34) நவீன கலாச்சார கடன் அட்டைகள் (Credit Card)
நாகரீக வாழ்க்கையில் கௌரவத்தின் ஓர் அங்கமாக வங்கிகளின் கடன் அட்டைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. கடன் அட்டைகள் வைத்திருப்பது அந்தஸ்தில் உயர்நிலையில் இருப்பதாக வெளி உலகத்துக்கு காட்டிக் கொள்ளும் அடையாளமாக திகழ்கிறது.
ஆகையால் கடன் அட்டைகள் என்றால் என்ன? அதில் உள்ள வகைகள் என்னென்ன? அதில் உள்ள பயன் என்ன? தீமைகள் என்ன? இஸ்லாமிய பார்வையில் இது ஆகுமானதா? என்பதை நாம் விளக்க கடமை பட்டுள்ளோம்.
நாம் இங்கே நமக்கு தெரிந்த அளவை வைத்து அட்டைகளின் வகைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
Apr (Annual Percentage Rate) என்றால், நீங்கள் இந்த அட்டையை உங்கள் தினசரி தேவைக்காக உபயோகப்படுத்தும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி கட்ட தேவையில்லை. (குறைந்த பட்சம் 6 மாதம்) ஆனால் அவர்கள் குறிப்பிடும் Apr (Annual Percentage Rate) வைக் கட்ட வேண்டும் பெரும்பாலும் மிகச் சொற்பமான தொகையாக இவை இருக்கும்.
இதில் இன்னொரு வகை ஆடத APR on Balance Transfers, இதில் விஷேசம் என்ன வென்றால் இன்னொரு கடன் அட்டையில் இருக்கும் பேலன்ஸ் ஐ அதாவது நீங்கள் வேறு கடன் அட்டைகளில் செலுத்த வேண்டிய தொகையை இந்த அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் அந்த தொகைக்கு அவர்கள் குறிப்பிடும் காலம் வரை வட்டி கட்ட தேவையில்லை.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் காசோலைக்கும் இந்த மாதிரி வசதியை தருவார்கள். இந்த வசதியை பன்படுத்தி நீங்கள் உங்களின் Savings,Fixed deposit கணக்குகளுக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
2. Sky Miles அட்டைகள்
இந்த வகை அட்டைகள், நீங்கள் சேகரிக்கும் புள்ளிகளை பொறுத்து, இலவச விமான பயணம் போன்றவற்றை பெற்று தரும். இந்த வகை அட்டைகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்காது. வருடாந்திர கட்டணமும் இலவவசமாக கிடைக்காது. இருவருடாந்திர கட்டணம் இருக்கும். சில அட்டைகள் முதல் வருடம் மட்டும் இலவசமாக இருக்கும். அது போன்ற அட்டைகளை வாங்கி உபயோகித்த பின்னர் முதல் வருடம் முடிந்த உடன் கேனஸல் செய்து விடலாம்.
இந்த வகை அட்டையில் நீங்க உபயோகிக்ககும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கும் ஒரு புள்ளி, இரண்டு புள்ளி என்று அளிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை நீங்கள் அடைந்த பின்னர் அவர்கள் குறிப்பிடும் இலவச பொருட்களை உங்களின் புள்ளிகளை உபயோகித்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மாதிரியான அட்டைகளின் மூலம் நீங்கள் செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியை 5% 10% என்று திருப்பி கொடுப்பார்கள். இவ்வகை அட்டைகளை நீங்க பெரிய பெரிய பொருட்கள் வாங்க உபயோகித்தால் எ.கா கேமரா, டீ.வி போன்றவற்றை வாங்க உபயோகித்தால் பெரும் சேமிப்பாக இருக்கும்.
இது ஒரு வகையான டெபிட் கார்டு என்றே கூறலாம். முதன் முதலில் Credit History இல்லாதவர்கள் இங்கு வரும் பொழுது Credit History ஐ வளர்க்க இது போன்ற அட்டைகள் உபயோகித்து வளர்த்து கொள்ளலாம். இந்த வகை அட்டைகளில் முதலில் நீங்கள் ஒரு தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் நீங்க முன பணமாக கொடுத்த தொகைக்கு ஈடான அட்டையை கொடுப்பார்கள். நீங்க அதை கடன் அட்டை போல உபயோகித்து கொள்ளலாம்.
