முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கருத்துக்களை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் தூதர் என்ற முறையில் அவர்கள் காட்டிய வழி மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இறைத்தூதர் என்ற முறையில் அல்லாமல் மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை மார்க்கத்தில் […]
Category: அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி
u564
04) மார்க்க வழிகாட்டல் முஹம்மத் நபியே முன்மாதிரி
இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கு அதிபதி அல்லாஹ்வே! தனது அடியார்கள் மறுமையில் வெற்றிபெற எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே முஹம்மது நபியைத் தனது தூதராக அல்லாஹ் நியமித்தான். அவர்கள் வழியாக அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுத்தானோ அது மட்டுமே இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளதாகும். அவர்கள் அறிவிக்காமல் மற்றவர்களால் உருவாக்கப் பட்டவை இஸ்லாத்தில் இல்லாததாகும் என்பதும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் கருத்தாகும். அவர்கள் காட்டித் தராத அனைத்தும் பித்அத் எனும் வழிகேடாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) […]
03) முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் தான்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்ற கொள்கை முழக்கத்தில் அவர்கள் கடவுள் அல்ல; கடவுளின் தன்மை பெற்றவர் அல்ல என்பதே அந்தக் கருத்தாகும். ஆன்மிகவாதிகள் அனைவரும் வாழும் காலத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ கடவுளாகவோ, கடவுளின் அம்சம் கொண்டவராகவோ, நினத்ததைச் சாதிக்கும் அளவுக்குக் கடவுளுக்கு வேண்டப்பட்டவராகவோ கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மலஜலத்தைச் சுமந்து கொண்டு எல்லா மனிதர்களைப் போலவே உணவு உண்பவர்களாகவும், […]
02) கடந்த காலமும் சிறந்த காலமே
“எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள். இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள். […]
01) முன்னுரை
இஸ்லாம் மார்க்கம் பிரதானமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் ஏற்று வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் சேர முடியும். இஸ்லாத்தின் அடிப்படையாக அமைந்துள்ள இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். இவ்விரு கொள்கைகளையும் அரைகுறையாகவே நம்புகின்றனர். இவ்விரு கொள்கைகளையும் […]