Category: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

u568

04) ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது

ஓரிறை கோட்பாட்டின் மீது தான் இஸ்லாம் என்கிற சித்தாந்தமே நிறுவப்பட்டிருக்கிறது. இன்று பரவலாக மக்கள் நம்பியிருக்கும் பல தெய்வ நம்பிக்கையை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக, அவற்றை அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கையாகவே பார்க்கின்றது. சம அளவிலும், சம அந்தஸ்து மற்றும் அதிகாரம் கொண்டவராகவும் ஒரு துறைக்கு இருவர் இருக்க முடியாது என்பதே உலக நியதி. ஒரு தேசத்தின் பிரதமராக ஒருவர் இருந்தால் அந்த தேசம் கட்டுக்கோப்பாக செல்லுமா அல்லது, சம அதிகாரத்துடன் இருவர் இருந்தால் கட்டுக்கோப்பு இருக்குமா? ஒரு […]

03) ஒருவனே தெய்வம்

குலம் எப்படி ஒன்றாக உள்ளதோ, அந்த குலத்தை உருவாக்கிய கடவுளும் ஒருவர் தான். மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; இன்று எதையெல்லாம் மனிதன், கடவுளாக கருதி வணங்கிக் கொண்டுள்ளானோ அவையாவுமே கடவுளால் படைக்கப்பட்டவை எனவே அவையும் கடவுளாக முடியாது. தான் ஒருவன் மட்டுமே கடவுள், தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். “மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் […]

02) ஒன்றே குலம்

நாம் வாழும் இவ்வுலகில் பன்முகத் தன்மை கொண்ட சித்தாந்தங்கள் பின்பற்றப்படுகின்றன. கடவுட் கோட்பாடானாலும், வாழ்வியல் ரீதியிலான வழிகாட்டுதல்களாக இருந்தாலும் அவை பல உட்கூறுகளுடன் பிரிக்கப்பட்டு, அவற்றை பின்பற்றும் சாராரும் பல மாறுபட்ட கருத்தியல்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், என்ன தான் மாறுபட்ட கருத்தியல் கோட்பாடுகள் மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகளை கற்பித்தாலும் அவை ஒரு போதும் மனிதகுலத்தை பிளவுபடுத்தி விடக் கூடாது என்பதில் மட்டும் இஸ்லாமிய சித்தாந்தம் அடிப்படையிலேயே உறுதி காட்டுகிறது. ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் […]

01) முன்னுரை

இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பல விதமாக உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம், மிகப்பெரிய அருட்கொடையாக நமக்கு அருளப்பட்டிருக்கின்ற பகுத்தறி வினை சரிவர பயன்படுத்தாதனிடைய விளைவு, இன்று சாதி, மத, இன, மொழி போன்ற பேதங்களுடன் சர்ச்சைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்து இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம். ஆம்..! மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிப்பது என்பது நாம் கொண்டுள்ள மிக உயரிய கிரீடமான பகுத்தறிவுக்கே முரணானது. காரணம், பிறப்பால் மனிதர்களிடையே […]