
நபி இப்ராஹீம் (அலை) காலமெல்லாம் இணை வைப்பை எதிர்த்துத் தீம்பிழம்பாய் களம் கண்டவர்கள். அவர்கள் தன் தந்தையிடம் குடி கொண்டிருந்த சிலை மோகத்தைக் கண்கூடாகக் கண்டார்கள். சிலை வணக்கத்தின் பிடிமானத்தில் இருந்த தன் தந்தையை நோக்கி அறிவுரை செய்கின்றார்கள். அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 19:42)➚ ஆனால் அதற்கு அவரது தந்தை தெரிவித்த பதில் என்ன தெரியுமா? “இப்ராஹீமே! […]