
மண்ணறை வேதனை தொடர்பாக பலவீனமான செய்திகள் சிலவையும் இருக்கின்றன. மக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த செய்திகள் இருப்பதால் பலரும் அதை அறிவுரையாக எடுத்துக் கூறுகின்றனர். ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து மக்களுக்கு அறிவுரை சொன்னாலே போதுமானது. பலவீனமான செய்திகளை கொண்டு மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே கப்ர் வேதனை தொடர்பாக வந்துள்ள சில பலவீனமான செய்திகளை அறிந்து கொள்வோம். ஹதீஸ் 1: தீண்டும் பாம்பு எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் […]