Category: கப்ஸா நிலைக்குமா?

u463d

முடிவுரை

v4ஜெபமணியின் அவதூறு நூலுக்கு நம்மால் இயன்றவரை நாகரீகமாகவும் விளக்கமாகவும் பதிலளித்துள்ளோம். அவரது நடைக்கும் தரத்துக்கும் நாமும் இறங்குவதற்கு நமது மார்க்கமான இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சில அன்பர்கள் இப்பிரசுரத்தை இலவசமாக வெளியிடுவதற்குரிய செலவை ஏற்றுள்ளனர். அவர்கள் ஏற்ற போது இருந்ததை விட பன் மடங்கு காகிதத்தின் விலை ஏறிவிட்டதால் சுருக்கமான முறையிலே மறுப்பளித்துள்ளோம். ஜெபமணியின் எதிர் விளைவைப் பொறுத்து தேவைப்பட்டால் மிக விரிவாக மற்றொரு நூல் இன்ஷா அல்லாஹ் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வஆகிரு தஃவானா அனில் […]

விமர்சனம் 41

v4ஈஸா அலைஹிவஸல்லம் என்ற சொல்லிலிருந்தே இஸ்லாம் என்பது பிறந்தது என்கிறார் ஜெபமணி. ஜெகன் மேரி என்பதிலிருந்து தான் ஜெபமணி பிறந்தது என்றும், பார்த்து திருடுபவர் என்பது தான் பாதிரியார் என்று திரிந்தது என்றும், முருகவேல் என்பதே சாமுவேலானது என்றும் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே அளவு முட்டாள்தனமானது ஜெபமணியின் இந்த அரிய கண்டுபிடிப்பு. இறுதி விமர்சனம் தனது நூல் நெடுகிலும் இயேசு பற்றி பைபிள் கூறும் வசனங்களை அள்ளித் தெளித்து அவரைக் கடவுளாக்க முயன்றுள்ளார். பைபிளை வேதமென […]

விமர்சனம் 37,38,39,40

v4விமர்சனம் 37 3:64 இயேசுவின் மத்தியஸ்தால் ஒன்றுபடவும் எனக் கூறுவதாகக் கூறுகிறார். 3:64ல் மனிதர்களை அதாவது இயேசுவைக் கடவுளாக்குவதில்லை என்று கூறி இறைவனுக்கு இணை வைக்காதிருந்தால் நாம் ஒன்று படலாம் என்ற அழைப்பு விடப்படுகிறது. இதையெல்லாம் படிக்கும் வாசகர்கள் இந்த டுயூப்லைட்டிற்கா பதில் சொல்ல வேண்டும் என்று எண்ணிவிடாதீர்கள் ஏனென்றால் டியூப்லேட்டாவது தாமதாமாகவாவது எரிந்து விடுமன்றோ. விமர்சனம் 38 2:248 . 61:9 . 2:38. 129 .160 .40:53 .54 ஏசுவின் மார்க்கமே சகல மார்க்கத்தையும் […]

விமர்சனம் 33,34,35,36

v4விமர்சனம் 33 7:157 , 3:164 இயேசு பாவ விலங்கை விலக்கியவர் என்று கூறுவதாக ஜெபமணி தெளிவடைந்துள்ளார் (பக்கம் 79) 3:164 வசனம் நபி (ஸல்) அவர்களையே கூறுகிறது என்பதை முன்னர் விளக்கினோம் 7:157 வசனம் சொல்வதென்ன என்பதை இனிமேல் காண்போம். மோசேவுக்கு அருளப்பட்ட தவ்ராத்திலும் ஏசுவுக்கு அருளப்பட்ட இஞசீலிலும் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை பற்றிக் கூறப்பட்டதையும் அந்த முஹம்மது பாவ விலங்கை அகற்றுவார் எனவும் அவ்வசனம் கூறுகிறது. ஏசுவுக்கு அருளப்பட்ட வேதத்திலேயே இனி வருபவர் […]

