Category: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

u557

38) முற்றுகையை முறியடிக்க காலிதுக்கு அழைப்பு

அன்பார், அய்னுத்தமர் போர் முடிந்ததும் அதில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வங்களை ஆட்சித் தலைவருக்கு காலித் அனுப்பி வைக்கின்றார். இந்தப் பொறுப்புக்காக நியமிக்கப்பட்ட வலீத் பின் உக்பா இந்தச் செல்வங்களை ஆட்சித் தலைவரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். கூடவே அவர், காலிதின் மன வேதனையையும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். “ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு […]

37) காலித் கண்ட அன்பார் வெற்றி

ஓராண்டு காலமாக வீரத் தளபதி காலித், ஹீராவில் முடங்கிக் கிடந்தாலும் முற்றிலுமாக முன்னேற்றம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கில்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போல், வெற்றித் தளபதி காலிதின் வீரப் பசிக்கு அன்பார், அய்னுத் தமர் போன்ற நகரங்கள் வெற்றியாகக் கிடைத்தன. தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டிருக்கும் மற்றொரு படைத் தளபதி இயாள் வராத வரை மதாயினுக்குச் செல்லக் கூடாது என்பது ஆட்சித் தலைவர் அபூபக்ரின் கட்டளை! அதன்படி, இயாள் வருகைக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் தான் அன்பார், […]

36) முழுமையடைந்த முன்னறிவிப்பு

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் […]

35) சரணாகதி அடைந்த ஹீரா

இஸ்லாம் அல்லது ஜிஸ்யா வரி அல்லது போர் என்ற மூன்று தான் உங்கள் முன் உள்ளன. இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று சரணடைய மறுத்தவர்களிடம் தளபதி காலித் தெரிவித்தார். இதற்காக ஒரு நாள் அவர்களுக்கு அவகாசம் அளித்தார். இம்மூன்றில் அவர்கள் போர் புரிவதையே தேர்வு செய்தனர். உலக ஆசையில் ஊறிப் போன இவர்களே போரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனும் போது மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இதற்குச் சளைத்து விடவா போகிறார்கள்? […]

34) வீரர் வீழ்த்திய வெள்ளை மாளிகை

உல்லைஸில் கிடைத்த இந்த உன்னத வெற்றிக்குப் பிறகு உம்கீஷியா என்ற இடத்திற்கு காலித் செல்கின்றார். இது ஹீராவைப் போன்ற ஒரு நகரம். பாதிக்லி என்ற சிற்றாறு பிரியும் இடத்தில் புராத் நதி முடிவடைகின்றது. அங்கு தான் இந்த ஊர் அமைந்துள்ளது. இது உல்லைசுக்கு அருகில் உள்ளதென்பதால் இங்குள்ள மக்கள் உல்லைஸ் போரில் முஸ்லிம்களுக்கு எதிரான படையில் பங்கெடுத்தனர். இவ்வூருக்குள் படையெடுத்து வந்த காலித் படையினர் கொஞ்ச நேரத்திற்கு உள்ளாகவே அதைக் கைப்பற்றி முடித்து விட்டனர். இங்குள்ள மக்கள் […]

33) பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்

காலிதின் கர்ஜனைக்குப் பெரும் புள்ளிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் காலிதின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. ஆனால் மாலிக் பின் கைஸ் என்பவன் மட்டும் காலிதுக்கு நேராக வந்து நின்றான். தனக்கு நிகரில்லாத ஒருவன் தன்னை எதிர்க்க வந்ததைக் காலிதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “இழிவான ஈனப் பிறவியே! உனக்கு என்ன இத்தனை துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது? நீ என்ன எனக்கு நிகரா?” என்று கூறி வாளில் ஒரே உரசல் தான். அவனது தலை கீழே விழுகின்றது. பந்தியில் இருந்தவர்களுக்குக் […]

32) வலஜாவில் ஒரு வாட்போர்

இராக்கில் பாரசீக சக்திகளை வேரறுத்து விட்டதாக காலித் கருதவில்லை. பாரசீகத்தின் கிஸ்ரா எனும் பாம்பு இன்னும் தன் படத்தைக் கீழே போடவில்லை என்பதை காலித் அறிந்திருந்தார். பாரசீகப் பேரரசின் அடுத்தக்கட்ட வேலை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, (முஸ்லிமான) அரபியரை, (முஸ்லிம் அல்லாத) அரபியர்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும் என்பது பாரசீகத்தின் திட்டம் என்று காலித் கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரது கணக்கு சரியானது; கணிப்பு நிஜமானது. இராக்கின் புராத், திஜ்லா என்ற இரு நதிகளுக்கு இடையே […]

31) ஆற்றங்கரையில் ஓர் அபார போர்

சங்கிலிப் போரில் தோற்றோடிய பாரசீகர்களை முஸ்லிம்கள் பெரும் பாலம் வரை துரத்தியடித்தனர். அந்தப் பாலம் இன்றைய பஸராவில் ஃபுராத் நதியில் அமைந்துள்ளது. தளபதி காலித் பின் வலீத் அத்துடன் பாரசீகர்களை விட்டு விடவில்லை. அதற்கப்பாலும் முஸன்னா பின் ஹாரிஸா தலைமையில் ஒரு படையை அனுப்பி பாரசீகர்களைப் பின்தொடரச் செய்தார். காலிதின் அடுத்த இலக்கு மதாயின் நகரம்! அந்த மதாயினை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களைத் தப்ப விட்டு விடக் கூடாது என்பது காலிதின் நோக்கம். மதாயின் நகரத்தை அடைவதற்கு […]

30) சங்கிலிப் போரில் சரிந்த பாரசீகம்

தனக்கு ஒரு அந்தஸ்து கூடும் போதெல்லாம் தனது தொப்பியில் விலை உயர்ந்த அணிகலன்களை அதிகரித்துக் கொண்டு ஆட்டம் போட்ட அநியாயக்கார ஆளுநர் ஹுர்முஸுக்கு, இஸ்லாமிய போர்ப் படையின் தளபதி காலித் ஒரு கடிதம் அனுப்புகின்றார். அமைதி மார்க்கம் இஸ்லாத்தில் இணைக! அமைதி பெறுவாய்! அல்லது நீயும், உனது குடி மக்களும் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தும் இழிவுக்காக நீ யாரையும் பழித்துக் கொள்ளாதே! உன்னையே நீ பழித்துக் கொள்! இதற்கு இணங்க மறுப்பின் நான் ஒரு […]

29) இராக்கை நோக்கி இஸ்லாமியப் படை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் கிறித்தவ சாம்ராஜ்யத்தை எதிர்த்துநடைபெற்ற முஃத்தா மற்றும் தபூக் யுத்தங்களைப் பற்றிக் கடந்த இதழில் கண்டோம். இதன் பின்னர் முஃத்தா போரில் ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி),அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவில் உள்ளபல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) […]

28) ரோமானிய பாரசீக பேரரசுகளுடன் போர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது, அவர்கள் இறக்கவில்லை,உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற விவகாரம் கிளம்பியது. அபூபக்ர் (ரலி) அவர்கள்அதை வேருடன் கெல்லி எறிந்தார்கள். அடுத்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும்ஜகாத்தைத் தர மறுத்தல், மதம் மாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அவற்றையும்இறையருளால் வெற்றிகரமாக முறியடித்தார்கள். அதன் பின்னர், இறுதித் தூதுத்துவத்திற்கு எதிராக போலித் தூதர் விவகாரங்கள் பொட்டுச்செடிகளாக அல்ல; பூகம்பங்களாக, பூதாகரமாக வெடித்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் மரணம் அடைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பொய் […]

27) கைஸின் ஆட்சிக் கனவு

போலி நபியான அஸ்வத் அல்அன்ஸீ என்ற அந்த நாகப் பாம்பின் புற்றாகவும் புதராகவும்இருந்த யமன் தேசம், இப்போது அவனது அழிவின் மூலம் தூய்மையாகி விட்டது;துப்புரவாகி விட்டது. இந்த அரும் பணியை ஆற்றியவர்கள் மூவர்! கைஸ் பின் மக்ஷூஹ், பைரோஸ்அத்தைலமீ, தாதவைஹ் ஆகிய மூவர் கொண்ட இக்குழுவினர் இந்த அரும்பணியைமுடித்து விட்டு, நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாக அடுத்த விவகாரம்உருவெடுக்கின்றது. இந்த விவகாரம் வெளியிலிருந்து வரவில்லை. உள்ளிருந்தேவெடிக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த செய்தி யமனை அடைந்ததும் ஒருசிலர் […]