இது தவிர பல வகை அட்டைகள் உண்டு. உங்களின் Credit History ஏதாவது ஒரு காரணத்தால் மோசமான இருந்தால் அதை சரி செய்யும் வகையான அட்டைகள், credit score ஐ மேம்படுத்த மாணவர்களுக்கு என்றே பிரத்யோகமான அட்டைகள், அப்புறம் தொழில் செய்பவர்களுக்கு என்று பலதரப்பட்ட அட்டைகள் உண்டு.
இந்த மாதிரியான கார்டுகளால் சில நன்மைகள் இருக்கிறது.
1) ஒரு பொருளை வாங்குவதற்காக பணத்தை கைநிறைய வைக்க வேண்டிய தேவையில்லை. இதனால் திருடர்கள் பயமில்லாமல் இருக்கலாம்.
2) நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நினைத்த பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இந்த கடன் அட்டைகளால் சில நன்மைகள் இருந்தாலும் இதில் பல தீமைகள் இருக்கிறது. இதனுடைய தீமைகளை விளக்கி பாதிக்கப்பட்ட ஒருவர் கதையாக வடித்திருக்கிறார். பாருங்கள்.
மணிக்கு அந்தக்கடிதம் வந்ததுலிருந்துதான் தொடங்கியது சனி.
திரு சுப்ரமணியன் கோவிந்தராஜன், தாங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000 கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தாங்கள் உடனே ஆவண செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம், ஓம் வங்கி.
எப்படி சாத்தியம்? வீட்டின் கடைசி செலவுக்காக கடன் வாங்கியது உண்மை. ஆனால் அடுத்த மாதம் அலுவலகத்தில் எல்லா கடனங்களையும் எடுத்து வங்கிக்கு காசோலை அனுப்பி விட்டதே, இரண்டு மாதங்களாக நிலுவையா? வங்கிக்கே பேசிவிடலாமா?
உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களுக்கு 1 ஐ அலுத்தவும்.
ஏழெட்டு எண்களை அழுத்தி உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது, தயவு செய்து காத்திருக்கவும் 20 நிமிடம் கேட்டுக் கொண்டிருந்த பின்
வணக்கம் என் பெயர் ஜான் உங்களுக்கு என்ன சேவை வேண்டும் அப்பாடா மனிதக்குரல்.
என் பெயர் சுப்ரமணியம் கோவிந்தராஜன் என் அட்டை எண்…………………………..;
ஒரு நிமிடம் திரு கோவிந்தராஜன்..
உங்கள் கணக்கில் இன்னும் 1.5 லட்சம் கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
நான் சென்ற 3 ம் தேதி அதற்கு காசோலை அனுப்பி விட்டேனே.
இன்று தேதி 5 தான் ஆகிறது, ஒரு வேளை கணக்கு சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
நான் சொல்வது போன மாதம் 3 ம் தேதி.
மன்னிக்கவும் திரு கோவிந்தராஜன் இன்னும் எங்களுக்கு அந்தக் காசோலை வந்து சேரவில்லை.
ஆனால் வங்கி கணக்கில் அந்தப்பணம் குறைந்து விட்டிருக்கிறதே.
இன்னும் இந்தக்கணக்குக்கு வரவில்லை திரு கோவிந்த ராஜன். நீங்கள் உடனே அந்தப்பணத்தை கட்ட வேண்டும். எங்கள் கடன் மீட்புத்துரைக்கு உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை அனுப்பி விட்டோம்.
ஆனால் நான் அனுப்பி விட்டேனே.
உங்கள் காசோலை எண்ணை சொல்கிறீர்களா? சரி பார்க்கிறேன்.
சொன்னான்.
ஆம் இந்தக்காசோலை எங்கள் வங்கிக்கு வந்திருக்கிறது. ஆனால் வேறு எண்ணுக்கு உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்கின்றனவா.
இல்லையே உங்கள் வங்கியிலிருந்து ஒரே ஒரு அட்டைதான். எந்த எண்ணுக்கு சென்றுள்ளது?
மன்னிக்கவும் வேறு ஒருவர் பெயரில் உள்ள அட்டை எண்ணை நாங்கள் தெரிவிக்க கூடாது.
காசோலை எண் தவறுதலாக போட்டிருக்கலாம்.
