பென்ஷன் பெறுவது தவறா? அது வட்டி அடிப்படையிலானதா?

கேள்வி-பதில்: பொருளாதாரம்
பென்ஷன் என்பதும் பிஎஃப் (Provident Fund) என்பது வேறு வேறு.

பிஎஃப் என்பதில், ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்தது முதல், மாதாமாதம் நிறுவனம் மற்றும் அரசாங்கத்தால் ஒரு தொகை போடப்படும். ஒவ்வொரு வருடமும் அதில் வட்டி சேர்க்கப்படும். வேலையாள் ஓய்வு பெறும் போது, அது பெரும் தொகையாக, வட்டியுடன் சேர்த்து தரப்படும். வேறு வழியில்லை, நம்முடைய பணம் என்பதால் வாங்க வேண்டியது தான், பிஎஃப் முதலை நாம் பயன்படுத்திவிட்டு, பேணுதலுக்காக வட்டியை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம்.

ஆனால், பென்ஷன் பணம் அப்படிபட்டது அல்ல. ஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர்/ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

அது அரசாங்கத்தால், நமது எதிர்காலத்திற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, ஒய்வு பெற்ற பிறகு, மாதாமாதம் தருவார்கள். இதில் வட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை. இது நாமோ, பிறரோ சேமித்து வைத்த தொகை அல்ல. பணிக்காலத்திலோ, அதற்கு பிறகோ நமது நடவடிக்கை சரியாக இல்லாவிட்டால், இந்த தொகை கிடைக்காமல் போகலாம். எனவே, பென்ஷன் பணத்தை பெறுவதில் எந்த மார்க்க விதிமீறலும் இல்லை.