இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒரு தனித்துவமிக்க ஒரு தூதர் ஆவார்கள். ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது காலம் பூராவும் தஃவா களத்தில் தனித்தே நின்று போராடினார்கள். சொந்த ஊர் மக்கள் தீக்குண்டத்தைப் பரிசாக அளித்தார்கள். அதன் பின்னர் தனது மனைவியுடன் நாடு துறந்து செல்கின்றார்கள். அடைக்கலம் தேடிப் போன நாட்டில் அவர்களது மனைவி சாரா அம்மையாருக்கு […]