விமர்சனம் 28,29,30,31,32

v4விமர்சனம் 28 குர்ரான் 3;45. 4;71 இயேசு இறைவனின் வார்த்தையானவர் என்று கூறுவதாக ஜெபமணியார் கூறுகிறார். கலிமத்துல்லாஹ் இறைவனின் வாக்கு என்று குர்ஆன் ஈஸா (அலை) அவர்களைக் கூறுவது உண்மையே. இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் இறைவனின் உத்தரவால் படைக்கப்பட்டதால் இறைவன் அவ்வாறு கூறுகிறான். இதனால் தேவ மைந்தன் ஆகி விட முடியுமா? ஆகி விட முடியும் என்றால் 3:30 வசனத்தில் யஹ்யாவையும் இறைவன் க லிமதுல்லாஹ் என்று கூறுகிறான். அதற்கும் இது தான் பொருளா? யஹ்யாவும் […]

விமர்சனம் 25,26,27

v4விமர்சனம் 25 குர்ரான் 2:196 . 37:107 ஆகியவை ஆபிரஹாம் இஸ்மவேலைப் ப லியிட்டதாகக் கூறுகிறது என்கிறார் ஜெபமணியார். (பக்கம் 7) மனிதப் பலியின் மீதே தன் மதத்தின் அஸ்திவாரம் அமைந்துள்ளதால் அவருடைய பார்வை இப்படிப் போகின்றது. ஆபிரகாம் இஸ்மவேலைப் ப லியிட முயன்றதும் அதன் பின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இஸ்மவேலுக்குப் பதிலாக ஒரு ஆட்டைப் ப லியிட்டதும் தான் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியாகும். விமர்சனம் 26 குர்ரான் 17:94 95 இறைவன் மனிதன் மத்தியில் […]

விமர்சனம் 24

v4உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் கையிலுள்ள குர்ஆன் புத்தகத்தின் பக்கம் 13ல் இதன் ஆசிரியர் விவரித்துள்ளார். இங்கே 454 வசனங்கள் ஆயிஷாவின் வசனங்களுக்கு மாறுபாடாக உள்ளது. ஆயிஷா அவ்வசனங்களைத் திருத்தி சேர்த்ததாகவும் அறிவித்தது என்று திருவாய் மலர்ந்துள்ளார் ஜெபமணி. இவர் குறிப்பிட்ட புத்தகத்தில் என்ன உள்ளது என்பதைக் கூறும் முன் ஜெபமணியன் அறிவீனத்தைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகி விட்டது. முன்னர் கி பி எட்டாம் நூற்றாண்டிலேயே குர்ஆன் எழுதப்பட்டது என்று கூறியவர் இங்கே […]

விமர்சனம் 18

v4இப்படி இருக்க இசுலாம் சகோதரத்துவம் ஜாதி பேதமற்ற மார்க்கத்தைக் கொண்டது என்று கூறுவது பண்பாட்டுக்கு ஒவ்வாது என்பது நம் கருத்து. தமிழக அரசு முஸ்லி ம்களில் 8ஜாதியரை ஞ்.ர்.ம்.ள்.ய்ர் 1564 30லி7லி85 ல் குறிப்பிடுகிறது ஆகவே தமிழகத்தில் முஸ் லிம்கள் மத்தியில் 8க்கும் அதிகமான ஜாதி பிரிவுகள் உண்டு என்பது தெளிவாகிறது. என்கிறார் ஜெபமணி (பக்கம் 31) ஒரு மதத்தை ஒரு கட்சியை விமர்சனம் செய்வது என்றால் அந்த மதத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டும். அந்த மதத்தின் […]

விமர்சனம் 16,17

v4விமர்சனம் 16 பலதார மணம் பற்றியும் ஜெபமணி கிண்டல் செய்திருக்கிறார். அதற்கு நமது அல் ஜன்னத் இதழில் வெளிவரும் மாற்றாரின் பார்வையில் இஸ்லாம் என்ற தொடர் கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதால் அதற்கான நியாயங்களை இங்கே கூறுவது கூறியது கூறலாகி விடும். அதனால் அதைத் தவிர்ப்போம் . ஆனால் ஜெபமணி ஒப்புக் கொண்ட பைபிள் பல தார மணம் பற்றிக் கூறுவதை மாத்திரம் ஜெபமணிக்கு எடுத்துக் காட்டுவது இங்கு அவசியமாகிறது. ஆபரகாமுக்கு சாரா என்றொரு மனைவி […]