26) மரணத்தைத் தழுவிய மகாப் பொய்யன்

தன்னைக் கொல்வதற்கு பைரோஸ் சதித் திட்டம் தீட்டினார் என்பதைக் கேள்விப்பட்டபொய் நபி அஸ்வத் அல்அன்ஸீ, பைரோஸைக் கொல்வதற்காக கத்தியை எடுத்தவுடன்,பைரோஸ் அவனைப் புகழ ஆரம்பிக்கின்றார். “(எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம்) எங்களை நீங்கள் சம்பந்தவழியாக்கினீர்கள். மற்ற பாரசீக மக்களை விட எங்களை நீங்கள்மகிமைப்படுத்தியிருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும் நபி இல்லையெனில் எதற்கு ஈடாகவும்எங்களது ஆட்சிப் பீடத்தை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம். உங்களிடம்தான் எங்களுக்குரிய இம்மை, மறுமையின் விவகாரம் ஒருங்கே இணையப்பெற்றிருக்கின்றது. அப்படி இருக்கையில் எங்களால் எப்படி […]

25) அஸ்வதுக்கு எதிராக அணி திரளும் சக்திகள்

அஸ்வத் அல்அன்ஸீ தன்னை மட்டரகமாக நடத்திக் கொண்டிருக் கின்றான். எனவேஅவனைக் கொன்று விட வேண்டும் என்று கைஸ் ஏற்கனவே தெளிவான திட்டம்தீட்டியிருந்தான். இதை இக்குழுவினர் அவனைச் சந்தித்த போது தெரிந்து கொண்டனர். அஸ்வத் அல்அன்ஸியால் அவமானத்திற்கும் அடிமைத் தனத்திற்கும் உள்ளானபைரோஸும் அன்ஸீயைத் தீர்த்துக் கட்டுவதில் தீர்மானமாக இருந்தார். தாதவைஹும் இதே குறியில் வெறியாக இருந்தார். இதற்கிடையே அன்ஸீ விவகாரமாகவபர் பின் யுஹ்னஸ் மதீனாவிலிருந்து வந்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து வபர் பின் யுஹ்னஸை அனுப்பி வைத்திருந்தார்கள் […]

24) வெற்றி கொள்ளப்பட்ட உமான்

மூன்று தளபதிகளை உள்ளடக்கிய முக்கூட்டுப் படை வருகின்றது என்ற தகவல் போலிநபி “லகீத்’துக்குக் கிடைத்தது தான் தாமதம்! அவன் தன் படை பரிவாரங்களுடன் தபாஎன்ற இடத்தில் முகாமிட்டான். தபா என்பது யமனைச் சுற்றியுள்ள ஊர்களின்பட்டணமும், வணிகச் சந்தையுமாகும். லகீத் (கடந்த தொடரில் லகீத் என்பதற்குப் பதிலாக வகீத் என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது) முஸைலமாவின் பாணியில் மக்களின் சொந்தங்களையும், சொத்துக்களையும்தனக்குப் பின்னால் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான். அப்போது தான் போரில்புறமுதுகு காட்டும் பெட்டைத் தனம் தலை […]

23) ஓமனில் தோன்றிய ஒரு பொய்த் தூதன்

ஜுவாஸாவில் முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்களைக் காப்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள்அனுப்பி வைத்த படையினருக்கு ஏற்பட்ட சோதனை, படைத்தவனிடம் கையேந்திக் கேட்டதும்நீங்கியது. அவர்களது பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப் பட்டது. இது அவர்களது உள்ளத்தில்ஒரு புதியதொரு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது. படைத் தளபதி அலா பின் ஹள்ரமி மக்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.எதிரிகளின் களத்தை நெருங்கிய போது அவர்களது எண்ணிக்கை முஸ்லிம்களின் புருவத்தைச்சற்று உயர்த்தியது. அங்கு பெருங் கூட்டமே பெருக்கெடுத்து வந்திருந்தது. அது இரவு வேளை! மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் […]

