Category: இணை கற்பித்தல் ஒரு விளக்கம்

z513

38) மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

v4கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா? மரணித்து விட்ட இந்தப் பெரியார் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அதுபோன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள […]

37) உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்

v4‘‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’’ (திருக்குர்ஆன்: 49:7) ➚ ‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் வாதிடுகின்றனர். இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை […]

36) நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

v4நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும். மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மட்டுமே […]

35) தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

v4இணை வைப்பின் கேந்திரங்களாக தர்ஹாக்கள் திகழ்ந்து வருவதையும், அவற்றை இஸ்லாமிய மார்க்கம் எப்படியெல்லாம் தடை செய்துள்ளது என்பதையும் கடந்த இதழ்களில் கண்டோம். சமாதி வழிபாட்டையும் தர்ஹாக்களையும் ஆதரிப்போர், அதை நியாயப்படுத்த சில வறட்டு வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம். தர்ஹாக்களுக்குப் போவது ஜியாரத் அல்ல! பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது. மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் […]

34) படைப்பினங்களில் மோசமானவர்கள்

v4கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். அபூவாகித் அல்லைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். […]

33) சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

v4இறந்தவர்களின் கபுர்களின் மீது கட்டிடம் எழுப்புதல், அதன் மீது பூசுதல், விழா கொண்டாடுதல் போன்ற செயல்களை பற்றி நபிகளார் பல்வேறு எச்சரிக்கைகளை சமுதாயத்திற்குக் கூறியுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கிய போது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது ‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் […]

32) இறந்தவர்கள் செவியேற்பார்களா?

v4மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக அமைகின்றன. அவற்றைப் பார்ப்போம். இறைவன் சொல்லிக் காட்டுகிறான்… கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். (அல்குர்ஆன்: 46:5) ➚ மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் […]

31) இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?

v4அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம். நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த […]

30) அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?

v4ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள். (முஸ்லிம்: 4769) பின்னால் நடக்கக் கூடியதை முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம் நபிமார்களோடு முடிந்து விட்டது. இந்த உம்மத்தில் யாருக்கும் அவ்வாறு கிடையாது. இதை இறைவன் தந்த அருட்கொடை என்று கூடச் சொல்லலாம். இந்தச் செய்தியை […]

29) தீயோருக்கு நிகழ்ந்த அற்புதங்கள்

v4நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்வதைப் போன்று, நபிமார்கள் அல்லாத மற்ற சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு நாம் இதுவரை ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதர் பயணம் செய்து சென்று கொண்டிருக்கும் போது கட்டடங்கள் இடிந்து போன, பாழடைந்த, அங்கு குடியிருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத, சிதிலமடைந்த ஒரு ஊரைக் கடந்து செல்கிறார். அதைப் பார்த்து விட்டு […]

28) அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

v4இறைநேசர்கள் குறிப்பாக நபிமார்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சுயமாகவே அற்புதம் செய்யக்கூடிய ஆற்றல், சக்தி இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் இதுவரை நாம் பார்த்தோம். அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக […]

27) அற்புதங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே!

v4நபிமார்கள் செய்த அற்புதங்களில் சிலவற்றை நாம் பார்த்தோம். அவற்றை நபிமார்கள் செய்தார்கள் என்பதில் நமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த அற்புதத்தை நபிமார்கள் எப்படிச் செய்தார்கள்? யார் மூலமாகச் செய்தார்கள் என்பதற்கான விடையும் அந்தந்த சம்பவங்களிலேயே கிடைக்கின்றது. அவற்றை நாம் பார்ப்போம். பொதுவாக அல்லாஹ் நமக்கு அற்புதங்கள் சம்பந்தமாக ஒரு விதியை சொல்லித் தருகின்றான். உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி […]

