Category: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

u579

06) நோக்கம்

ஒருவர் பல திருமணங்களை செய்துள்ளார் என்பதன் மூலம் மட்டுமே அவரை பெண்கள் மீது ஆசை கொண்ட சித்தரிப்பது முற்றிலும் தவறாகும். எந்த பின்புலத்தில் எத்தகைய புறச்சூழ்நிலையில் அந்த திருமணங்களை செய்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிவதைக் கொண்டு தீர்ப்பளிக்க கூடாது. காய்ச்சல் உள்ளவனின் நாவு உணவின் உண்மை சுவையறியாது. உண்ணும் உணவையெல்லாம் கசக்கும் என்றே தீர்ப்பளிப்பான். காமாலை என்பான். கண்ணுடையவன் காண்பதை எல்லாம் மஞ்சள் இது போல ஒருவரின் புறச்சூழ்நிலை மற்றும் நோக்கமறியாது கூறப்படும் […]

05) விமர்சனம் இல்லை

நபிகள் நாயகம் காலத்து மக்கள், முஹம்மது நபியவர்கள் சொன்ன கொள்கை பிரச்சாரத்துடன் முரண்பட்டு நின்றனர். அதன் விளைவால் எழுந்த வெறுப்பைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினர். . நபிகள் நாயகம் இறைத்தூதர் அல்ல, அவர் வெறும் கவிஞரே என்று இகழ்ந்தனர். . அவர் புத்தி பேதலித்தவர் என்று சிலர் கூறினர். . அவருக்கு யாரோ சூனியம் வைத்து விட்டனர்; அதனால் தான் நமது முன்னோர்களின் கொள்கையை விட்டு விலகி நிற்கிறார் என்றனர். . யாரோ இவரை பின்னின்று இயக்குகின்றனர் […]

04) போர்கள்

அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது. தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது. எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது. ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய […]

03) ஒட்டுமொத்த மக்களின் கலாச்சாரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அன்றைய காலத்தின் சாதாரண நடைமுறையாகும். நபிகள் நாயகம் மட்டுமே பல திருமணம் செய்தவர்களல்ல! அப்போதைய கால கட்டத்தில் பலரும் அதுபோன்று பல பெண்களை திருமணம் செய்தவர்கள் தாம். நபிகள் நாயகம் மட்டுமின்றி ஏனைய சாதாரண மக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்திருந்தனர். வஹ்புல் அஸதீ என்பவர் எட்டுப் பெண்களை மணந்திருந்தார். (அபூதாவூத்: 2243) கைலான் பின் ஸலமா என்பவர் பத்துப் பெண்களை மனைவியாகக் கொண்டிருந்தார். (அஹ்மத்: 4631) இஸ்லாத்தை […]

02) விமர்சனத்தின் அளவுகோல்

ஒருவரின் செயலை விமர்சிக்கும் முன் அவரின் காலத்திலுள்ள நடைமுறை என்ன என்ற தெளிவான பார்வையும் விருப்பு வெறுப்பற்ற சரியான மனநிலையும் இருத்தல் அவசியமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபரல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் செயலை அக்காலத்திய சூழலைப் புறந்தள்ளிவிட்டு, தற்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தால் அது நேர்மையாக இருக்காது. பழங்காலத்தில் கூழோ கஞ்சியோ குடித்து தான் வாழ்க்கையைக் கழித்தார்கள். அதுதான் அப்போது பிரதான […]

01) முன்னுரை

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். இன்றைய தேதியில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். நிற மொழி பேதமின்றி. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் பல முக்கிய நகரங்கள் கூட பள்ளிவாசல்களால் நிறைந்து திணறும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வழியேதுமில்லையா? என விழிபிதுங்கி நிற்கும் எதிரிகள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை […]