Category: திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்பு

u478

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்தச் சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட் கொடைகளில் மிகப்பெரிய அருட் கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்தக் குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம்’ என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் […]

முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆன் பல சிறப்புகளை உள்ளடக்கிய இறைவேதமாகும். அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை; ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றில் சில அத்தியாயங்களை ஓதுபவருக்குப் பல சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இருந்தாலும் பல அத்தியாயங்களை சிறப்பித்து வரும் பெரும்பாலான செய்திகள் ஆதாரம் அற்றவையாகவே உள்ளன. இந்த ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பலர் அமல் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் புதிதாக இந்தச் செய்திகளைக் காண்பவர்களுக்கும் […]

கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். அவற்றின் முழு விவரத்தைக் காண்போம். வானவர்கள் விரும்பும் அத்தியாயம் பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு  எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை […]

துகான் அத்தியாயத்தின் சிறப்புகள்

பாவமன்னிப்பு கிடைக்கும் அத்தியாயம் “யார் (வெள்ளிக் கிழமை) இரவில் ஹாமீம் துகானை ஓதுகிறாரோ அவருக்காக எழுபதாயிரம் வானவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ: 2813) இந்த செய்தியில் இடம் பெறும் நான்காவது மற்றும் ஆறாவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் ஆவார்கள். இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் அபீகஸ்அம் என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள், இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்களும் […]

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம். முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம் “ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்” என்று மஸ்ரூக் என்பவர் கூறினார். நூல்: முஸன்னப் இப்னு அபீ ஸைபா (பாகம்: 7 பக்கம்: 148) ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 2, பக்கம்: 95) இந்த ஹதீஸை மஸ்ரூக் என்பவர் […]

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள்

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் யாஸின், வாகிஆ, முல்க் போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருப்பதைப் போன்று இந்த அத்தியாயம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. எனினும் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்து விட்டு பலவீனமான செய்திகளைப் பின்னர் பார்க்கலாம்.   தேள் கடிக்கு மருந்து நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தினர் […]

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகளை பாப்போம். வசனங்களின் தலையானது ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 2803) இந்த செய்தி ஹாகிம் (பாகம் 2 பக்கம் 285 286) […]

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை முதலில் காண்போம். விரண்டோடும் ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பாளர்: அபூஹரைரா(ரலி) (முஸ்லிம்: 1430),(திர்மிதீ: 2802),(அஹ்மத்: […]