26) நபிமார்களின் அற்புதங்கள்

v4மூஸா நபிக்கு இறைவன் பல அற்புதங்களை வழங்கியிருந்தான். மூஸா நபியவர்கள் காலத்தில் உள்ள இஸ்ரவேலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர். மூஸா நபி அந்தக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கும் போது தாகம் ஏற்படுகின்றது. உடனே அவர்கள், நீங்கள் தான் அல்லாஹ்வுடைய தூதராயிற்றே! எங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படுகிறது! நீங்கள் தண்ணீருக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரினர். உடனே மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் தண்ணீர் வேண்டி கோரினார்கள். உடனே இறைவன் உன்னுடைய கையில் இருக்கும் […]

25) இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள்

v4நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுவான் என்பதற்கு வழிகேடர்கள் சில வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அவற்றின் விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற வசனங்களையும், ஹதீஸ்களையும் அவர்கள் காட்டும் போது, அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு, மற்றொரு பகுதியை மறைத்து விடுகின்றனர். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் அது இவர்களுக்கு எதிரான ஆதாரங்களாகவே அமைந்துள்ளதை விளங்க முடியும். (போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் […]

24) மாநபி அறிவித்த மறைவான செய்திகள்

v4நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்கள் எல்லாமே அவர்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. நாமும் அதைத் தெரிந்து கொள்வதற்காத் தான். உதாரணமாக, சொர்க்கம் இருக்கிறது என்று நாம் நம்புகின்றோம். இது மறைவானது. இதை நமக்கு வழங்கப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு பார்க்க முடியாது. ஆறவாது அறிவைக் கொண்டு சிந்தித்தாலும் கூட சொர்க்கத்தை அறிய முடியாது. அப்படியானால் நாம் எவ்வாறு சொர்க்கத்தை நம்புகின்றோம்? சொர்க்கம் இருக்கிறது, அதை நம்ப வேண்டும் என்று படைத்தவன் சொல்லிவிட்டான் என்பதற்காக நம்புகிறோம். அவன் […]

23) மறைவான ஞானமும் இறைவனின் செய்திகளும்

v4இறைநேசர்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், இறைவனும், இறைத்தூதரும் யாரை இறைநேசர் என்று அறிவித்துக் கொடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் இறைநேசர்கள் என்று சொல்லக்கூடாது என்பதையும், அப்படியே அவர்கள் இறைநேசர்களாக இருந்தாலும் கூட அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் அடிமைகளாக -அடியார்களாகத் தான் இருந்தார்களே தவிர அல்லாஹ்வுடைய அதிகாரத்தை ஒரு சிறிதளவும் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம். குறைந்த பட்சம் தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவாவது […]

22) நபிமார்களை அறியாத நபிகள் நாயகம்

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு வானத்திற்கும் இறைவன் அழைத்துச் சென்று நபிமார்களைக் காட்டுகின்றான். மேலும் அங்கு பல காட்சிகளைக் காணச் செய்கின்றான். ஒவ்வொரு வானத்திலும் ஒவ்வொரு நபியைக் காணும் போதும் இவர் யார்? இவர் யார்? என்று வானவர் ஜிப்ரீலிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கின்றார்கள். பல நபிமார்களை அல்லாஹ் காட்டுகின்றான். ஆனால் அவர்கள் யார் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. ஜிப்ரீலிடம் கேட்டுத் தான் எல்லா நபிமார்களையும் அறிந்து கொண்டார்கள். என்னுடன் […]

21) மாநபியும் மனிதரே!-2

v4நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்தைக் கடந்த இதழில் கண்டோம். நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளக்க இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை எனும் அளவுக்கு இந்த அவதூறு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. நபிகளாருக்கு மறைவான ஞானம் தெரியாது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. நான் ஆயிஷா (ரலி) […]

20) அன்னையார் மீது அவதூறு

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான். அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள அந்தச் சம்பவத்தை இப்போது காண்போம், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட […]

19) மறைவான ஞானம்-2

v4எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர இறைவனுடைய தன்மையை, அதிகாரத்தை, ஆற்றலைப் பெற்றவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி வெளிப்படையான விஷயங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்க முடியும். ஒரு மனிதனுடைய மறைவானதை இன்னொரு மனிதன் அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. நபிமார்களுடைய நிலைமையும், நபிகள் நாயகத்தின் நிலையும் இவ்வாறு தான் இருந்தது என்பதற்குத் திருக்குர்ஆன் பல சான்றுகளை நமக்கு முன் […]

