சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. அதேசமயம், பகுத்தறிவு இல்லாத பிராணிகள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்: வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது. நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலைக் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் […]
Category: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்
u567
29) பாதையில் பிறர்நலம் நாடுதல்
மக்கள் வந்துச் செல்லும் பாதையில் இருக்கும் போதும் சமூக சிந்தனையோடு செயல் பட வேண்டும். பாதையில் வருவோர் விசயத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஒருபோதும் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் காரியங்களை செய்யக் கூடாது. நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம். நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், […]
28) சுற்றுச்சூழலில் நலம் நாடுதல்
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்று முதலே மனித குலத்திற்குப் போதிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்: அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு […]
27) சபைகளில் பிறர்நலம் நாடுதல்
மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் அடுத்த மக்களின் வீடுகளுக்கு. சபைகளுக்குச் செல்லும் போதும் அங்கிருக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. இதோ சில செய்திகளைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு. அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் மக்கள் நன்கு […]
26) பள்ளிவாசலில் பிறர்நலம் நாடுதல்
எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாட வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வின் ஆலயத்திலும் இதைக் கடைபிடிக்க வேண்டும். பள்ளிவாசலை பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்கு துன்பம் தரும் காரியங்களை செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகளை செய்யும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் […]
25) வியாபாரத்தில் நலம் நாடுதல்
பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர்நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப் படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களை செய்கிறார்கள். இலாபத்திற்காக பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனும் மோசமான மனப்போக்கு பலரிடம் முற்றிக்கிடக்கிறது. மார்க்கம் தடுத்த காரியங்கள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. ஆகவே, பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் […]
24) பொறுப்பின்கீழ் உள்ளோருக்கு நலம் நாடுதல்
ஆட்சி பீடத்தில், அதிகார மட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஏதேனும் ஒரு சிறு பொறுப்பில் இருப்பவர்கள், உடனிருப்போரை கண்காணித்து வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழே இருக்கும் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர். அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கினால். அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! […]
23) குடிமக்களின் நலம் நாடுதல்
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மற்ற நேரங்களிலும் வழக்கத்தைவிடக் கூடுதலாக அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள். முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், […]
22) தேவையுள்ளோருக்கு நலம் நாடுதல்
சமூகத்தில் ஏதேனும் தேவையை நிறைவேற்ற முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கும் மக்கள் இருப்பார்கள். அத்தகைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்கக் கூடாது. உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம் நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ‘இல்லை’ என்றார். வானவர்கள் நன்கு நினைவுபடுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) ‘நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க […]
21) பாதிக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்
நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலோ அல்லது வேறு ஏதாவது விசயத்திலோ யாரேனும் பாதிக்கப்படும்போது. அவர்களின் துயர் துடைப்பதற்கு கொஞ்சமாவது உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் நீங்கி நலமாக வாழ நாம் அதரவு அளிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் […]
20) அநீதி இழைக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்
நெருக்கடியான சூழ்நிலையில் மாட்டித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள். அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றவர்கள் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பிறரால் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாசாவைப் பின்தொடரும்படியும், […]
19) பெண்களுக்கு நலம் நாடுதல்
பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனம் கொண்டவர்கள்; வலிமை குறைந்தவர்கள். ஆகவே பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதும் வாடிக் கையாகி விட்டது. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது. எப்போதும் பெண்களுக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறது. பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன்: 2:228) ➚ பெண்களிடம் […]
18) ஆதரவற்றோருக்கு நலம் நாடுதல்
சமூகத்தில் பல தரப்பட்ட வாழ்க்கை நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோரும் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றவர்கள், சுயநலமாக இருந்து விட கூடாது. வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுவோரின் முன்னேற்றத்திற்கு கரம் நீட்டி ஒத்துழைக்க வேண்டும். கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி […]
17) ஏழைகளுக்கு நலம் நாடுதல்
அடிப்படையான வாழ்வியல் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் அநேகர் உள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையின்றி வாடும் மக்களோ ஏராளம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப் படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: […]
16) ஊழியருக்கு நலம் நாடுதல்
முதலாளிகள், தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களை சுமத்திவிடக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை காலதாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான பொருளாதம் பெற்று வளமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை விளங்கி எப்போதும் அவர்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் […]
15) முதலாளியின் நலம் நாடுதல்
பொருளாதார விஷயத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதாரத்திற்காக பிறரிடம் வேலை செய்து வருகிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாட வேண்டும். மார்க்கம் அனுமதித்த வகையில் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடாமல், தரப்படும் பணியை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும். தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி. அவனுக்கு நலம் […]