மன்னிக்கவும் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதிற்கில்லை.
அந்த அட்டைக்குரியவரிடம் பேசி தவற்றை சரி செய்யலாம் அல்லவா.
அதை இந்த வங்கி செய்யாது. நீங்கள் செய்து கொள்ள தடை இல்லை.
எனக்கு யாருடைய கணக்கு என்பது எப்படி தெரியும்?
மன்னிக்கவும் நான் தகவல் தர இயலாது.
உங்கள் மேலாளரிடம் பேசி பார்க்கலாமா?
தாரளமாக ஆனால் அவரும் இத்தகவல்களை தரமாட்டார்.
அப்போது என்னதான் வழி?
தாங்கள் 1.5 லட்சத்தை உடனடியாக கட்ட வேண்டும்.
எப்படி கட்டுவது?
மன்னிக்கவும் வேறு ஏதேனும் கேள்வி இருக்கிறதா? நல்ல நாளுக்கு வாழ்த்துக்கள் வைத்து விட்டான்.
நல்ல நாள்? இதை விட மோசமான நாள் இருக்க முடியுமா?
என்ன செய்வது? எப்படி இந்த பிரச்சனையிலிருந்து மீள்வது? யாரை ஆலோசிப்பது.. ஒன்றும் புரியாமல் அடிவயிரு கணக்க, வீட்ற்கு சென்றால் வாசலிலேயே மடக்கினார் செயலாளர் ராமராவ்.
என்ன மணி உங்கள் வீட்டுக்கு இப்படிப்பட்ட விருந்தாளிங்க எல்லாம் வருவாங்களா?
யார் அது விருந்தாளி?
இது மரியாதைக்குரியவர்கள் இருக்கும் இடம். இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் வராம பாத்துக்குங்க
ராமாராவுடன் சண்டை பிடிக்க நேரமில்லாமல் வீட்டிற்கு விரைந்தான். 3 தடி ஆட்கள் அழைப்பு மணியை புறக்கணித்து கதவை ஓங்கி தட்டிக் கொண்டுடிருந்தார்கள்.
யாருங்க நீங்க
நாங்க வங்கியிலிருந்து வாரோம். கடன் வாங்னீயே திருப்பி கொடுக்க வேணாம்?
அந்த முகங்கள் அவர்கள் உடைகள் எதுவும் பன்னாட்டு வங்கியின் பெயருடன் ஒத்து வர வில்லை. ஆரம்பிக்கும் போதே ஒருமையில் ஆரம்பிக்கீறானே..
வாங்க உட்கார்ந்து பேசலாம்.
எடுறா என்றான் அவர்களுள் தலைவன் போல தோற்றமளித்தவன்.
என்னாது.. கொடுக்க முடியாதாமா? கைகால் போனா பரவாயில்லையின்னு கேளு கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாத நாய்க்கு வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும்.
என்னய்யா எப்ப தருவே?
நான் பணத்தை அனுப்பிடேனுங்க. ஆனா ஒரு தப்பு நடந்து போச்சு
எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க
இல்லீங்க நிஜமாகவே வேர ஒரு கணக்கு பணம் போயிருச்சு
அதுக்கு என்னை என்னா பண்ணச்சொல்ர?
நான் மேலதிகாரங்கிட்ட பேசி சரி பண்ணிருவேங்க
மொட்டை.. போட்டிருந்தவன் கேட்டான். அவன் என்ன தான் சொல்ரான்? குடும்பத்தோடு மரியாதையா வாழனுமா? வேணாமா? நாம் யாருன்னு காட்டிட்டு வா அப்பதான் தெரியும் இவனுங்களுக்கு. மணி பேசியதை காதில் வாங்கி கொண்டாகதாகவே காட்டிக் கொள்ளவே இல்லை.
தோ பாரு மணி ஒரு வாரம் உனக்கு தாரேன் அதுக்குள்ள பைசல் பண்ணாச் சரி இல்லாட்டி என்ன வேனும்னாலும் நடக்கும்.
வெளியேறி விட்டார்கள் இரண்டுநிமிடம்தான் உள்ளே இருந்தார்கள், ஆனால் ஒரு தேர்ந்த நாடகம் போல மேலே கை வைக்காமல் நேரடியாக திட்டாமல் செய்தியை மணிக்கு சொல்லி விட்டார்கள் நாங்கள் எநத அளவுக்கும் இறங்குவோம்.
