Category: இஸ்லாமியக் கொள்கை

u463e

பாடம் 14 ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை

v4நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். இறைவா நான் உனது அடியான். உனது அடியானின் மகன். எனது நெற்றிமுடி உன் கைவசமிருக்கிறது. என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன. உனது விதியில் நேர்மையே உள்ளது. உனக்கு நீயே சூட்டிக் கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத் தந்த அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய திருநாமங்கள் ஒவ்வொன்றின் மூலமும் திருக்குர்ஆனை என் இதயத்தின் […]

பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்

v4கேள்வி 1 : மார்க்கத்தில் புகுந்துள்ள அனாச்சாரங்களில் நல்லவை, அழகானவை என்று ஏதேனும் உண்டா? பதில் : மார்க்கத்தில் புகுந்துவிட்டுள்ள அனாச்சாரங்கள் அனைத்துமே வழிகேடானவை தான். அவற்றில் அழகானவை நல்லவை என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3) ➚ என்ற திருவசனத்தில் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதாக இறைவன் […]

பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்

v4அ.திருக்குர்ஆன், ஹதீஸ் கேள்வி 1 : அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆனை அருளினான். பதில் : அதன் வழியில் நடப்பதற்கே அல்லாஹ் திருக்குர்ஆனை அருளினான். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! (அல்குர்ஆன்: 7:3) ➚ என்று இறைவன் கட்டளையிடுகின்றான். திருக்குர்ஆனைப் படியுங்கள். அதன்படி நடங்கள். அதைக் கொண்டு (பிழைப்பு நடத்திச்) சாப்பிடாதீர்கள். (அஹ்மத்: 14981, 14986, 15110, 15115, 15117) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள். கேள்வி 2 : […]

பாடம் 10,11

v4பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல் கேள்வி : முஸ்லிம்கள் தமக்கிடையே எழுகின்ற பிரச்சினைகளில் எதன்படி தீர்ப்புக் கூற வேண்டும்? பதில் : இறைமறை வழியிலும் நம்மபத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகள் வழியிலும் தான் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காண வேண்டும் ஏனெனில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! (அல்குர்ஆன்: 5:49) ➚ என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். இறைவா நீயே மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவன். உனது அடியார்களுக்கிடையில் அவர்கள் […]

பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை

v4கேள்வி 1 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும்படி நாம் யாரிடம் கேட்க வேண்டும்? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்காகப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கும்படி அல்லாஹ்விடம் தான் நாம் கேட்க வேண்டும். பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:44) ➚ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு திருத்தூதருக்கும் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு. […]

பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?

v4கேள்வி 1 : இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா? பதில் இறைவனிடம் இறைஞ்சிட அனுமதிக்கப்பட்ட துணைச் சாதனம், அனுமதிக்கப்படாத துணைச் சாதனம் என இரண்டு வகைகள் உண்டு. அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனது பண்புகள் நாம் செய்யும் நல்லறங்கள் ஆகியவற்றை நமது பிரார்த்தனைகளில் துணைச் சாதனங்களாக்கி இறைஞ்சுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 7:180) ➚ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு […]

பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்

v4கேள்வி 1 : இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது? பதில் : ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வது தான் இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன்: 18:110) ➚ என்று இணை வைத்தலின் சிறிய வடிவம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். ஒரு நல்லறத்தைப் […]

பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்

v4கேள்வி 1 : இணை வைத்தலின் பெரிய வகையினால் விளையும் கேடு என்ன? பதில் : இணை வைத்தலின் பெரிய வகையினால் நிரந்தரமாக நரகத்தில் கிடந்து வேக நேரிடும். அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என அல்லாஹ் எச்சரிக்கிறான். (அல்குர்ஆன்: 5:72) ➚ அல்லாஹ்வுக்கு ஏதாவதொன்றை இணை கற்பித்தவனாக எவன் அவனைச் சந்திக்கிறானோ அவன் நரகத்திற்குத் தான் போவான். […]

பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்

v4அ. உதவிக்கு அழைத்தல் கேள்வி 1 : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கலாமா? பதில் : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கக் கூடாது. அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:20) ➚,21 நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் […]

பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்

v4கேள்வி 1 : அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது? பதில் : அல்லாஹ்விடம் மிகப் பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும். என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 31:13) ➚ என்று லுக்மான் அவர்கள் தமது மகனுக்கு அறவுரை கூறியதாக இறைவன் குறிப்பிட்டிருப்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும். பாவங்களில் மிகப் பெரியது எது? என நபிகள் நாயகம் […]

பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

v4கேள்வி 1 : நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் யாவை? பதில் : அல்லாஹ்விடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன. முதலாவது : அல்லாஹ்வை நம்புவதும், அவன் ஒருவனை மட்டுமே நம்பி அவனை ஏகத்துவப்படுத்துவதாகும். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. என்று அல்லாஹ் குறிப்பிடகிறான். (அல்குர்ஆன்: 18:107) ➚ நான் அல்லாஹ்வை நம்பினேன் என்று கூறிய பின்னர் (அந்த நம்பிக்கையில்) நிலைத்து நிற்பீராக […]

பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்

v4கேள்வி 1 : அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்? பதில் : தன்னை வணங்கும்படி மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான். அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன்: 16:36) ➚ கேள்வி 2 : படைத்துப் பரிபாலனம் செய்வதில் இறைவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன? பதில் : படைத்துப் பரிபாலிப்பது, […]

பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை

v4கேள்வி 1 : அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்? பதில் : அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே வணங்க வேண்டுமென்பதற்காக அவன் நம்மைப் படைத்தான். என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) ஜின்னையும், மனிதனையும் நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன்: 51:56) ➚ அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே அவர்கள் வணங்குவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 2856, 5967, 6267, 6500, 7373) கேள்வி […]

முன்னுரை

v4சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து கொள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஜமீல் ஜைனூ அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம். மொழிபெயர்ப்பு : பீ.எஸ். அலாவுத்தீன் கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்நூல் மக்தப்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பாடநூலாக வைக்க ஏற்ற நூலாகும். பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும் பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் பாடம் 4 […]