Category: விதி ஒரு வரையாவிலக்கணம்

u571

03) விதியும் நாத்திக வாதமும்

விதியைப் பற்றி முஸ்லிம்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் செய்யும் வாதத்தையும் அதற்கான விளக்கத்தையும் கண்டோம். நாத்திகர்களாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்களின் வாதங்களை இனி பார்ப்போம். இஸ்லாத்தின் விதி நம்பிக்கையில் தர்க்க ரீதியான விளக்கம் கிடையாது என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யானது என்று இவர்கள் கூறுகின்றனர். இவ்விஷயத்தை நாம் சற்று விரிவாகவே விளங்க முனைவோம். அண்ட சராசரங்களின் அனைத்து விஷயங்களையும் தனது சிற்றறிவால் விளங்கிட முடியும் என்ற இறுமாப்பில் தான் விஞ்ஞான உலகம் இன்னும் உள்ளது. முயற்சி […]

02) வஹீயில் முரண்பாடு வரலாமா?

வஹீயில் முரண்பாடு வரலாமா? இந்தக் கேள்வி நியாயமானது தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளாகட்டும்! அதன் சட்ட திட்டங்களாகட்டும்! அவை அனைத்தும் அறிவுப் பூர்வமானவையே! தர்க்க ரீதியாக சரியென்று நிரூபிக்கத் தக்கவைகளே! இஸ்லாத்தின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்குத் தர்க்க ரீதியான பதில் உண்டு. ஆனால் விதி பற்றிய முரண்பாட்டிற்கு இஸ்லாம் தர்க்க ரீதியான பதிலைத் தரவில்லை. ஏனெனில் அதை விளங்கும் அளவிற்கு அறிவை அல்லாஹ் மனித சமுதாயத்திற்குத் தரவில்லை. இதை […]

01) முன்னுரை

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான நம்பிக்கையையும் வைக்க வேண்டும். *அல்லாஹ் *மலக்குமார்கள் *நபிமார்கள் *வேதங்கள் *இறுதி நாள் *விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றை நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் […]