அடுத்த வந்த நாட்கள் அன்றை விட மோசமாவே இருந்தன.
அட்டைக்கு அனுப்பப்படும் காசோலை யாருடைய கணக்கில் இருந்து வந்தது என்பது உங்களுக்கு அந்த அ;ட்டைதாரருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? அவராக முன் வந்து சரி செய்தால் மட்டுமே முடியும்.
சரி அவர் பெயர் முகவரி சொன்னீங்கன்னா கேட்டுபாக்கிறேனே.
மன்னிக்கவும் நாங்கள் அந்த எண்ணைத் தர முடியாது. நீங்கள் இப்போது உடனடியாக 175000 த்தை கட்டுவது தவிர வேறு வழி கிடையாது.
வங்கி மேலதிகாரிகள் கைகழுவி விட்டடார்கள்.
வாரம் கழிந்தவுடன் சரியாக வந்து விட்டார்கள் தாதாக்கள்.
என்னா மணி இன்னும் கட்டலியாமே? என்னா தெனாவட்டு உனக்கு?
இல்லைங்கே ஏதாவது பண்ணி சரி பன்னிடுவேன்.
த்தா உனக்கெல்லாம் ஒரு வீடு? சோருதானே திங்கிறே? கடன் வாங்கினா திருப்பி கொடுக்கனும்ன்ற அக்கரை வேனாம்?
எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நான்லே…
கடைசியா இன்னும் இரண்டு நாளன் கொடுக்கிறேன் மவனே அதுக்குள்ளே கணக்குத்தீர்க்லே…
யாரை கேட்பது?
உங்க அப்பா கிட்ட இருந்து ஏதாச்சும்?
அவரு கடைசி காசையும் சுரண்டிதானே 3 லட்சம் கொடுத்தாரு? உங்களுக்கு தெரியாதா?
எந்த வழியும் இல்லை. அலுவலகத்தில் வங்கிகளில் தெரிந்தவர்களிடம் எல்லாம் எல்லை வரைக்கடன் வாங்கித்தான் வீடே முழுமையாகியிருக்கிறது. நண்பர்கள் எல்லாரும் முடியாது என்றே சொல்லி விட்டாôகள்.
நடை பிணமாகத்தான் அலைந்தான் மணி ஐந்து வட்டிக்கு தர்ரேன் ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள திருப்பனும் ரெண்டு மாசத்துக்குள்? வேறு குண்டர்களை அழைப்பதில்தான் இது முடியும்.
வேணாங்க.
வீட்டை அடகு வைக்கலாமா? இதை எப்படிங்க அடகு வைக்க முடியும்? ஏற்கனவே அடகுக்தானே வீட்டுக்கடன் வாங்கியிருக்கோம்.?
ஒன்றும் புரியவில்லை தற்கொலை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. ஒரு நாள் அம்சா பதட்டமாக அழைக்க வீட்டிற்கு வேகமாக ஓடினான்.
வீட்டு வாசல்ல ஒரு வண்டியில் அவன் தொûக்காட்சியும் குளிர்பதனப்பெட்டியும். அதே தாதா தான் நின்று மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான் மணி வந்துட்டியா? காசை திருப்பி கொடுக்க வக்கில்லா உனக்கு படம் பார்க்கனுமா?
ராமராவ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மணி இதெல்லதம் சரியில்லை. நான் முதல்லேயே சொன்னனேன், இது மரியாதை பட்டவங்க இருக்கிற இடம்னு. நீங்க கூடிய சீக்கிரம் காலி பண்ணிடுங்க. குழந்தைங்க எல்லாம் பயப்படுது பாருங்க.
வீட்டில் தொலைக்காட்சி போனதில் நிசப்தம்.
அடுத்த முறை தாதா வந்த போது மணியும் வீட்டில் இருந்தான் நல்ல வேலையாக..
மணி உன் மூஞ்சுக்குதான் இவ்வளவு நாள் மேல வைக்காமே விட்டு வச்சிருக்கேன்…
இதோ பாருங்க நீங்க பன்றது சட்டப்படி தப்பு தீர்ப்பு கூட வந்திருக்கு தெரியுமா?
