
ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில், “மர்ருழ் ழஹ்ரான்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் […]