Category: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

u469

13) பெண்களின் ஆடை அணிகலன்கள்

v4வண்ண ஆடைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிறங்களிலும் ஆடை அணிந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 166)வது ஹதீஸில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 376)வது ஹதீஸில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு நிற  ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 5823, 5824)வது ஹதீஸ்களில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பச்சை நிற  ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 5825)வது ஹதீஸில் உள்ளது. […]

12) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை

v412) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகி விடும். عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: جَاءَتْ أَمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ اللهِ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا […]

11) தொடர் உதிரப்போக்கு

v411) தொடர் உதிரப்போக்கு மாதவிடாய் மாதாமாதம் குறிப்பிட்ட நாட்கள் இரத்தம் வெளிப்பட்டு நின்று விடும். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் இப்படி ஏற்படும். அதாவது மாதத்தில் சில நாட்கள் இரத்தப் போக்கும் பல நாட்கள் இரத்தப் போக்கு இல்லாமலும் இருக்கும். இது தான் மாதவிடாயில் சேரும். சில பெண்களுக்கு மாதம் முழுவதும் இரத்தப் போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். தூய்மையாகுதல் என்பதே இவர்களுக்கு ஏற்படாது. இது மாதவிடாயில் சேராது. உதிரப் போக்கு எனும் நோயாகும். இது லட்சங்களில் […]

10) உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்

v4உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகி விடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும், பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை. عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் […]

9) மாதவிடாய்ச் சட்டங்கள்

v49) மாதவிடாய்ச் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் செய்யத்தக்க காரியங்களும், செய்யக் கூடாத காரியங்களும் இஸ்லாமில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   மாதவிடாயின் போது தொழக் கூடாது நோன்பு நோற்கக் கூடாது    فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

8) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

v48) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? المستدرك على الصحيحين للحاكم   – ، أَنَّ أَبَا طَلْحَةَ دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، […]

7) பெண்களுக்கு தனி பயான் செய்யலாமா?

v4பெண்களுக்கு மட்டும் தனியாக மார்க்க உரை நிகழ்ச்சி நடத்தலாம்.  قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ பெருநாள் உரை பெண்களுக்கு கேட்கவில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்கள். (புகாரி: […]

6) ஆண்களுடன் பெண்கள் பேசலாமா?

v4மஹ்ரமாக இல்லாத ஆண்களுடன் பெண்கள் பேசக் கூடாது. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்ற நம்பிக்கை சில முஸ்லிம்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறாகும். ஆணாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏராளமான பெண்கள் கேள்வி கேட்டுள்ளனர். பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்கும் காலம் இத்தா காலமாகும். இந்தக் கால கட்டத்தில் பெண்களுடன் பேசலாம் என்று ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதிக்கிறான். (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ […]

5) ஆண்களுக்கு சலாம் கூறலாமா

v4ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம். ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற கூற்றாகும். 938 – عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ، فَتَجْعَلُهُ فِي […]

4) ஆண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

v4கணவனை மனைவி தொட்டாலும், மனைவியை கணவன் தொட்டாலும் அல்லது வேறு ஆண்களைப் பெண்கள் தொட்டாலும், வேறு பெண்களை ஆண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று ஷாபி மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளது. ஹஜ்ஜுக்குச் செல்லும் போது, தவாப் செய்யும் போது ஆண்கள் மீது பெண்களின் கைகள் படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உளூ நீங்கி விடும். எனவே ஹஜ்ஜுக்கு போகும் போது ஹனபியாக மாறிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஹஜ் நிறைவேறாமல் போகும் என்றெல்லாம் பத்வாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக […]

3) பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?

v4பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா? மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் […]

2) பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்

v4பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள் தொழுகையின் பெரும்பாலான சட்டங்கள், தொழும் முறை ஆகியவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையாகும்.  وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி: 631) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ அப்படித்தான் ஆண்களும் பெண்களும் தொழ வேண்டும். எனது மனைவிமார்கள் தொழுவது போல் பெண்கள் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனி வழியைக் […]

1) முன்னுரை

v4இஸ்லாம் மார்க்கத்தின் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும் பெண்களுக்கு மட்டும் தனியான சட்டங்களும் உள்ளன. அந்தச் சட்டங்களை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது. தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள் இல்லற வாழ்க்கை குறித்த பெண்களுக்கான சட்டங்கள் பெண்களின் ஆடைகள் அலங்காரங்கள் ஆபரணங்கள் குறித்த சட்டங்கள் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் ஆகிய நான்கு தலைப்புகளுக்குள் பெண்களுக்கான அனைத்துச் சட்டங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளோம்.