22) பாதை திரும்பிய பஹ்ரைன் மக்கள்

இதயங்களிலிருந்து வாய்களின் வழியாக ஓசையாக மட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்ததிருக்குர்ஆன் யமாமாப் போரின் தாக்கத்தால் எழுத்துக்கள் வடிவில் ஏடுகளில் பதிவாகின.இவ்வாறு ஏடுகளில் திருக்குர்ஆன் பதிவாகி பாதுகாக்கப்படும் இந்தப் புனிதப் பணிக்கு மட்டும்யமாமா போர் காரணமாக இருக்கவில்லை; இஸ்லாத்தை விட்டு, ஈமானை விட்டு வெளியேபோன மக்கள் உளப்பூர்வமாக உள்ளே வருவதற்கு ஒரு தோரண வாயிலாகவும் அமைந்துவிட்டது. “ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் உண்மையானகொள்கை; நாம் இடையே கண்ட கொள்கை போலியானது, பொய்யானது” என்ற விஷயம் […]

21) யமாமாவின் தாக்கமும் இறை மறை ஆக்கமும்

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பிவிடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவேமுடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.(அல்குர்ஆன்: 3:144) ➚ இவ்வசனம் உஹத் போர்க்களத்தில் நடந்த நிகழ்வை ஒட்டி இறங்கியது என்பதை நாம்நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டாலோஅல்லது கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் பழைய பாதைக்குத் திரும்பி விடுவீர்களா?என்ற […]

20) உருத் தெரியாமல் போன ஒரு பொய்த் தூதன்

“முஸ்லிம்களே! என்னை இந்தத் தோட்டத்திற்குள் தூக்கி வீசுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” இது தான் பர்ராஃ பின் மாலிக் வழங்கிய கம்பீரமான யோசனையாகும். பர்ரா பின் மாலிக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ் பின் மாலிக் (ரலி)யின் சகோதரர் ஆவார். இவர் உஹதுப் போரில் பங்கெடுத்தவரும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவருமாவார். (நூல்: ஸியரு அஃலாமின் நுபலா) இத்தகைய பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட பர்ராஃ பின் மாலிக் ஏன் இப்படி முன்னணியில் […]

19) சரித்திரம் படைத்த ஸைதும் ஸாலிமும்

ஒரு கையால் ஒரு திருவிளையாடல் இந்தப் போரில் முதன் முதலில் முஸ்லிம்களில் காயம் பட்டவர் அபூ அகீல் என்றுஅழைக்கப்படும் அப்துர்ரஹ்மான் பின் பல்வி அல்அன்சாரி ஆவார். போரில் குதிப்பதற்குமுன்னால் ஓர் ஈட்டி அவரது இடது புஜத்தில் பாய்ந்தது. அதனால் அவரது இடது தோள்பட்டை செயலிழந்து விட்டது. எனவே அவர் முஸ்லிம்களின் சிகிச்சை முகாமுக்குக்கொண்டு செல்லப்பட்டார். போர் சூடு பிடித்ததும் முஸ்லிம்கள் பயந்து கொண்டு முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இவரோ இடது கை பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்துகொண்டிருக்கின்றார். அப்போது மஅன் […]

18) முழுமை பெற்ற முன்னறிவிப்பு

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தமது படையின் முன்னணிக்கு ஷர்ஹபீல் பின் ஹஸனாவையும், தன் வலப்பக்க, இடப்பக்க அணிகளுக்கு முறையே ஜைத் பின் கத்தாப் (ரலி), அபூஹுதைபா (ரலி) ஆகியோரையும் நியமித்தவர்களாக யமாமாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு படையைச் சந்திக்கின்றார்கள். (ஷர்ஷபீல் பின் ஹஸனா என்று  அச்சாகியுள்ளது. அதை, ஷர்ஹபீல் பின் ஹஸனா என்று திருத்தி வாசிக்கவும்) அந்தப் படையினர் ஒரு மலைப் பாதையில் இரவு நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்படையின் தளபதி […]

