Category: ஜனாஸாவின் சட்டங்கள்

u390

01) வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் குளிப்பாட்டிய பெண்களிடம் ‘இவரது வலப்புறத்திலும், உளுச் செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி (புகாரி: 167, 1255, 1256)

02) ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‘மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்!’ என்று எங்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) (புகாரி: 1254, 1263)

03) கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்

இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) (புகாரி: 1253, 1254, 1259, 1261, 1263) இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

04) குளிப்பாட்டும் போது பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டிய போது அவரது தலையில் போட்டிருந்த மூன்று சடைகளைப் பிரித்து, குளிப்பாட்டிய பின் மூன்று சடைகளைப் போட்டனர். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) (புகாரி: 1260, 1254, 1259, 1262, 1263)

05) குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. ‘நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் இருந்தோம்’ அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) (தாரகுத்னீ: 2)/72 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் இப்னு உமர் (ரலி) கூறுகிறார். அரபு மூலத்தில் குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) பயன்படுத்தியிருப்பதால் […]

06) ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும்.

ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை. ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைப் பெண்கள் தான் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை முன்னரே சுட்டிக் காட்டியுள்ளோம். கணவனை மனைவியும் மனைவியை கணவனும் […]

07) புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது

அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும். உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து ‘இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (புகாரி: 1346, 1343, 1348, 1353, 4080)

08) மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை

* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை. * மய்யித்துக்கு நகம் வெட்டுதல் * பல் துலக்குதல் * அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல் * பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல் * வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல் * ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல் * குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோ, வேறு எதன் மூலமோ நெற்றியில் எதையும் எழுதுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் […]

09) குளிப்பாட்ட இயலாத நிலையில்…

இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் குளிப்பாட்டுவது சாத்தியமாகும். குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட இயலாத நிலை ஏற்படுவதுண்டு. குண்டு வெடிப்பு, வாகன விபத்து போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்றாலும் தீயில் எரிந்து போகவும், துண்டு துண்டாக சிதைக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் […]

10) கஃபனிடுதல்

குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது. கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் முழு உடலையும் மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று நினைக்கிறார்கள். அது போல் பெண்களின் கஃபன் என்றால் அதற்கென சில வகை ஆடைகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். கஃபன் இடுவதற்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. […]

11) அழகிய முறையில் கஃபனிடுதல்

உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும், உள் உறுப்புகளை வெளிக்காட்டாத வகையிலும், ஏனோ தானோ என்றில்லாமலும் நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும். ‘உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை அழகுறச் செய்யட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (முஸ்லிம்: 1567)

12) வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்

கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்; ஆயினும் வெள்ளை ஆடையே சிறந்ததாகும். ‘நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்:(திர்மிதீ: 915), அபூ தாவூத் 3539,(இப்னு மாஜா: 1461),(அஹ்மத்: 2109, 2349, 2878, 3171, 3251) வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட […]

13) வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம்

வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை. ‘உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2739

14) தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல்

தைக்கப்படாத ஆடையில் தான் கஃபனிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தைக்கப்பட்ட மேலாடை, கீழாடை ஆகியவற்றாலும் கஃபனிடலாம். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள் (அதில்) அவரைக் கஃபனிட வேண்டும்’ என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். (சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (புகாரி: 1269, 4670, […]

15) பழைய ஆடையில் கபனிடுதல்

குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்ததும்) நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். தமது இடுப்பிலிருந்து வேட்டியைக் கழற்றி ‘இதை அவருக்கு உள்ளாடையாக்குங்கள்!’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) (புகாரி: 1253, 1254, 1257, 1259, 1261) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த ஆடையைத் தமது மகளுக்குக் கஃபனாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் பழைய ஆடைகளைக் கஃபனாகப் பயன்படுத்துவது தவறல்ல […]

16) உள்ளாடை அணிவித்தல்

இறந்தவரின் உடலை முழுமையாக மறைப்பது தான் கஃபன் என்றாலும் மேலே போர்த்தும் துணியுடன் உள்ளாடையாக மற்றொரு துணியைச் சேர்த்துக் கொள்ளலாம். முந்தைய தலைப்பில் எடுத்துக் காட்டிய ஹதீஸே இதற்கு ஆதாரமாக உள்ளது.

17) இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை

ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் கஃபனிட வேண்டும். இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவரைத் தண்ணீராலும், இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். இவருடைய இரண்டு ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் […]

18) கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல்

கஃபனிட்ட பின் இறந்தவரின் உடலுக்கு நறுமணம் பூசலாம். இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் தடை செய்யப்பட்டதால் அவர் இறந்த பிறகு நறுமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்கச் சொன்னார்கள். இதிலிருந்து மற்றவர்களின் உடலுக்கு நறுமணம் பூசலாம் என்று அறிய முடியும்.

19) தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்

கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். உடம்பை மறைத்துவிட்டு தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹிஜ்ரத் செய்தோம். அதற்கான நன்மை அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். […]

20) கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்…

சில சமயங்களில் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு துணி கிடைக்காமல் போகலாம். அல்லது அதை வாங்கும் அளவுக்கு வசதியில்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் வைக்கோல் போன்ற கிடைக்கும் பொருட்களால் எஞ்சிய பகுதியை மறைக்க வேண்டும். முந்தைய தலைப்பில் இடம் பெற்றுள்ள நபிமொழியே இதற்கு ஆதாரமாகும்.

21) தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும். ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: (முஸ்லிம்: 1779) (1624) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் தொழுகை நடத்தக் […]

22) பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துதல்

இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம். கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான […]

23) போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை

அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் வந்துள்ளதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம். உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (புகாரி: 1343, 1348, 4080) ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் […]

24) பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்:(திர்மிதீ: 952), நஸயீ 1917,(இப்னு மாஜா: 1496),(அஹ்மத்: 17459, 17497) ‘விழு கட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2766,(அஹ்மத்: 17468, 17475) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு […]

25) வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்

ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். ‘இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் […]

26) அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்

ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். ‘எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’ என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) (புகாரி: 458, 460, 1337) இந்தக் கருத்து(புகாரி: 857, 1247, 1321, 1340)ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரது ஜனாஸா தொழுகையில் […]

27) ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாம்

ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) […]

28) பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்துதல்

ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். ‘ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி […]

29) ஜனாஸாவுக்குத் தனி இடத்தை நிர்ணயித்தல்

வீட்டிலும், பள்ளிவாசலிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரிதாகவே நடந்திருக்கிறது. பளளிவாசலில் ஜனாஸாவை வைப்பதற்கு என தனியாக ஒரு இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் அங்கு தான் ஜனாஸாவை வைத்து தொழுகை நடத்தினார்கள். விபச்சாரம் செய்த ஆணையும், பெண்ணையும் யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் இடத்தில் வைத்து அவ்விருவருக்கும் மரண […]

30) பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் (ஹாகிம்: 1)/519 […]

31) பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை

ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே! இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு […]

32) தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல்

‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம்: 1576) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் ‘குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!’ என்றார்கள். நான் சென்று […]

33) தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، قَالَ: سَمِعْتُ أَوْسَ بْنَ ضَمْعَجٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا […]

34) ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை

ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும். ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும். கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை. அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது […]

35) ஜனாஸாவை முன்னால் வைத்தல்

ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி: 383)

36) இமாம் நிற்க வேண்டிய இடம்

இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும். இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும். ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) (புகாரி: 332, 1331, 1332) ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் […]

37) மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா?

ஜனாஸா தொழுகையில் குறைவான நபர்களே வந்தாலும் அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து நிற்க வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள் என்று அபூ உமாமா அறிவிப்பதாக தப்ரானியில் (8/190) ஒரு ஹதீஸ் உள்ளது இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ […]

38) இரண்டு பேர் மட்டும் இருந்தால்…

பொதுவாக ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் இருவரும் அடுத்தடுத்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இருவர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ஜனாஸா தொழுகையில் இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் அவர் இமாமுக்குப் பின்னால் தான் நிற்க வேண்டும். அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். […]

39) உளூ அவசியம்

ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை. ‘தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,(இப்னு மாஜா: 271),(அஹ்மத்: 957, 1019) […]

40) கிப்லாவை முன்னோக்குதல்

மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழ வேண்டுமோ அது போல் ஜனாஸாத் தொழுகையையும் கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும். ‘நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச் செய்து விட்டு கிப்லாவை நோக்கு!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) (புகாரி: 6251, 6667)

41) முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்

மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவராக இருந்தால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும்; நபிவழியுமாகும். யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே? […]

42) பல்வகை மரணங்கள்

ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலை பரவலாக மக்களிடம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், அவர்கள் காலத்தில் மரணித்த பலரது மரணங்களையும் ஆய்வு செய்யும் போது இந்த மனநிலை முற்றிலும் தவறானது என்று அறிந்து கொள்ளலாம்.

43) சிறு வயது அல்லது இளம் வயது மரணம்

ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர். சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர். இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. […]

44) தள்ளாத வயதில் மரணித்தல்

சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள். (புகாரி: 2822, 6365, 6370, 6374, 6390),) இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் […]

45) திடீர் மரணம்

சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள். திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை. திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் திடீர் மரணம் […]

46) கடுமையான வேதனையுடன் மரணித்தல்

சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள். மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும். மரணத்தின் கடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுபவித்த பின், வேறு எவருக்கும் மரணம் கடுமையாக இருப்பதை நான் வெறுக்க மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி: 4446) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடுமையான […]

47) மக்காவிலோ, மதீனாவிலோ மரணித்தல்

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன. (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் […]

48) ஒப்பாரி வைக்கக் கூடாது

கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். ‘இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) […]

49) மூடத்தனமான காரியங்களை செய்யக்கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, ‘இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று உறுதிமொழி எடுத்தனர். நூல்: அபூ தாவூத் 2724 ‘கன்னத்தில் அறைந்து கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மூடத்தனமான வார்த்தைகளைப் பேசுபவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் […]

50) மொட்டையடிக்கக் கூடாது

பொதுவாக ஒருவர் மொட்டை அடிப்பதற்கும், முடி வளர்ப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆயினும் மரணத்திற்கு அடையாளமாக மொட்டை அடிப்பதற்கு அனுமதி இல்லை. கணவன் இறந்ததற்காக மனைவியும் தந்தை இறந்ததற்காக மகனும் மொட்டை அடிக்கும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி மூர்ச்சயைகி விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடி மீது இருந்தது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அலறினார். அவருக்கு […]

Next Page »