விமர்சனம் 15

v4இப்படியாக பதர் யுத்தத்தால் மெக்காவாசிகளை முகமது உடனிருந்து வெற்றிக் கொண்டார். இது முதல் முகமதுவின் புகழ் பரவ ஆரம்பித்தது. மெக்காவாசிகள் மதினாவிலுள்ள யூதர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு உஹித் என்ற போரில் முகமதுவின் படையினரை படுதோல்வி அடையச் செய்து விட்டனர். ஆயினும் மதினா நகரைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. யூதர்கள் இந்தப் போரில் மெக்காவாசிகளுக்கு வஞ்சகமாக உதவியதை அறிந்து முகமது யூதர்களில் 800 பேரைக் கொன்று அவர்களின் பெண்களைச் சிறைபிடித்து மனையாட்டிகளாக்கிக் கொண்டனர். இது மதினா மக்களுக்கு பெரும் […]

விமர்சனம் 14

v4மெக்கா வர்த்தகர்கள் மதீனாவைக் கடந்து செல்லும் போதெல்லாம் மெதினா வாசிகள் வஞ்சம் தீர்க்கும்படி அவர்களைக் கொள்ளையடித்தனர். இப்படிக் கொள்ளையடிப்பதைத் தங்கள் மதத்தின் படி மார்க்க யுத்தம் என்கிறார்கள் என்று கூறுகிறார் ஜெபமணியார் (பக்கம் 25) மக்கா மதீனா ஆகிய ஊர்கள் இன்று ஒரு நாட்டின் இரண்டு நகரங்களாக உள்ளன. ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதினா சென்ற பிறகு மக்காவில் தனி ஆட்சியும் மதினாவில் தனி ஆட்சியும் நடந்து வந்தன. மதினாவின் ஆட்சித் தலைவராக நபிகள் […]

விமர்சனம் 13

v4இனி அடுத்த விமர்சனத்திற்கு வருவோம். இசுலாமிய வரலாறு என்ற தலைப்பில் அவர் கூறுவதைக் கேளுங்கள். இது காலத்தில் கத்தோலிக்கர், சேசு, மரியாள், சூசை சிலைகளைக் கொண்டு தங்கள் மதத்தை விருத்தி செய்துள்ளதையும் அறிந்து சிலையின்றி மதம் நிலையாது என்பதை முஹம்மது கண்டார். ஆகவே மெக்காவில் வணக்கத்திலிருந்த கஃபா கல்லைத் தங்கள் ஆதி தகப்பன் ஆபிரகாம், இஸ்மவேலைப் பலியிட்ட கல் இந்தக் கஃபா கல் என்று விளம்பி அந்தக் கல்லை தம் மதத்துக்கு அஸ்திபாரம் ஆக்கத் திட்டமிட்டார். இந்தக் […]

விமர்சனம் 12

v4மேற்படி நூலுல் பக்கம் 32. 33லும் 36. 37 லும் 38. 39 லும் ஜெபமணியின் உளறல்கள் உச்சகட்டமான உளறல்களாக உள்ளன. அந்த இடங்களில் அவர் கூறுவதை அப்படியே தந்து விட்டு விரிவாக அவற்றை அலசுவோம். இசுலாத்தின் மதநூலான குர்ரானில் வர்காபின் முகம்மதுவுக்குப் போதித்த யூத கிறிஸ்துவ வேதத்திலிருந்து அறுபது சதிவீதமான வசனங்களையும் கத்தோலிக்க விக்கிரக வணக்கத்தாரிடமிருந்து இருபத்தைந்து சதவீதமான வசனங்களையும் மீதமானவைகள் முகமது பேசிய நிர்வகித்தவற்றிலிருந்தும் தொகுத்து குர்ரானை அமைத்துள்ளார் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். […]

விமர்சனம் 11

v4கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழி இலக்கிய நடைக்குக் கொண்டு வரப்பட்டது என்று அரபு சரித்திரம் கூறுகிறது. அதன் பின்னரே குர்ரானும் ஹதீஸும் இலக்கிய வடிவில் எழுதப்பட்டதாக இஸ்லாமிய சரித்திரங்கள் கூறுகிறது. அதாவது முஹம்மதுவின் காலத்தில் அரபு பேச்சு மொழியாக மாத்திரமே இருந்தது. எழுத்து இலக்கியங்கள் இருக்கவில்லை. முகம்மதுவின் சீடர்கள் உம்மிகள். முகமதுவிடம் மனனமாக அறிந்தவற்றையே கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்டது. உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் […]

விமர்சனம் 10

v4ஜெபமணியின் கருத்து மோசடிகளைச் சொல்லிக் கொண்டே போனால் நீண்டு விடும். எனவே இறுதியாக மிக முக்கியமான மோசடி ஒன்றை குர்ஆனின் பெயரால் செய்திருப்பதை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது. 19:19. 3:39 லும் ஏசுவை குலமன் சக்கியான் (பரிசுத்தர்) இப்னுல்லாஹ் (தேவ மைந்தர்) என்றும் கூறியுள்ளது (பக்கம் 55) இஸ்லாம் எந்த தேவ மைந்தன் கொள்கையை ஆழமாகவும், அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் குர்ஆன் நெடுகிலும் மறுத்துரைக்கின்றதோ அந்தக் கொள்கையே குர்ஆனில் உள்ளது என்று கூறச் துணிந்து விட்ட இந்த மோசடிப் […]

விமர்சனம் 9

v4முஹம்மதுவின் 40 வது வயதில் யூத சடங்காச்சாரத்திற்கு ஏற்ப ஹிர்ரா மலைக் குகையில் தங்கி கிபி 610 ல் உபவாசித்து வந்தார். இது சமயம் குர்ரா என்ற ஒ லியில் திகிலடைந்து பயந்து நடுங்கி கதீஜாவிடம் வந்தார். கதீஜாள் தன் உறவினரான வர்காபினுக்குத் தெரிவித்து அவர் முஹமதுவுக்குக் கேட்ட சத்தம் குறித்து தெளிவுபடுத்தினார். முகமதுவை ஆண்டவனுக்கு ஊழியக்காரன் ஆகும்படி ஆலோசனை கொடுத்தார். அவர் வேத சத்தியத்தையும் போதித்தார் என்பதையும் குர்ரானில்16:103. 6:7. 80:15. 69:39. 4ல் காண்கிறோம் […]

விமர்சனம் 6,7,8

v4விமர்சனம் 6 (குர்ஆன்: 25:48) ➚. 27:63 பரிசுத்த ஆவியானவரை மழை காற்றாக உவமிக்கின்றது 2;87 66;12ல் இந்த துய ஆவியால் ஏசு பிறந்ததாவும் கூறுகிறது. (பக்கம் 51) என்று ஜெபமணி எழுதுகிறார். நமது பதில் ஆனால் இவ்வசனங்கள் கூறுவதென்ன? அல்லாஹ் நிழலைக் கூட்டிக் குறைப்பது பற்றியும் சூரியனை நிழலுக்கு முன்னோடியாக்கியது பற்றியும் இரவை சிரமபரிகாரத்திற்குரிய நித்திரைக்காகவும் பகலை நடமாட்டத்துக்காகவும் படைத்தது பற்றிக் கூறிவிட்டு அடுத்த வசனங்களில் அவன் தான் அருள் மாரிக்கு முன்னதாக காற்றை நன்மாராயமாக […]

விமர்சனம் 5

v4அவரது மோசடியையும் அறியாமையையும் இன்னும் பாருங்கள்(குர்ஆன்: 21:42) ➚ல் பகலிலோ இரவிலோ மானிடர் அறியாத வேளையில் வருகிறவர் நரக வேதனையி லிருந்து விடுவிப்பவர் என்றும் கூறுகிறது என்கிறார் ஜெபமணி (பக்கம்50) நமது பதில் அதாவது இத்தகைய தன்மை ஏசுவுக்கு உண்டு என்றும் அவரையே இவ்வசனம் கூறுகிறது என்றும் குறிப்பிடுகிறார் ஜெபமணி. உண்மையில் அந்த வசனம் கூறுவது என்ன? இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையிலிருந்து எங்களை இரட்சிப்பவர் யார் என்று நீர் கேளும் (அல்குர்ஆன்: 21:42) ➚ […]

