Category: பைபிள் இறை வேதமா?

z516

09) பைபிளில் ஐம்பதாயிரம் பிழைகள்

v4ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார். ஒருநாள் “லுக்’ என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், “பைபிளைப் பற்றிய உண்மை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது. “புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்” […]

08) அல்லாஹ்வின் பெயரை நீக்கிய ஆசிரியர் குழு

v4Scofield Reference Bible – ஸ்காஃபீல்ட் பைபிள் விபரக் குறிப்பு! இந்த பைபிளில் ELAH என்ற வார்த்தையை ALAH அதாவது ஒரு ALLAH என்பதில் ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிப்பது என்று அதன் ஆசிரியர் குழு முடிவு செய்கின்றது. இந்த ஆசிரியர் குழு எட்டு பேர்களைக் கொண்டது. இக்குழுவின் தலைவர் ரெவரென்ட் சி.ஐ. ஸ்காஃபீல்ட் டி.டி. ஆவார். “கடவுளின் பெயர் அல்லாஹ் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அதை அப்படியே வாசிப்பதை விட்டு விட்டு […]

07) ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ

v4சாதாரண ஆங்கிலம் படித்தவர்களுக்குக் கூட According Toஎன்றால் என்ன என்று புரியும். பத்திரிகைகளில் பத்திக்குப் பத்தி இந்த வார்த்தை இடம் பெறும். நமது நிருபர் அளித்த தகவலின்படி, முதல்வரின் உதவியாளர் தெரிவித்தபடி, கல்வி இயக்குனரின் அறிவிப்புப்படி என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. சேலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் பலி என்று மாவட்ட ஆட்சித் தலைவரை மேற்கோள் காட்டி, பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தால் நாம் என்ன விளங்கிக் கொள்வோம்? தனக்குக் கிடைத்த தகவலை, தனக்கு வந்த […]

06) தடுமாறும் தலைமுறைப் பட்டியல்

v4தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அழிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16 பைபிளின் இந்த வசனத்தின்படி, ஏசு கடவுள் பெற்ற பிள்ளை! ஒரு பக்கம் ஏசுவைக் கடவுளின் குமாரர் என்று சொல்லி விட்டு, மறுபக்கம் ஜோசப்பின் குமாரர் என்று குறிப்பிடுகின்றனர். ஏசு தான் கடவுளின் ஒரே பிள்ளை ஆயிற்றே! அவருக்கு ஏன் ஜோசப் என்ற தந்தை? தலைமுறை? என்று […]

05) நகைப்பிற்குரிய வாக்குமூலம்

v4“இன்றைக்கு நாம் படிக்கும் இந்த பைபிள் பற்பல பிரதி எடுப்பவர்களின் கைவண்ணமாகும். அவர்கள் பல்வேறு எடுத்துக் காட்டுகளில் தங்கள் மொழி பெயர்ப்புப் பணியை மிகத் துல்லியமாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரதி எடுப்பவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்!” அருளப்பட்ட இறைச் செய்தியின் மூலத்திலிருந்து நகல் எடுக்கும் போது மனிதத் தன்மை உள்ளே நுழைந்து விடுகின்றது. இன்று வரை மூல மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான நகல்கள் சரியான பிரதிகள் அல்ல! இதன் விளைவு இரண்டு பிரதிகளில் ஒன்றுடன் ஒன்று ஒத்ததாக […]

04) இறை வேதத்தின் நோக்கங்கள்

v4வேதம் என்று சொல்கின்ற போது அதற்கென்று சில நோக்கங்கள் இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகின்றது. அந்த நோக்கங்கள் என்ன? மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. திமாத்தியூ 3:16 ஒரு கொள்கையைப் போதிக்க வேண்டும். தவறுக்காக நம்மைக் கண்டிக்க வேண்டும். நம்மைத் திருத்த வேண்டும். நமக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும். இதைத் தாண்டி வேறு நோக்கங்கள் இல்லை என்று சொல்லி விடலாம். பைபிள் […]

03) பைபிளைப் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு

v4கத்தோலிக்கராக இருக்கட்டும்! அல்லது புராட்டஸ்டன்ட்டாக இருக்கட்டும். நம்மிடம் வருகின்ற கிறித்தவ அழைப்பாளர் முதலில் முடிவு செய்து விட்டுத் தான் வருவார். அந்த முடிவு என்ன? நாம் அழைக்கும் இந்த நபர் பைபிளை இறுதி வேதமாகக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார் என்பது தான் அந்த முடிவு! வரக் கூடிய அவர்களிடம் நாம் செய்ய வேண்டிய பணி, ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் பைபிள் வசனங்களை அவர்களிடம் எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது பைபிள் வசனங்களுக்கு அவர்கள் கூறும் விளக்கங்களை எதிர்த்து […]

02) முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள்

v4ஒரு வேதம் மனிதச் சொல்லா? அல்லது புனிதச் சொல்லா என்பதற்குரிய மிகத் துல்லியமான அளவுகோலை(அல்குர்ஆன்: 4:82) ➚வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு விட்டான். அந்த அடிப்படையில் பைபிள் இறை வேதமா என்று பரிசீலனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். முரண்பாடு: 1 கணக்கெடுக்கச் சொன்னது யார்? கடவுளா? ஷைத்தானா? 1 மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார். 2 அரசர் […]

01) முன்னுரை

v4ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்; வரையறைகளை அது கொண்டிருக்க வேண்டும். அவை என்ன? அதில் முரண்பாடு இருக்கக் கூடாது. அது கூறும் முன்னறிவிப்புக்கள் பொய்க்கக் கூடாது; மெய்க்க வேண்டும். தான் ஒரு இறைவேதம் என்பதற்கான சான்றுகளை, அற்புதங்களை அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அந்த வேதம் கூறும் கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரண்படக் கூடாது. இது போன்ற அடிப்படை இலக்கணங்களுக்கு உட்படவில்லை என்றால் அது புனித வேதமல்ல! மனித […]