில்லாஹ்விடம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போது அவர், “எங்களை இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடிகளாக (இமாமாக) ஆக்குவாயாக என்று ஒரு பாரதூரமான விஷயத்தை முஸ்லிம்கள் கேட்கின்றார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார். “ரசூலுல்லாஹ்வின் பேரரே! இது எப்படி?” என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் وَاجْعَلْ […]

மன்னிக்கப்படாத பாவம்!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் தான் படைத்த படைப்புகளில் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான். எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற […]

ஸலாம் கூறுவதன் சிறப்பு

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும். இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற […]

அருள் மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும்-1

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்துவதற்காகவும், சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்துக் காட்டுவதற்காகவும் திருமறைக்குர்ஆன் அருளப்பட்டது. கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும், நிகழ்காலத்திற்கான தீர்வுகளையும், எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் திருமறைக் குர்ஆன் உள்ளடக்கியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், தூதுத்துவத்தின் அவசியத்தையும், மனித வாழ்விற்குத் தேவையான சட்டங்களையும், சொர்க்கம் பற்றிய நற்செய்திகளையும், நரகம் பற்றிய எச்சரிக்கைகளையும் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது. திருமறைக் குர்ஆனின் பெரும்பாலான வசனங்கள் மேற்கண்ட நோக்கத்திற்காகத்தான் […]

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும் அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான். பாவம் செய்வது, இறைவனுக்கு மாறு செய்வது மனித இயல்பு. உலகத்தில் அனைவரும் பாவம் செய்பவர்கள் தான். அல்லது செய்தவர்கள் தான். ஆனால் அவ்வாறு பாவம் செய்பவர்களில் சிறந்தவர்களும் புத்திசாலிகளும் யாரென்றால் தன் பாவங்களை நினைத்து வருந்தி திருந்தி பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்விடம் மீளுபவர்கள் தான். பாவம் பண்ண பிறகு […]

இணைவைப்பால் ஏற்படக் கூடிய விளைவுகள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகலாவிய ரீதியில் பெரும்பான்மை மக்கள் இறைநிராகரிப்பாளர்கள் அல்லது இணைவைப்பாளர்களாகவே இருக்கின்றார்கள்! உலக மக்கள் தொகையில் மதரீதியான கணிப்பில் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருப்பதாக அவர்கள் சார்ந்த ஆய்வுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக கிறிஸ்தவர்களிடம் மதரீதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு குறைவாக காணப்பட்டாலும் டிசம்பர் மாதத்தின் 25ஆம் திகதி மட்டுமாவது உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தேவனுக்கு மகன் இருக்கின்றான்’ என்ற கொள்கையை பிரதிபளிக்கும் வகையில் ஒரே குரலில், ‘எல்லாம் வல்ல இறைவனுக்கு குமாரன் […]

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் […]

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எதை முதன்மையாக கொள்ள வேண்டும் ? நமது அழைப்பும் உழைப்பும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்தக் உரையின் மூலம் நாம் அறிய இருக்கின்றோம். இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லீம்களில் பலர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை ஜாஹிலிய்யா (அறியாமை) காலத்து முஷ்ரிக்குகள் அறிந்த அளவிற்கு கூட அறியவில்லை. மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் ஷிர்க் (இணைவைத்தல்) என்ற […]

19) ஸைபுத்தீன் ரஷாதி சரியான ராபிளியே!

ராபிளிய்யாக்கள் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்ட செய்தியைக் கடந்த இதழில் கண்டோம். அவர்கள் மேலும் கூறுவதாவது: எங்களுடைய மார்க்கம் தகிய்யா ஆகும். அதாவது தங்களது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது, உண்மைக் கொள்கையை மறைத்துவிடுவது. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது உண்மையை வெளியிடுவதற்குப் பெயர் தான் தகிய்யா. இவ்வாறு பொய் சொல்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கை, நாசமான கொள்கையாகும். இந்த […]

18) வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள்

வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் கூறிய செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இஸ்லாத்தில் புகுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய விரோதிகளின் மாபெரும் சதித் திட்டமாகும். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக இந்தச் சமுதாயத்தின் சத்திய ஆலிம்கள், உண்மையான நல்லடியார்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அடையாளம் காட்டினார்கள். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக […]

16) அல்லாஹ்வை விட அபூயஸீத் சிறந்தவராம்?

கஸ்ஸாலியின் அறியாமை இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்த்து வருகிறோம். அதில் அறிஞர்கள் வழங்கிய அதிகமான மார்க்கத் தீர்ப்புகள், ஆன்மீகம், மறைமுக ஞானம் என்ற பெயரில் இஹ்யாவில் இடம்பெற்றுள்ள அபத்தங்கள் பற்றி அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் பார்த்தோம். இப்போது, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான அடுத்த காரணத்தைப் பார்ப்போம். இஹ்யாவில் அடங்கியிருக்கும் தீய நச்சுக் கருத்துக்கள் இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிரூட்டுதல்) என்ற இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் குர்ஆன், […]

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா? பதில்: பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனினும் கடிதங்களின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக எழுதியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ […]

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? பதில்: நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ […]

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது போல் வேண்டும் என்று கேட்பது சரியா? பதில்: நமக்குத் தெரியாத விஷயங்களில் இது போல் கேட்பது தான் கூடாது. மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் யாருக்கு இறைவன் கொடுத்தது மிகச் சிற்ந்தது என்று நமக்குத் தெரிகின்றதோ அது போல் எனக்கும் தா என்று கேட்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. […]

மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா?

பதில்: இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது. حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمْ […]

பால்ய விவாகம் கூடுமா?

சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா? பதில்: ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன. அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், பால்ய விவாகத்தை […]

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் […]

இரகசியமாகத் திருமணம் செய்யலாமா?

இரகசியமாகத் திருமணம் செய்யலாமா? வலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா? திருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா? பதில்: செலவு குறைந்த, […]

அக்கா மகளை மணந்திருந்தால்?

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது? பதில்: உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், […]

இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்?

அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்? பதில்: ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் […]

வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா?

ஒரு இஸ்லாமியப் பெண் வரதட்சணை வாங்கும் ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படிச் செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன? பதில்: வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும். வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் […]

14) இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

இஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம். ஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, “அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்’ […]

13) கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி பல்வேறு மார்க்க அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஜூலை இதழில் ஹாபிழ் தஹபீ அவர்களின் விமர்சனத்தையும், விழிப்பூட்டும் எச்சரிக்கையையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியருல் அஃலாமின் நுபலாவில் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி பல்வேறு அறிஞர்களின் கண்டனத்திற்கும், கடிந்துரைக்கும் உள்ளானார். விதியைப் பற்றிய அவரது அறியாமைக் கருத்தும் கண்டனக் கணைகளுக்கு இலக்கானது. “விதியைப் பற்றி சில ரகசியங்கள் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்பது […]

12) அல்லாஹ்வின் ஆற்றலுக்கு அணை போடும் கஸ்ஸாலி

அறிவுக்கடல் கஸ்ஸாலி என்று தமிழக ஆலிம்களில் பாராட்டப்படுகின்ற கஸ்ஸாலி ஷியா சிந்தனைவாதி என்பதைக் கடந்த இதழில் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டோம். இவர் அறிவுக்கடல் அல்ல! அறியாமைக் கடல் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைப் பார்த்து இருக்கிறோம். மார்க்கம் என்ற பெயரில் அறியாமைக் களத்தில் நின்று இவர் ஆடிய ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல! சகிக்க முடியாத ஆட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹீக்கு மாற்றாக, தவமிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தனி வஹீ உதிக்கும் என்ற இவரது கதையளப்பை […]

11) உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி அறிஞர்களின் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் சாய்வு, சார்பு சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அலாதியான அலசல்களையும் பார்த்து வருகிறோம். கனவில் கஸ்ஸாலியின் நூல்களைக் கண்டேன். அவரது நூல்களின் எழுத்துக்கள் படங்களாகக் காட்சியளித்தன என்று அபூநஸ்ர் அஹ்மத் பின் முஹம்மது பின் அப்துல்காதிர் என்பார் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஆமிரில் அப்தரீ விமர்சனம் செய்துள்ளார். இதை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரில் தெரிவிக்கின்றார். கஸ்ஸாலியின் நூல்களுக்கு மதிப்பேற்றுவதற்காக மலிவான இந்தக் கனவுக் கதைகளை அடித்து […]

10) குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

கஸ்ஸாலியின் இஹ்யாவைப் பற்றியும், அவரது நச்சுக் கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்கள் பற்றியும் பல்வேறு நூற்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை நாம் இதுவரை கண்டோம். “குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது; ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு நம்மைத் தடுத்துவிடும்’ என்று கஸ்ஸாலி கூறியதாக காழி அப்துல்லாஹ் என்பார் கூறியதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அவர் கூறுகின்ற இந்தச் செய்தியை நேரடியாக இஹ்யாவிலிருந்து பார்ப்போம். யார் அல்லாஹ்வுக்காக ஆகி விட்டாரோ அவருக்காக […]

9) காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி

இஹ்யாவை பல்வேறு இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இமாம் மாலிக் அவர்கள் மக்களிடம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது, இதற்கு இதுதான் விளக்கம், இதற்கு இதுதான் கருத்து, இதைத் தாண்டி வேறு விளக்கமில்லை என்று சொல்லாமல் மிகப் பெரிய பேணுதலையும் பாதுகாப்பையும் மேற்கொண்டார்கள். இதை அவரது ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். ஆனால் […]

8) பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலா என்ற நூலில் எழுதியிருந்ததைக் கடந்த இதழில் கண்டோம். ஹாபிழ் தஹபீ அவர்களின் பிரம்மாண்டமான, பிரமாதமான இந்தக் குறிப்பு, முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான இப்னு தாஷிபீன் அவர்கள் சென்ற நேரிய பாதையை மிகத் தெளிவாக விளக்குகின்ற வரலாற்றுப் பதிவாகும். இறையியல், தத்துவவியல் மற்றும் சாபத்திற்கும் கோபத்திற்கும் இலக்கான சூபிஸக் கோட்பாடு போன்றவை எங்கிருந்து வந்தாலும் அந்த பித்அத் […]

7) மனிதனைக் கடவுளாக்கும் மடமைக் கொள்கை

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கஸ்ஸாலியின் “அல்மன்னூன் பிஹா அலா கைரி அஹ்லிஹா’ என்ற நூலை விமர்சனம் செய்யும் போது இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது: “தன் சக்திக்கு ஏற்ப மனிதன், இறைநிலைக்கு ஒப்பாவது தான் தத்துவவியல்” என்று சூபிகள் கூறுவது தான் இதுவரை நாம் கண்ட விஷயங்களிலேயே மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். உண்மை, தனித்தன்மை, செயல்பாடுகளில் அல்லாஹ்வுக்கு அடியானை ஒப்பாக்குகின்ற சூபிகளின் இந்த நிலைப்பாட்டில் ஒரு கூட்டம் அவர்களுடன் […]

Next Page »