18) மறைவான ஞானம்-1

v4ஒரு மனிதனால் ஒன்றைச் செய்வதற்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். ஒரு மனிதருடைய அறிவு என்ன? மகானுக்கெல்லாம் மிகப்பெரிய மகானாக இருக்கட்டும். அவருடைய அறியும் திறன் என்ன? நான் ஒரு அறையில் இருந்து என்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்தச் சமயத்தில் என்னால் எதையெல்லாம் பார்க்க முடியும்? நண்பர்கள் எனக்கு முன்னால் இருப்பதால் நான் அவர்களைப் பார்ப்பேன். நான் அவர்களுக்கு முன்னால் இருப்பதால் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். இவ்வளவு தான். இது அல்லாமல் […]

17) மாநபியும் மனிதரே!-1

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது, தம்மை ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தான் அறிமுகம் செய்தார்கள். நானும் உங்களைப் போன்று ஒரு மனிதன் தான். உங்களுக்கு என்ன ஆற்றல், சக்தி, வல்லமை இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற தேவைகள் அனைத்தும் எனக்கும் இருக்கிறது. பசி, நோய், தூக்கம், போன்ற அனைத்து பலவீனங்களும் எனக்கும் உண்டு. உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகின்றது; உங்களுக்கு […]

16) உள்ளத்தை ஒருமுகப்படுத்தல்

v4இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்களைச் செய்வதற்கு எந்த ஒரு நியாயமும், முகாந்திரமும் இல்லை என்பதை நபிமார்களுடைய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாக வைத்தும் பார்த்து வருகிறோம். இறைநேசர்களுக்கெல்லாம் பெரிய இறைநேசராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தம்மை ஒரு மனிதராகவே காட்டியிருக்கிறார்கள் என்ற தலைப்பில் பல சம்பவங்களையும் நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்களா? […]

15) அற்புதங்களும் அல்லாஹ்வின் தூதரும்

v4நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு ஒரு கூட்டம் நபியவர்களிடத்தில் வந்து, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சில அதிசயங்களை, அற்புதங்களை எங்களுக்குச் செய்து காட்ட வேண்டும். நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அவற்றில் எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டினால் போதும் என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கவில்லை. விதாண்டாவாதத்திற்காகத் தான் இதைக் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் […]

14) நபிகளாரின் பிரார்த்தனைகள்

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம். அதே போன்று ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக […]

13) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

v4நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாகப் புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களை தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகின்றான். தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன். 4:125) இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபியவர்கள் […]

12) இறைநேசரின் பிரார்த்தனையும் இறைவனின் மறுப்பும்

v4திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாறுகளில் யூனுஸ் நபியின் வரலாறு மிக முக்கியமானதாகும். அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாக்களில் யூனுஸ் நபியும் ஒருவர். யூனுஸ் நபியவர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுப்பப்பட்ட நபியாவார். இவரைத் தவிர வேறு எந்த நபியையும் அதிகமான மக்களுக்கு அனுப்பியதாக இறைவன் சொல்லவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: யூனுஸ் தூதர்களில் ஒருவர். (அல்குர்ஆன்: 38:139) ➚ அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். (அல்குர்ஆன்: 38:147) ➚ இவர்களும் மற்ற நபிமார்களைப் […]

11) உங்களைப் போன்ற மனிதனே!

v4இறைவனுடைய நேசர்களிலேயே மிகச் சிறந்த நேசர்களாகத் திகழ்ந்த நபிமார்கள், தங்களுடைய சமுதாய மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாகவோ, இறைவனுடைய சில அம்சங்களைப் பெற்றவர்களாகவோ, அவர்களைப் பார்த்து மக்களெல்லாம் அரண்டு, பயந்து ஓடுகிற வகையிலோ அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதை நாம் சென்ற இதழில் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும் மக்களிடத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது எல்லா சமுதாய மக்களுமே, “நீர் […]