17) யமாமா போர்

மக்காவிலிருந்து யமனுக்குச் செல்லும் வழியில் தாயிஃபுக்கு அருகில் உள்ள ஊர் தான் யமாமா! அரபியப் பாலைவனத்தில் யமாமா ஒரு சோலை வனமாகும். மக்காவுக்கு உணவு தானியங்கள் வழங்குகின்ற ஓர் உணவுக் களஞ்சியம் என்று சொல்லும் அளவுக்கு விவசாயம், வேளாண்மை என இயற்கை வளம் நிறைந்த எழில் கொஞ்சும் நகரமாகும். இவ்வூர் மக்கள் பனூ ஹனீஃபா (ஹனீஃபா கிளையார்) என்று அழைக்கப்படுவர்.   இஸ்லாத்தின் மடியில் எழில்மிகு யமாமா ஹனீஃபா கிளையினரின் தலைவர் இஸ்லாத்தை ஏற்றதைத் தொடர்ந்து யமாமா […]

16) சொத்துரிமை மறுப்பு

ஆட்சித் தலைவர் மீது பாத்திமா கோபம் பொது வாக்கெடுப்பின் போது அபூபக்ர் (ரலி)யிடம் எல்லோருடனும் சேர்ந்து வாக்குப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அலீ (ரலி) அவர்கள் ஆறு மாத காலம் சுத்தமாக ஒதுங்கி விடுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மதம் மாறியவர்களுக்கு எதிராக நடத்திய போரில் தில்கிஸ்ஸாவுக்குச் செல்ல ஆயத்தமான போது, அலீ (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்றதையும், அபூபக்ர் (ரலி) அவர்களை அலீ (ரலி) வாழ்த்தி வழியனுப்பி வைத்ததையும் ஏற்கனவே கண்டோம். மதம் மாறியவர்களுக்கு எதிராக […]

15) காலிதுக்கு எதிரான புகார்கள்

மதமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பனூதமீம் கிளையினர் பல்வேறு விதமாக சிதறிக் கிடந்தனர். ஒரு சாரார் ஜகாத் கொடுக்க மறுத்து மதம் மாறினர். மற்றொரு சாரார் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தொடர்ந்து ஜகாத்தை செலுத்தி வந்தனர். இன்னொரு சாரார் என்ன தான் நடக்கின்றது என்று பார்ப்போம் என்று காத்திருந்தனர். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான் பனூ தமீம் கிளையாரிடம் ஒருத்தி நுழைகின்றாள். தக்லிபிய்யா கிளையைச் சேர்ந்த ஹாரீஸ் என்பவரின் மகளான ஸிஜாஹ் என்ற […]

14) சண்டைக்கு வந்தவர்களின் சரணாகதி

காலித் பின் வலீத் சந்தித்த மற்றொரு நிகழ்ச்சி காலித் பின் வலீத் (ரலி) ஒரு கிளையாரை எதிர்த்து வெற்றியடைந்து கொண்டிருந்த வேளையில் கர்வம் கொண்ட ஒரு பெண் – அல்ல ஒரு பேய் களமிறங்கி நின்றாள். இவளிடத்தில் காலித் வென்றாரா? தோற்றாரா? என்று பார்ப்போம். புஸாகா போரில் ஃபிலால் என்ற இடத்தில் கத்பான் கிளையைச் சேர்ந்த தலீஹாவின் ஆட்கள் ஒரு பெண்ணின் தலைமையில் அணி திரண்டனர். அவளது பெயர் உம்மு ஜமல் ஆகும். உதாரணம் சொல்லப்படக் கூடிய […]

13) போலித் தூதரின் பொய் வஹீ

போலி நபி தலீஹாவும், அவனை நம்பியவர்களும், அவனுடைய படையில் இணைந்தவர்களும் களத்தை நோக்கி வந்தார்கள். பனூஃபிராஸா கிளையைச் சார்ந்த உயைய்னா பின் ஹிஸ்ன் என்பவர் தலீஹாவின் வலது கரமாவார். அவர் போலி நபியுடன் இணைந்து போராட ஏழு பேர்கள் அடங்கிய படையுடன் வந்திருந்தார். மக்கள் அணி வகுத்து நின்று போர் செய்தனர். போலி நபி தலீஹாவோ ஒரு போர்வையை சுற்றிக் கொண்டு தனக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதாக பாவனை செய்து கொண்டிருந்தான். போர் செய்து கொண்டிருக்கும் போர் […]

