
அ) மெய்யெழுத்தின் குறியீடு கீழ்க்கானும் அரபு எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் போடப்பட்டுள்ள குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப வாசிக்க வேண்டும். உதாரணமாக எழுத்தின் மேலே ـْ அரை வட்டம் போன்ற குறியீடு இருந்தால் அந்த எழுத்தை தமிழ் மெய்யெழுத்து போல் வாசிக்க வேண்டும். இந்தக் குறியீடு ஸுக்கூன் எனப்படும். நூன் மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று نْ இருந்தால் (ன்) என்று வாசிக்க வேண்டும்.. தா மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று تْ இருந்தால் (த்) என்று வாசிக்க வேண்டும். ஆ) அகரக் குறியீடு எழுத்தின் மேலே சற்றே சாய்ந்தது போன்ற குறியீடு அகரக் குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது ஃபதஹ் என்றும் உருது […]