14) அண்டை வீட்டாருக்கு நலம் நாடுதல்
இன்றைய அவசர உலகில், அடுக்குமாடுகள் நிறைந்த கால கட்டத்தில் பக்கத்து வீட்டில் எவர் வசிக்கிறார் என்று கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அண்டை வீட்டாரை அந்நிய நாட்டவரை போல அணுகும் மனநிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமோ அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்து கொள்ளவும் அவர்கள் விசயத்தில் அக்கறை கொள்ளவும் போதிக்கிறது. எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: […]
13) சொந்த பந்தங்களுக்கு நலம் நாடுதல்
உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நன்மைகளை செய்ய வேண்டும். ‘எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) […]
12) உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்
தம்மைப் போன்று. தமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென எல்லோரும் நினைக்க வேண்டும். அவர்களிடம் பொறாமைப்பட்டோ, போட்டிப் போட்டுக் கொண்டோ அவர்களுக்கு கெடுதல் செய்ய துணிந்துவிடக்கூடாது. எப்போதும் நம்முடன் பிறந்தவர்களின் நலனிலும் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக்) செய்து விடுமாறு (கணவனிடம் கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள […]
11) வாழ்க்கை துணைக்கு நலம் நாடுதல்
குடும்பங்களின் தொகுப்பு தான் சமுகம். சமூகம் சரியாக இருக்க வேண்டுமெனில் குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனும் மனைவியும் சரியாக இருப்பது அவசியம். அவர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை (அல்குர்ஆன்: 2:187) ➚ எப்படி ஆடை மானத்தையும் குறைகளையும் மறைக்கிறதோ, பாதுகாப்பு அளிக்கிறதோ அவ்வாறு குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். […]
10) குழந்தைகளின் நலம் நாடுதல்
குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். ஆகவே குழந்தைகளை பெற்றோர் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் இருக்க முடிந்தளவு தக்க ஏற்பாடுகளை செய்வதோடு, அவர்களுக்கு அனைத்திலும் நல்வழி காட்ட வேண்டும்; நல்லொ ழுக்கங்களை போதிக்க வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவர்களுக்கு இடையே பாகுபாடு பார்க்க கூடாது. நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் […]
09) பெற்றோருக்கு நலம் நாடுதல்
பிறர் என்று சொல்லும் போது அந்தப் பட்டியலில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும். அவர்களை புண்படுத்துவதோ துன்புறுத்துவதோ பெரும்பாவம். மார்க்கத்திற்கு முரணாக இல்லாத காரியங்கள் அனைத்திலும் அழகிய முறையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும். என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் […]
08) பிறர் நலன் நாடும் அறிவுரைகள்
பிறர்நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம் ; இறையச்சத்தின் வெளிப்பாடு. மேலும் ஈருலகிலும் இறைவனின் உதவியைப் பெறுவதற்குரிய மகத்தான வழிமுறை என்று இஸ்லாம் பறைச்சாட்டுகின்றது. மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்கு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்தி உள்ளது. நலம் நாடுதல் என்று பொதுவாக குறிப்பிட்டு சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்று சொன்னால் […]
07) பிறர்நலம் நாடிய நபிகளார்
பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம். (நபியவர்கள் ஹிரா குகையில் இருந்தபோது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், […]
06) பிறர்நலம் நாடுவோரும், கெடுப்போரும்
சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் மனமுவந்து உழைக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களை, இழப்புகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள். பொதுப் பணிகளில் தூய சிந்தனையோடு தியாக உணர்வோடு அயராது ஈடுபடும் இத்தகைய மக்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரிவான்; அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம். நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி),” […]
05) அனைவரும் நலம் நாட வேண்டும்
சமூகத்தில் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. அடுத்தவர் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இதோ நபியின் எச்சரிக்கையைக் கேளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். […]
04) பிறர்நலம் நாடுவதும் தர்மமே!
இஸ்லாத்தின் பார்வையில் செல்வத்தை ஏழை எளியோருக்கு கொடுப்பது, நற்பணிகளுக்குக் செலவழிப்பது மட்டுமல்ல, பிறர் நலத்தை நாடும் வகையில் செய்கிற காரியங்கள் அனைத்தும் தர்மமாக கருத்தப்படும். தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், ‘இறைத் தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்..?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து. தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் […]
03) பிறர்நலம் நாடுமாறு உறுதிமொழி
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்ட மக்களுக்குப் பல விசயங்களைக் கட்டளையிட்டார்கள். அதன்படி, அன்றாட வாழ்வில் அவசியம் கடைபிடிப்பதாக பல விசயங்களை நபித்தோழர்கள் இறைத்தூதரிடம் உறுதி மொழியாகக் கொடுத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும். ஸகாத் வழங்குவதாகவும். ஒவ்வொரு முஸ்லிலிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன். அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), (புகாரி: 57, 58, 2714) (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]
02) பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்
உலகில் பல்வேறு விதமான கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கின்றன அவற்றை உருவாக்கியவர்கள். பின்பற்றுபவர்கள் என்று பலரும் அந்தச் சித்தாந்தங்களுக்கு வெவ்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள், வரையறை சொல்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் அடிப்படை பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில், அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மது நபியும் நமக்குப் பல விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் அவற்றுள் முக்கியமான ஒன்று பிறர்நலம் நாடுவதே இஸ்லாம் என்பதாகும் இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் எந்தளவிற்கு சமூக நலனில் அக்கறை கொள்கிறது ஆர்வம் காட்டுகிறது […]
01) முன்னுரை
இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம் தீவிரவாத மார்க்கம் என்பது போன்ற மாய தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. சிலர் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியைப் பரப்புகிறார்கள். உண்மையில் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கம். மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் வாழ் பிராணி நீரின்றி வாழ முடியாதது போல் சமுதாயமின்றி மனிதனால் வாழ முடியாது. அப்படி அவன் சமூகத்தில் வாழும் போது, சக மனிதனிடம் எப்படி நடந்து […]