12) பொய் நபியை எதிர்த்துப் போர்

புகாரியில் பொய் நபி தொடர்பான ஹதீஸின் அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் கூறுவது போல், முஆத் பின் ஜபல், அபூ மூஸா அல்அஷ்அரி ஆகிய இருவரும் யமனுக்குப் பொறுப்பாளர்களாக அனுப்பப்பட்ட அந்தக் கால கட்டத்திலேயே அன்ஸீ என்ற போலி நபி கொல்லப்பட்டு விடுகின்றான். முதல் போலி நபி கொல்லப்பட்ட இந்தச் செய்தி அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ரபிய்யுல் அவ்வலின் கடைசியில் வந்து சேர்ந்தது. அது அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமாவின் படையை அனுப்பிக் கொண்டிருந்த நேரமாகும். இவ்வாறு […]

11) மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம்

மதம் மாறியவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட 11 படைத் தளபதிகளும் தங்கள் பயணத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் தங்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள், மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து எழுதிய கடிதத்தையும் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லும் கடிதத்தின் விபரத்தைப் பார்ப்போம். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பிரதிநிதியின் கடிதமாகும். தலைவர்கள், பொதுமக்கள், இஸ்லாத்தில் தொடர்ந்து வாழ்பவர், இஸ்லாத்தை விட்டு […]

10) பறந்து வந்த பலூன்களும் பயந்து ஓடிய ஒட்டகங்களும்

மதீனாவிற்கு உள்ளே வந்த மதம் மாறிய கூட்டத்தை ஊருக்கு வெளியே விரட்டி அடித்தது மட்டுமல்ல, அவர்களை வேரறுக்கவும் முடிவு கட்டி, அபூபக்ர் (ரலி) ஜமாதுல் ஆகிரா மாதத்தில் ஒரு படையெடுப்பை நடத்தினார்கள். எல்லைப் புறத்தில் நின்ற படைத் தளபதிகள், மதீனாவாசிகள் அடங்கிய படையுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனாவுக்குள் வந்த மதம் மாறிய அரபியர்களை நோக்கிச் சென்றார்கள். அப்துல் கிளையார், முர்ரா கிளையார், துய்பான் ஆகியோர் அவர்களுக்குத் துணை புரிந்த கிளாளா கிளையார் ஆகியோருடன் அபூபக்ர் (ரலி) […]

09) மதம் மாறியவர்களுடன் நடந்த போர்

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தனது செல்வத்திற்கும், உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் […]

08) புரட்சியாளர்களின் போர் முழக்கங்கள்

அபூபக்ர் (ரலி) அவர்கள் வழியனுப்பி வைக்கும் அந்தக் கட்டத்தில் அப்படையினருக்கு பத்துக் கட்டளைகளைப் பிறப்பிக்கின்றார்கள். மக்களே! நில்லுங்கள். உங்களுக்குப் பத்து விஷயங்களை பேணும் படி அறிவுரை வழங்குகின்றேன். 1. நீங்கள் துரோகமிழைத்து விடாதீர்கள். 2. வெற்றிப் பொருட்களைப் பங்கிடும் முன் அபகரித்து விடாதீர்கள். 3. வாக்குறுதிக்கு மாறு செய்யாதீர்கள். 4. உயிருடன் இருக்கும் போதோ, இறந்த பின்போ வதை செய்யாதீர்கள். 5. சிறு குழந்தையை, வயது முதிர்ந்தவரை, பெண்களை நீங்கள் கொலை செய்யாதீர்கள். 6. பேரீச்சை மரத்தையோ, கனி தரும் வேறு எந்த மரத்தையுமோ வெட்டித் தரித்து விடாதீர்கள். 7. ஆடு, மாடு, ஒட்டகத்தை உணவுக்காகவே […]

07) முன் வைத்த காலை பின் வைக்காதவர்

அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றி, இரக்க குணம் கொண்டவர், இறுக்க குணம் கொண்டவரல்லர்! இளகிய மனம் படைத்தவர், இரும்பு மனம் படைத்தவர் அல்லர் என்ற பாத்திரத் தோற்றம் மாத்திரமே வரலாற்று ஊடகங்கள் மூலமாக நம்முடைய உள்ளங்களில் பதியம் செய்யப்பட்டுள்ளன. அபூபக்ர் (ரலி) அவர்கள் இரக்க குணம் கொண்டவர் தாம்! இளகிய மனம் படைத்தவர் தாம்! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இது அபூபக்ர் (ரலி) என்ற பாத்திரத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கும் போது தான்! அவர்களது மறுபக்கம் […]

