
இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகமான இமாம்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்த ஒரு துறை உண்டு என்றால் அது ஹதீஸ் துறைதான். அந்த அளவுக்கு அத்துறை அந்த இமாம்களின் வாழ்நாள் சேவையைத் தன்பால் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான். (புகாரி: 3461) அதற்காகத் தான் நபித்தோழர்கள் முதல் ஹதீஸ்களை நூல்களில் பதிவு செய்த புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் காலம் […]