
யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். […]