
இன்றைய நவீன உலகில் அறிவியலும் தொழிநுட்பமும் மாபெரும் வளர்ச்சி பெற்று, மனித வாழ்வில் மிகப் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை, பகுத்தறிவிற்கும் சுதந்திரமான சிந்தனைக்கும். ஆய்வு முயற்சிகளுக்கும். ஆராய்ச்சி வேட்கைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. இதனால், மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவினடியாய் எழுந்த விஞ்ஞான அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் தாக்கம் மதச் சார்பின்மை என்ற சித்தாந்தத்தைத் தோற்றுவித்து இறைநம்பிக்கை, விசுவாசம், ஒழுக்கப் […]