பிறந்ததும் , வளர்ந்ததும் குழந்தை பிறந்ததும் அனைவரும் கொண்டாடினர். பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம், பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர். முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார். அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது, ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா அப்துல் முத்தலிப். குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது. சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் இறந்துவிட்டார். பின் முஹம்மது(ஸல்) அவர்கள் அவரது […]