நீ சரிபடமாட்டே சட்டம் பேசுறீயா? தயிர் சோத்துக்கு
இவ்வளவு திமிறு கூடாது.. இதோ கூபிடுறேன் நம்ம பசங்கள..
அய்யயோ அவங்ககிட்ட ஏன் வம்பு.. ஏதாச்சும் கொடுத்து அனுப்புங்க கண்ணில் கலவரத்தோடு அம்சா…
என்ன இருக்கிறது கொடுக்க?
ஏன் உன் பொண்டாட்டி அனுப்பேன் அம்சாவா போரு?அம்சாலதேனே இருக்கா?
கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
இந்த தாலி ஒன்னுதான் இருக்கு சாமி படத்துக்கு கீழே கயிரு இருக்கு அதை எடுத்துகிட்டு வாங்க..
சமையல் அறையைத் தாண்டும் போதுதான் அதைப்பார்த்தான்.
மாட்சிமை தாங்கிய நீதிபதி அவர்களே.. என் கட்சிக்காரர் மணி உணர்ச்சியின் தூண்டுதால்தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பதால் குறைந்த பட்ச தண்டனையை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதில் பல தீமைகள் இருந்தும், இதில் பல நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தும் ஏன் இதில் மக்கள் விழுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கையில் பொதுவாக மக்கள் கவர்சிக்கு அடிமையாக இருக்கிறார்கள். இரண்டாவது ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும். இதற்கும் மேலாக வங்கிகளின் கவர்சிகரமான விளம்பரங்களையும். அவர்களின் பேச்சையும் நம்பிவிடுதலும் காரணமாக அமைகின்றன.
வங்களின் முகவர்கள் என கூறிக் கொண்டு கவர்சிகரமான உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள், அரசு அலுவலர்கள் வியாபாரிகள் முதல் பாமர மக்கள் வரை, தங்களின் பேச்சுத்திறமையால் கடன் அட்டைகளை வாங்க மறுத்து விடுகின்றனர். அட்டைகளை வாங்கும் வரை தொடர்ந்து தொலைபேசியில் பேசுகின்றனர். கடன் அட்டைகள் மூலம் பெரும் ரொக்கப்பணத்திற்கு 50 நாள் வரை (வங்கியை பொருத்தவரை இந்த நாட்களில் ஏற்றத்தாழ்வு உள்ளன.) வட்டி கடையாது. பொருள்களாக வாங்கினால் 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி கிடையாது என உறுதி கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் ஆர்வத்தில் பொருளோ, பணமோ பெற்று ஒரு சில தவணைகளை ஒழுங்காகக்கட்டியதும்தான் புதிய வடிவில் விதி விளையாட ஆரம்பிக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி மூலம் நான் தாங்கள் வைத்திருக்கும் கடன் அட்டைக்குரிய வங்கியின் முகவர் பேசுகிறேன். நமது வங்கியும் மருத்துவ காப்பீடு நிறுவனமும் உடன் பாடு செய்து கொண்டுள்ளது. நீங்கள் மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்துக் கொண்டால் ஒரு தவணை மட்டும் பணம் செலுத்தினால் போதும் அதையும் கிரிடிட் மூலம் வழங்குகிறோம் என கூறுகின்றனர்
அப்படியா விவரம் கூறுங்கள் என தப்பித்தவறி கேட்டு விட்டால் போதும் பேச்சிலேயே அவரை மயக்கி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரம் வயது ஆகியவற்றை கூறுங்கள் எவ்வளவு தொகை உங்கள் காப்பீடு கிடைக்கும் உங்களது பிரிமியம் தொகை எவ்வளவு என்பதை உடனே கூறிவிடுகிறேன் என கூறுகின்றனர்.
அப்பாவி வாடிக்கையாளரும் விவரம் கூறிவிட்டால் பிரிமிய தொகையை கூறிய உடனேயே உங்களுக்கு விருப்பமில்லாவிடில் பாலிசியை ரத்து செய்து விடுவோம். விருப்பம்மிருந்தால் உங்கள் கிரிடிட் கார்டுலிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்படும் உங்கள் கிரிடிட் கார்டு நம்பரை கூறுங்கள் என கேட்கின்றனர்.
கிரிடிட் கார்டு நம்பரை கூறிவிட்டால் அடுத்த விநாடியே வாய்ஸ் மெயில் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விட்ட தகவல் வந்துவிடும்.
வங்கியிலிருந்து மாதாந்திர அறிக்கை கிடைக்கும் போதுதான் கடன் அட்டையிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளருக்கு தெரிய வருகிறது. ஒரு சிலரிடம் கடன் அட்டையில் எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு தொகையும் 2,3 பாலிசிகள் பெயரில் எடுத்து விடுகின்றனர். அவர் அலறியடித்து வங்கிக்கு சென்று <ச்ண்ப்ங்:///றறச்சென்று> கேட்டாலோ அது தனி பிரிவு அங்கு சென்று கேளுங்கள் என கூறுகின்றனர். அங்கு சென்று கேட்டால் தலமை அலுவலகம் மும்பையில் உள்ளது. அங்கு தொடர்பு கொள்ளுங்கள் என பொறுப்பில்லாத பதில் வருகிறது.
இருப்பினும் மும்பையிலுள்ள அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறுகின்றனர். ஆனால் அங்கிருந்து வரும் பதிலை புரிந்து விபமரிந்தவர்கள் உதவியுடன் பாலிசிரைய ரத்து செய்யக் கோரி பாலிசி ரத்தாகி பணம் திரும்ப வங்கிக்கு வந்ததும் புதிய பிரச்சனை வருகிறது.
தாங்கள் பெற்ற கடனுக்கு வட்டி சேவை வரி என இஷ்டத்திற்கு தொகையை குறிப்பிட்டு நோட்டிஸ் அனுப்புகின்றனர். இரண்டு நோடடிஸ்களுக்கு பதில் இல்லையெனில் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கலிருந்து பணத்தை தாமாகவே வங்கிகள் வரவு வைத்து வைத்துக்கொள்ளும் நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.
மன உலைச்சலில் தவிக்கும் வாடிக்கையாளர்கள் வெளியே சொல்ல முடியாமல் உயிரை விடவும் முனைந்து விடுகின்னர். முதலில் தொடர்பு கொண்ட வங்கியின் முகவர் முகவரியே இல்லாத நபராகிவிடுகிறார்.தேடிப்பிடித்து தொடர்பு கொண்டாலும் பொறுப்பில்லாமல் தலைமை அலுவலுகத்ûதை தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர்.
வங்கியின் துணையோடு ரகசியமாக நடக்கும் நூதன மோசடியில் ஏமர்நதோர் ஏராளம். சொல்ல வழி தெரியாத வங்கி கடன் அட்டை தாரர்களுக்கு வழிகாட்டுவோர் யாரோ? கவர்சி வார்த்தையில் நம்பிக் கடன் அட்டையில சிக்கி வழ்வை சீரழிக்காதிருக்க விழிப்புணர்வை சமுதாய இயக்கமாகிய தவ்ஹீத் ஜமாத் ஏற்படுத்த வேண்டும் அதில் ஒரு பகுதிதான் இந்த கட்டுரை.
இஸ்லாத்தை பொருத்த வரை கடன் வாங்கலாம், கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் கடன் கொடுத்ததற்காக அதிமாக எதையும் பெறக்கூடாது. அப்படி பெறுவதற்கு இஸ்லாம் வட்டி என்று சொல்கிறது. இந்த வட்டி சம்பந்தபட்ட அனைத்ûயும் தடையும் செயதிருக்கிறது. அந்த அடிப்படையில் வங்கிகள் கடன் அட்டைக்காக நிர்ணயிக்கும் நாட்களில் பணத்தை செலுத்திவிட்டால் வட்டியாகாது. ஆனால் கடன் அட்டை வாங்கும் போதே வங்கி நிர்ணயிக்கும் காலத்தை விட அதிகமாகிவிட்டால் நான் வட்டி தருவேன் என்று கடன் அட்டை வாங்குபவர் கையெழுத்து போடுவதினால் அந்தக்குற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார். மேலும் கடன் அட்டைகளால் ஏற்படும் தீமைகளையும் பார்த்தோம். எனவே சில நன்மைகளை பார்ப்பதை விட அதிகமான தீமைகள் இருப்பதினாலும், வட்டி கொடுப்பதற்கு துணை போவதினாலும் இந்த கடன் அட்டைகளை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்த அறிவார்ந்த செயலாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்