
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களேபரம், போர், குண்டு வெடிப்பு என உலகத்தின் அனைத்துப் பகுதிகளும் அமளி துமளியாகி அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் ஒரேயொரு ஊர் மட்டும் அமைதியிலும் அடக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்றது. சுற்றி எரியும் பயங்கர பாவத் தீ அங்கு மட்டும் பற்றாமல், பரவாமல் […]