Category: அல்லாஹ் உருவமற்றவனா? ஓர் ஆய்வு

z515

05) இறைவனைக் காண முடியுமா?

v4இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது. அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா? எங்கு பார்க்கலாம்? நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் […]

04) அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்

v4உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன்: 7:54) ➚ உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். […]

03) வல்லவன் வானத்தில் இருக்கிறான்

v4இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்? வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 67:16) ➚, 17 (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது […]

02) இறைவனின் திருவுருவம்

v4பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு. “தலை வலிக்கிறது’ என்று கூறினால் “தலை’ என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு […]

01) முன்னுரை

v4உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்; உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர். இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், “அல்லாஹ்வுக்கு உருவமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள். அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், “அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது’ என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் […]