
பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல […]