Author: Trichy Farook

07) ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை

ஆன்மீகத் தலமையாலும் பலனடையவில்லை ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி […]

06) புகழுக்கு ஆசைப்பட்டார்களா

புகழுக்கு ஆசைப்பட்டார்களா எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா? எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பணம் காசுகள் விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி […]

05) சுகபோகங்களில் திளைக்கவில்லை

சுகபோகங்களில் திளைக்கவில்லை உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்” என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். (புகாரி: 5386, 5415) கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக […]

04) உடுத்தி மகிழவில்லை

உடுத்தி மகிழவில்லை அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன. மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார். (புகாரி: 3108, 5818) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு […]

03) உண்டு சுகிக்கவில்லை

உண்டு சுகிக்கவில்லை மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். ‘மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை’ என்பதற்கு அவர்களின் […]

02) வரலாற்றுச் சுருக்கம்

மாமனிதர் நபிகள் நாயகம் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர். இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ (the hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (micheal harte) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ […]

01) முன்னுரை

பதிப்புரை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது […]

12) உண்மையான காரணங்கள் என்ன?

உண்மையான காரணங்கள் என்ன அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை இனி காண்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சராசரி மனிதர்கலில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித் தூதர்எனப் பிரகடனப்படுத்தினார்கள். தம்மைத் தூதர் எனப் பிரகடனம் செய்தது முதல் உலக முடிவு நாள் […]

11) ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள்

ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள் இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும். நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபிய்யா பின்து ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள். இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்‌ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி […]

10) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும். உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ழா என்பதாகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் காஃபிர்களின் தலைவராகத் […]

09) ஜுவைரியா (ரலி) அவர்கள்

ஜுவைரியா (ரலி) அவர்கள் பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர். இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் […]

08) உம்மு ஸலமா (ரலி)

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும் இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர். திரும்பவும் மதீனாவுக்கு […]

07) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மணைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காமுகராக சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர். இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் […]

06) ஸைனப் பின்த் குஸைமா (ரலி)

ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் […]

05) ஹப்ஸா (ரலி) அவர்கள்

ஹப்ஸா (ரலி) அவர்கள் ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர். அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய […]

04) ஆயிஷா (ரலி) அவர்கள்

3 ஆயிஷா (ரலி) அவர்கள் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது. ஆயிஷா […]

03) ஸவ்தா (ரலி)

2 ஸவ்தா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம். ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும் அவர்களின் மணைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். […]

02) கதீஜா (ரலி) அவர்கள்

1- கதீஜா (ரலி) அவர்கள் இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. […]

01) முன்னுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? –  P.Janul Abideen   ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்? ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை […]

ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி

பற்பல மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஒவ்வொருவரும் ஒரு தொழில் செய்து வருகின்றனர். அதில் மக்களை ஏய்க்கும் ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.  ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி என்று எப்படியெல்லாம் விதவிதமாக மக்களை ஏமாற்றினாலும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை.  கடந்த மாதம் சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் நடந்த இது போன்ற ஒரு கூத்தை செய்தித்தாள்களில் படித்துவிட்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. அந்த பரபரப்பான செய்தி இதோ: செல்வம் பெருக வேண்டி […]

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா?

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா (இக்கேள்வி கடாபி கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது) கேள்வி: அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்பட்டவர் கடாஃபி. பேச்சிலேயே அமெரிக்காவை மிரட்டியவரும் கூட. தற்போது கடாபியின் எதிர்ப்புப் படைகளிடம் ஒட்டு மொத்த லிபியாவும் கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும். மேலும் கடாஃபி சர்வாதிகார முறையில்தான் ஆட்சி செய்தாரா? விரிவான விளக்கம் தரவும். பதில் ? பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட […]

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும், ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார். அமெரிக்கர்களின் அப்பன் யார்?: அமெரிக்கர்களின் அப்பன் யார்? என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து […]

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் தடுக்க வழி என்ன?

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன? சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும். வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் […]

குழந்தைகளிடம் சிறப்பு ஜெபம் செய்து சாதனை!

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!! தற்போது அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிள் பதிப்பு “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்பது நாம் அனைவரும் அறிந்ததே! “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்ற இந்த வெளியீடு இங்கிலாந்தை ஆண்ட “கிங் ஜேம்ஸ்” என்ற மன்னரால்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. கிங் ஜேம்ஸ் என்ற அந்த மன்னர் ஒரு சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட […]

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!

சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில், அமெரிக்கா ஒரு கோழை நாடு. அந்நாட்டிலுள்ளவர்கள் உயிருக்குப் பயந்த கோழைகள் என்று குறிப்பிட்டார். அதை உண்மைப்படுத்தும் முகமாக, நாம் போராட்டம் நடத்திய தினத்தன்று அமெரிக்கத் தூதரகம் ஓர் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கான நூலகம் இயங்காது […]

அல்லாஹ்வின் சட்டம் – நிலை நாட்டப்பட்ட நீதி

ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா…. பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, […]

பொது சிவில் சட்டம் ஓர் விரிவான ஆய்வு

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், “பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995 ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு […]

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல் விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது.   இதை ஏற்று தமிழக அரசு முஸ்லிம்களை புண்படுத்தக்கூடிய விதத்திலான காட்சி அமைப்புகள் கொண்ட அந்தப் படத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே அதை […]

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டணை

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்துள்ளது குறித்து அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். சவூதி அரசின் இந்தச் செயல் சரியானதா? பதில் நமது நாட்டில் உள்ள அதிகமான அறிவுஜீவிகளுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று நாம் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வகையில் இவர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. தனக்குத்தானே முரண்படுவதுதான் பைத்தியக்காரத்தனத்தனத்திற்கான ஆரம்ப அறிகுறி. இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது. டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் […]

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்! 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை. பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி, காஷ்மீரை சேர்ந்த […]

தீ மிதிக்க இன்சூரன்ஸ் தமிழக அரசு சிந்திக்குமா?

தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள் தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை. ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு பக்கச்சார்பாகவும், அறிவுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு : தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : […]

காஷ்மீரில் கோவில்கள் இடிக்கப்பட்டனவா?

இந்தியாவின் கோயபல்சுகள் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன் இந்தியாவை ஹிந்து […]

கேள்வி கேட்பது குற்றமா?

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் […]

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?

முன்னுரை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை. அதனை இந்த சிறு உரையில் காண்போம்! அபூஹுரைரா (ரலி) تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا فَكَانَ هُوَ […]

கை கழுவுதலை கை கழுவாதீர்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானுடன் இணைத்து சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும். எனவே அப்படிப்பட்ட […]

நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!

முன்னுரை பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  1359- حَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ […]

ஸகாத் கொடுப்போம் – 3

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளையும், கொடுக்காதவர்களின் மறுமை தண்டணைகளையும் பார்க்க இருக்கிறோம். மறுமைக்கான டெபாஸிட்   وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த […]

ஸகாத் கொடுப்போம் – 5

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஸகாதின் சட்ட திட்டங்களை பார்க்க இருக்கிறோம். சட்டம் அறிவோம்! ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் நாம் அனைவரும் அறிவோம்.  ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்று தெரியும் நம்மில் பலர்,  ஜகாத்தை எப்படி கொடுப்பது? யாருக்கு கொடுப்பது என்பது […]

ஸகாத் கொடுப்போம் – 4

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஸகாத்  கொடுக்காதவர்களின் மறுமை தண்டனைகளை பார்க்க இருக்கிறோம். சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு […]

ஸகாத் கொடுப்போம் – 2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளை பார்க்க இருக்கிறோம். ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள் செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய […]

ஸகாத் கொடுப்போம் – 1

முன்னுரை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த தொடர் உரையில், 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம். ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு […]

முறையறிந்து ஸகாத் கொடுப்போம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் நாம் அனைவரும் அறிவோம். ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது இணை கற்பிப்பவர்களின் பண்பு என்று குர்ஆன் கூறுகிறது. இணை கற்பிப்பவர்களின் பண்பு …وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏ الَّذِيْنَ […]

சத்தியத்தை சொல்லும் முறைகள்

முன்னுரை அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குதல் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக் கோட்பாடாகும். இந்த சத்தியக் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். இறைவனால் அனுப்பபட்ட எல்லா இறைத்தூதர்களும் இந்தக் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ […]

தொழுகையில் தொடரும் நன்மைகள்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்? பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்தல் இதுபோன்ற […]

பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு […]

ஈராக் போர் வரலாறு

ஈராக் போர் வரலாறு 1991ஆம் ஆண்டு “அப்பன் புஷ்’ இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு “மகன் புஷ்’ ஆக்கிரமித்தான். சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் இராக்கில் நுழைந்தன. ஓர் இறையாண்மை மிக்க அரபு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்ல வேண்டுமாயின், அதுவும் நியாயமான காரணத்தை முன்னிட்டுச் செல்ல வேண்டுமாயின் அதற்கு […]

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை அரவணைப்பதாகும். அனாதைகள் […]

வெட்கம் அனுமதியும் தடையும்

முன்னுரை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது. ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், […]

உன்னுடைய ஏதிரியைத் தெரிந்து கொள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம் ஒவ்வொருவரிடமும் ஷைத்தான் இருக்கிறான். ஆனால்,  எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக, பேய் பிடித்ததாக, நோய் வருவதாக தவறாக நம்புகிறார்கள். ஷைத்தான் ஒருவரிடத்தில் […]

இடையூறுகளைத் தவிர்த்தல்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர் وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ سورة البقرة ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ […]

Next Page » « Previous Page