
ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. (அல்குர்ஆன்: 04:103) ➚ அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: (புகாரி: 631) ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். […]