
இறந்தவர்கள் நல்லவர்களாக இருந்தால் மறுமை நாள் வரும் வரை மண்ணறையில் அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். அவர்களுக்கும், பூமியில் உள்ளவர்களுக்கும் மத்தியில் எந்த விதமான தொடர்பும் இருக்காது. இறந்தவர்களால் உயிருள்ளவர் களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (அல்குர்ஆன்: 7:197) ➚ மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படு கிறது. அதைச் செவிதாழ்த்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் […]