10) அடி வாங்கிய அவ்லியாக்கள்

v4நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்” […]

09) அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள், சொர்க்கவாசிகள் என்று அடையாளப்படுத்திக் காட்டினார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களைப் பார்த்தோம். அதே போல் நபியவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்காக மிகவும் கவலைப்பட்டார்கள். அதைப் பற்றி பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் மகன்) இப்ராஹீம் இறந்த போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் […]

08) அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

v4நாம் யாரையாவது இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால், அது அல்லாஹ்வின் மூலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒருவரை இறைநேசர் என்று சொல்லிவிட்டால் அதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. முந்திச் சென்ற சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. இறைவன் அந்தந்த சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களிலேயே ஒரு மனிதரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்குத் தன்னுடைய பொறுப்புகளைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக […]

07) இறைநேசர்களை மக்கள் தீர்மானிக்க முடியுமா?

v4மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நபிமார்களாலும் அறியமுடியாது என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் இதற்கு ஆதாரமாகக் கூறலாம். யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, “யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்” என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் […]

06) இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?

v4ஒருவரை நல்லடியார், மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதுபோல் நபி (ஸல்) அவர்களால் கூட, அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர், இவன் கெட்டவன், இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று வஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அதை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]

05) இறைநேசர்களை நாம் தீர்மானிக்க முடியுமா?

v4இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர்கள் என்று தீர்மானிக்க முடியாது. இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும். நம் கண் முன்னால் நல்லவராக வாழ்ந்து, அவரிடம் ஒரு தவறையும் காணாமல் இருந்த போதும் கூட அவரை அல்லாஹ்விடத்தில் நல்லவர் என்று சொல்லலாமா என்றால் சொல்லக்கூடாது. இவர்களுக்கே இந்த நிலை என்றால் நாம் பார்க்காத, யார் என்றே தெரியாத மனிதர்களை எப்படி இறைநேசர் என்று சொல்ல முடியும்? அவர்களுக்கு அவ்லியா, இறைநேசர், மகான் என்று எப்படிப் பட்டம் கொடுக்க முடியும்? இதை […]

04) இறைநேசர்களை நாமே தீர்மானிக்கலாமா?

v4இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர் என்று சொல்ல முடியாது. அல்லாஹ்வால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும். ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கüடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், “அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, “உங்கüல் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்து தான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், “இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். […]

03) இறைநேசர்களின் இலக்கணம்

v4நாம் உயிர் மூச்சாக கருதக்கூடிய தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை. இதில் என்னென்ன தவறான வாதங்களை வைக்கிறார்கள்? நமது மார்க்கத்தில் மிகப்பெரும் குற்றமாகக் கருதக்கூடிய பாவம் இணை வைப்பு. இந்த இணை வைத்தலை நியாயப்படுத்துவதற்காக, தவ்ஹீதைத் தவறு என்று காட்டுவதற்காக, ஷிர்க்கை அவர்கள் தவ்ஹீத் என்று எவ்வாறெல்லாம் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்? என்று நாம் விளங்கிக் கொண்டால் நமக்கு பாரதூரமான, நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அந்த விஷயத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதிலும் ஷிர்க்கைப் பொறுத்தவரை […]

02) பிரிவினைகள் ஏன்?

v4மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன்: 2:213) […]

01) முன்னுரை

v4பிரிவினை ஏன்? முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே இறைத்தூதரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே ஒரு புத்தகத்தை நம்முடைய இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், வணக்க வழிபாடுகளிலும் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம். நமது இறைவன் ஒருவனாக இருந்தாலும் நமக்குள் ஒரே மாதிரியாக அவனைப் புரிந்து வைத்திருப்பவர்களாக இல்லை. நம் எல்லாருடைய வேதம் திருக்குர்ஆனாக இருந்தாலும், எல்லாரும் அதை ஒரே மாதிரியாகப் புரிந்து நடக்கக்கூடியவர்களாக இல்லை என்பதை நாம் […]