Category: அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

u592

03) அழகிய மார்க்கத்துக்குச் சொந்தக்காரர் யார் ?

உலக காரியங்களில் ஒவ்வொரு மனிதனும், தான் மற்றவரை விட ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றே கருதுகிறான். அதனால் தான் மனிதன் உலக விஷயங்களில் அதிகம் போட்டி போடுகிறான். அதே போல் மார்க்க விசயங்களிலும் சிறப்பாக வாழ்ந்து எல்லையில்லாத மறுமை வாழ்வில் தொல்லையில்லாத சுவனத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். மறுமையில் இத்தகைய உயர்வை நாம் அடையவேண்டுமெனில் அழகிய மார்க்கத்திற்கு உரியவர்களாக நாம் திகழ வேண்டும். அங்ஙனம் திகழ்ந்தவர்தான் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். மறுமை […]

02) இப்ராஹீம் நபியின் சிறப்புகள்

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபியவர்களுக்கு இறைவன் பல தனிச் சிறப்புகளை ஏற்படுத்தியுள்ளான். திருமறைக் குர்ஆன் நெடுகிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி பல செய்திகளை இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனின் தோழர் நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன்: 4:125) ➚ படைப்பினங்களில் சிறந்தவர் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

01) முன்னுரை

மண்ணுலகில் மகத்தானதொரு படைப்பாக மனிதனை இறைவன் படைத்தான். அம்மனித குலம் நல்லவைகளைச் செய்யவும் அல்லவைகளை விட்டு விலகி நிற்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்பட்டன. எனவே மனிதனுக்கு அத்தகைய வாழ்வியலை வழிகாட்ட வாழையடி வாழையாக இறைத்தூதர்களை இறைவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இறைவனிடமிருந்து வேதம் பெற்று ஞானம் பெற்று சத்தியக் கருத்துக்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். அவ்வாறு இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களுமே சிறந்தோர் தாம் எனினும் இறைவன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை அதிகமாகப் புகழ்ந்தும், […]

11) இப்ராஹீம் நபியின் இளமை பருவம்

ஆற்றல் மிகுந்த இளமைப் பருவம் மனித வாழ்க்கை பல பருவங்களைக் கொண்டவை. இப்பருவங்களில் மிக முக்கியமானது இளமைப் பருவமாகும். இப்பருவத்தில் தான் ஒரு மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் திடமாகக் கட்டமைக்கப்படுகிறான். அல்லாஹ்வே உங்களைப் பலவீனமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன். (அல்குர்ஆன்: 30:54) ➚ இளமைப் பருவத்தையே இறைவன் ஆற்றல் மிக்க பருவமாக ஆக்கியுள்ளான். […]

06) இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம்

குடும்பம் ஓர் அமானிதம் தாய், தந்தை, உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டவனே மனிதன். தனி மரம் தோப்பாகாது என்பது போல தனி ஒரு மனிதனைக் குடும்பம் என எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மனிதனுக்கான மகிழ்ச்சியும், மன அமைதியும், அவன் வாழ்வதும் வீழ்வதும் அவனின் குடும்பதைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய சூழலில் குடும்பமே மனிதனின் கவலைக்கான முதற்காரணமாகவும் அமைந்துள்ளது. பொறுப்பில்லாக் கணவன் பொல்லாத மனைவி மற்றும் பண்பற்ற மகள், பார் தூற்றும் […]