06) உஸாமா தலைமையில் படை அனுப்பியது ஏன்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உஸாமாவின் தலைமையில் புறப்பட்ட போர்ப்படை இப்போது புறப்படத் தயாராகட்டும் என்ற அபூபக்ர் (ரலி)யின் பிரகடனத்தையும் அதையொட்டி அவர்கள் ஆற்றிய பேருரையையும் கண்டோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்காக ஏன் இவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்பதைக் காணும் முன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட சம்பவத்தைப் பார்ப்போம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக மட்டுமல்லாமல், ஆட்சித் தலைவராகவும் இருந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

05) ஆட்சிப் பணி

எந்த ஒரு தலைவராக இருப்பினும் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி முக்கியத்துவம் பெறுவதாக அமையும். அது போலவே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பதவியேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவிலுள்ள பல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் […]

04) பொதுத் தேர்தல்

சகீபா பனூ சாயிதாவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்யமாலிருந்த ஒரே நபித்தோழர் ஸஅத் பின் உப்பாதா (ரலி) தான். வேறு சிலர் பைஅத் செய்யாமல் தாமதித்தனர். அவர்கள் அலீ (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகியோர் ஆவர். ஆனால் அவர்கள் சகீபா பனூ சாயிதா சம்பவத்தன்று பைஅத் செய்தார்கள் என்ற செய்தியை பைஹகீயில் பார்க்கிறோம். அபூபக்ர் (ரலி) யின் கையைப் பிடித்து உமர் (ரலி), இதோ உங்கள் தோழர் என்று கூறி அவரிடம் வாக்களித்தனர். […]

03) தலைவராக தேர்வாகுதல்

உங்களில் ஒரு தலைவர், எங்களில் ஒரு தலைவர் என்று அன்சாரித் தோழர் ஒருவர் கூறியதும் ஏற்பட்ட வாதப் போர், வாட்போராகும் அளவுக்கு வடிவெடுத்தது. சகீபா பனூ ஸாயிதாவில் நடந்த விவாதத்தின் போது, பத்ரு ஸஹாபியான ஹப்பாப் அல் முன்திர் (ரலி), எங்களில் ஒரு தலைவர், உங்களில் ஒரு தலைவரைத் தேர்வு செய்வோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த ஆட்சியதிகார விஷயத்தில் உங்கள் மீது நாங்கள் பொறாமை கொள்ளவில்லை. எனினும் நாம் எவர்களது தந்தையர்களையும்,சகோதரர்களையும் எதிர்த்துப் போரிட்டோமோ அவர்கள் […]

02) அடுத்த ஆட்சித் தலைவர் யார்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகம், அரசியல் என இரண்டிற்கும் ஒரு சேர அமையப் பெற்ற ஒருங்கிணைந்த தலைவர் ஆவார்கள். ஆன்மீகத் தலைமைக்கு இறுதி நாள் வரை அவர்கள் தான் தலைவர் என்பதால் அவர்கள் இறந்த பிறகு அந்தத் தலைமை காலியாக இருக்கவில்லை. ஆட்சி மற்றும் அரசியல் தலைமையிடம் காலியாக உள்ளது. அந்தக் காலியிடத்தை நிரப்புபவர் யார்? இது தான் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல் கிடக்கும் போதே பூதாகரமாக உருவெடுத்த புதுப் […]

01) முன்னுரை

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியைக் காண்பதற்கு முன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கைக் காட்சிகளைக் கொஞ்சம் கண்டு வருவோம். அன்றைய அரபியப் பாலைவனம் நிலத்தால் மட்டும் பாலைவனமாக இல்லை! சீரிய சிந்தனை வளத்திலும் வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது. பல தெய்வக் கொள்கை தான் அந்தப் பாலைப் பெருவெளியை ஆட்சி செய்தது. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏற்றி வைத்த ஏகத்துவ இறைக் கொள்கை அணைந்து, கல்லையும் களிமண்ணையும் வணங்கும் அறியாமை இருள் மக்காவை அப்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்ராஹீம் […]