விமர்சனம் 4

v4இன்னும் திருக்குர்ஆனின் வசன எண்களைக் குறிப்பிட்டு இவர் செய்துள்ள தில்லுமுள்ளகள் ஏராளம். இவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக கூறும் மேற்கோள் நூலான தமிழ்க் குர்ரான் ஆ.கா.அப்துல்கமீது பாகவியின் மொழி பெயர்ப்பு ஆகும். (பக்கம்111) நம்மிடம் அந்தத் தமிழ்க் குர்ரான் உள்ளது. இவர் எண்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் வசனங்களின் விளக்கத்தை அதே எண்ணில் தேடிப் பார்க்கும் போது இவரின் பித்தலாட்டங்கள் அப்பட்டமாக அம்பலமாகின்றன. சான்றுக்குச் சிலவற்றைக் காண்பிப்போம். 20:90. 19:18. 19:87 ல் கியாமத் (நியாயத் தீர்ப்பு) […]

விமர்சனம் 3

v4முகமது வரலாறு என்ற தலைப்பில் (பக்கம்23) வாயில் வந்தவாறு எல்லாம் உளறிக் கொட்டிவிட்டு அவர் மட்டும் தெளிவடைந்திருக்கிறார். அந்தத் தலைப்பில் கதீஜாப் பிராட்டியார் யூத, சிரிய, கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். முகமது, கதீஜாள் மூலம் சத்திய வேதத்தை மார்க்கத்தை அறிந்தார். கதீஜாவின் உறவினரும் போதகருமான வர்காபின் என்பவரைக் கொண்டு சத்தியத்தைத் தெளிவாக அறிந்து வந்தார். (அதாவது கிறிஸ்தவ மதத்தையும் பைபிளையும் கூறுகிறார் ஜெபமணி) கி பி 619ல் கதிஜாள் மரித்தாள். முகமது சகல ஆஸ்திகளுடன் தன் […]

விமர்சனம் -2

v4முஸ்லிம்கள் தேவனை அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அதே வேளை மானிடரில் சிறப்பானவரையும் அல்லாஹ் என்றே அழைக்கிறார்கள். நோவாவை சாதிக் அல்லாஹ் என்றும் இயேசுவை கலாமத்துல்லாஹ் என்றும் கிறிஸ்துவை முகீமின் அல்லாஹ் என்றும் இவர்களில் பரிசுத்த ஆவியானவராகிய ருஹீமின் அல்லாஹ்வை அறியக் கூடாதவர் என்று நம்புகின்றனர். குர்ஆன் 17;85 இங்கே முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பட்டுக் கூறுவது தேவ மக்களையே என்கிறார் ஜெபமணி. (பக்கம் 39) பதில் – 2 நாம் நமது வாழ் நாளிலேயே இது போன்ற […]

விமர்சனம் -1

v4சத்தியத்தை உண்மைப்படுத்தி வருவதாக சொல்லி க் கொள்ளும் மதம் ஒன்று அரபு நாட்டில் முகமது என்பவரால் உண்டாக்கப்பட்டது. இம்மதம் குறித்தே நாம் தெளிவடையப் போகிறோம் என்கிறார் ஜெபமணி (பக்கம் 22) பதில் -1 இஸ்லாத்தைப் பற்றி எவர் வேண்டுமானாலும் விமர்சிப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. அனைத்துக்கும் இஸ்லாம் சரியான பதிலைத் தர தயாராகவே இருக்கிறது. எனினும் ஒரு மதம் குறித்து தெளிவடையப் போவதாகச் சொல்லும் ஜெபமணிக்கு நிச்சயமா அந்த அறிவுத் தகுதி அறவே இல்லை. ஏனெனில் ஒரு […]

முன்னுரை

v4நெல்லையைச் சேர்ந்த ஜெபமணி என்ற கிறித்தவ ஊழியம் செய்யும் ஒருவர் மெய்வழி என்ற பெயரில் 1980 களில் நடத்தி வந்தார். அதில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதே இவரது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இவரது எழுத்துக்களில் எந்த விதமான அறிவுப்பூர்வமான வாதமும் இருக்காது. இந்த நிலையில் இடையிடையே நூல் வடிவிலும் இஸ்லாத்தை ஏசி நூல்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் கஅபா நிலைக்குமா என்ற நூல். 1989 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூல் குறித்து […]