Category: இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்

u500

08) ஆலோசனை (மஷ்ஷூரா)

இன்று பல நிர்வாகங்களில் உள்ள பிரச்சனை என்னவென்றால், “என்னவெல்லாமோ நடக்கிறது; எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை” என சக நிர்வாகிகளைக் குறை கூறுவது மலிந்து கிடக்கும். ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்து செயல்படுத்த வேண்டிய காரியங்கள் எவை? அவசரத் தேவைகளைக் கருதி, தலைவர் தானாக எதை எதை எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம்? ஆகிய இரு விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாமை தான் இதற்குக் காரணம். இவை இரண்டிற்கும் […]

07) கட்டளையிடும் திறன்

கட்டளையிடும் திறன் ஒரு நிர்வாகத்தில் ஒரு தலைவரை விட அல்லது வேறொரு முன்னிலை நிர்வாகியை விட செல்வத்தில், பலத்தில், அறிவில், அனுபவத்தில் சிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களது சிந்தனை ஓட்டமும் நடவடிக்கைகளும் அவர்களது சிறப்புத் தகுதிகளை, சிறப்பு அம்சங்களைப் பிரதிபலிக்கும். இது நிர்வாகத்தில் ஒரு சாராரை உயர்வு மனப்பான்மையுடனும் இத்தகுதிகள் இல்லாதவர்களை தாழ்வு மனப்பான்மையுடனும் செயல்பட வைக்கும். இது நிர்வாகத்தின் அங்கத்தினர்களிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தி, நாளடைவில் பிரிவினை எற்படவும் வழிவகுக்கும். ஆகையால் ஒரு தலைவர், […]

06) குழுப்பணியின் அவசியம்

குழுப்பணியின் அவசியம் ஒருவர் மிகச் சிறந்த திறமைசாலியாக இருப்பார். தனியாக அவரது பணிகளைச் சிறப்பாகச் செய்வார். அதே பணியை விரைந்து முடிப்பதற்காக அல்லது அதிகப்படுத்துவதற்காக அந்தத் துறை சார்ந்த ஐந்து பேருடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யச் சொன்னால் மற்றவர்கள் மீது புகார் கூறுவார். இது நமக்கு ஒத்து வராது என்பார். இப்படித் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் அவதிப்படுகிறார்கள். குழு உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நாம் சார்ந்திருக்கும் ஒரு நிறுவனத்தை, இயக்கத்தை, குடும்பத்தை மற்றவர்கள் […]

05) தொடர்புத் திறன்

தொடர்புத் திறன் ஒரு நிர்வாகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்நிர்வாகத்தின் அங்கங்களான நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் பற்றிப் பார்த்தோம். எப்படி ஒரு தனி மனிதர் தன்னளவில் சிறந்த பண்பாளராக, ஒழுக்கம் உடையவராக, திறமைகள் நிறைந்தவராகத் திகழ வேண்டுமோ அது போல் அவர் பிறரிடம் உள்ள தொடர்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த அடிப்படையில் தற்கால நிர்வாகவியல் கல்வியின் இன்னொரு பகுதியான தொடர்புத் திறன் பற்றி இனி பார்ப்போம். ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பதை, அந்நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் […]

04) நிர்வாகத்தில் முதிர்ச்சி

முதிர்ச்சி எதையும் சிந்திக்காமல் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களில் மிகுந்த அக்கரை காட்டுவது, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றவர்களின் தூண்டுதலால் செயலில் இறங்குவது, தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவது போன்றவை முதிர்ச்சி இல்லாதவர்களின் வெளிப்படையான அடையாளங்கள். ஒரு மனிதனின் உடல் முதிர்ச்சியடைந்து, அறிவு முதிர்ச்சியடையவில்லையானால் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அறிவு முதிர்ச்சி என்பது நடத்தையில் முதிர்ச்சி; சிந்திப்பதில் முதிர்ச்சி; மனோநிலை முதிர்ச்சி. அ) நடத்தையில் முதிர்ச்சி எதை எங்கு பேசுவது? யாருடன் எதைச் […]

03) அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு

அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல் இருக்கும்; ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும். காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார். ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு! உறங்கச் செல்வதும் இப்படித் தான். இப்படித் தனது தினசரி நடவடிக்கைகளையே […]

02) இஸ்லாமிய நிர்வாகம்

முன்மாதிரி  நிர்வாகி கைஸான் எனும் ஜப்பானிய நிர்வாகவியல் தான் உலகில் முறைப்படுத்தப்பட்ட கல்வியாக முதன்முதலில் வரையறுக்கப்பட்டது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாம், நிர்வாகவியலை தனித் துறையாக, கல்வி முறையாக அதை முறைப்படுத்தி உலகிற்குத் தரவில்லை என்றாலும் 1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நிர்வாக அமைப்புகள் இன்று வரை உலகில் நடைமுறையில் இருப்பதைக் காண முடிகின்றது. ஒரு நாட்டை நிர்வாகம் செய்வதற்கென கிராம […]

01) முன்னுரை

உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா. ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான். உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு எது? அதிகம் புயல் வரும் […]