
கணவாயின் ஷைத்தான் பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றி , “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் பாதுகாப்போம். அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள்! கவச ஆடை அணிந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக போர் செய்து பழக்கப் பட்டவர்கள்! பராஃ (ரலி) யின் வார்த்தைகள் முரசாய் முழங்கின. […]