உண்மையான பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன், மிக அழகிய வரலாறு என்று யூசுப் நபியின் வரலாற்றை வர்ணித்து சான்றளிக்கின்றது. யூசுப் நபியின் வரலாறு முழுவதையும் உளப்பூர்வமாக, கூர்ந்து படிக்கும் எவரும் திருக்குர்ஆன் கூறும் இச்சான்றிதழை மறுக்க மாட்டார். அந்த அளவிற்குப் பல சுவாரசியமான, படிப்பினை மிக்க தகவல்களை அது கொண்டுள்ளது. அழகான யூசுப் நபியின் அழகிய வாழ்க்கையைக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் என்ற பெயரில் பல கதைகள் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை யாவும் […]
Category: இப்படியும் சில தஃப்ஸீர்கள்
u315
16) அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாரா ஆதம் நபி?
விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ள பல பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொடரில் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். அதில் மற்றுமொரு அபாண்டமான கருத்தைக் கொண்டுள்ள ஒரு விரிவுரையை இப்போது காண்போம். “அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது […]
15) அரசியின் அன்பளிப்பு எது?
“மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித் தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்” என்றும் கூறினாள். (அல்குர்ஆன்: 27:35) ➚ தனக்குக் கட்டுப்பட்டு தனது அதிகாரத்தின் கீழ் வருமாறும், இஸ்லாத்தை ஏற்குமாறும் நபி சுலைமான் (அலை) அவர்கள், ஸபா எனும் பகுதியின் அரசிக்கு ஓர் கடிதத்தை “ஹுத்ஹுத்” பறவையின் மூலம் அனுப்புகின்றார்கள். அக்கடிதத்தை அரசி […]
14) குர்ஆனை மறந்த நபிகள் நாயகம்?
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர். (அல்குர்ஆன்: 22:52) ➚ இறைத் தூதர்களின் ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்று […]
13) அர்ஷை சுமக்கும் வானவர்கள்
அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். “எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத் தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!” என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர். (அல்குர்ஆன்: 40:7) ➚ வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். “அகிலத்தின் இறைவனாகிய […]
12) அழுது புலம்பிய ஆதம் நபி?
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்து, அவரிடமிருந்து அவருடைய மனைவியையும் படைத்து இருவரையும் சொர்க்கத்தில் தங்குமாறு உத்தரவிட்டான். சொர்க்கத்தில் தாங்கள் விரும்பியதை தாராளமாகப் புசிக்குமாறும், அதேவேளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் பக்கம் நெருங்கக்கூடாது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்தான். ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைவன் தடுத்த மரத்தை அவ்விருவரும் நெருங்கி அதன் கனிகளைப் புசித்தார்கள். இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். எனவே இறைவன் கோபம் கொண்டு சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான். பிறகு தாங்கள் செய்த […]
11) நாற்பது இரவுகள்
மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள். (அல்குர்ஆன்: 2:51) ➚ தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக மூஸா (அலை) அவர்களை தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதற்காக நாற்பது நாட்கள் வாக்களித்து நாற்பதாம் நாள் அவ்வேதத்தை பலகைகளில் வழங்கினான் என்று இது தொடர்பான பிற வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் இறைவன் மூஸா (அலை) அவர்களுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தான் என்று […]
10) அய்யூப் நபிக்கு சிரங்கு நோய்?
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). (அல்குர்ஆன்: 38:41) ➚ அய்யூப் (அலை) ஏதோ ஒரு துன்பத்தால் பாதிக்கப்பட்டு, தமக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததும், அத்துன்பம் விலக இறைவன் கூறிய நிவாரணமும் இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முனைந்த விரிவுரையாளர்கள் தங்கள் கற்பனைகளை, […]
09) ஒவ்வொரு மாதமும் லைலத்துல் கத்ர்?
இப்னுல் அரபியின் திமிர் லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைப் பற்றி இஸ்லாமியர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அனைத்து முஸ்லிம்களும் இதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். வருடந்தோறும் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் களை கட்டுவதும், ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்கள் கூட ரமலான் மாதத்தில் அதிலும் குறிப்பிட்ட நாட்களில் பள்ளிவாசலில் வந்து நிரம்புவதும் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவின் பாக்கியத்தைப் பெறுவதற்காகவே முஸ்லிம்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மகத்துவமிக்க […]
08) மனிதன் சுமந்த அமானிதம்?
வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு ஓர் அமானிதத்தைச் சுமக்குமாறு இறைவன் முன் வைத்திருக்கின்றான். ஆனால் அவைகள், இறைவன் முன்வைத்த அந்த அமானிதத்தைச் சுமக்க மறுத்து விட்டன. பிறகு மனிதன் அதைச் சுமந்து கொண்டான் என்று இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:72) ➚ இறைவன் […]
07) தாவூத் நபியின் தவறு?
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:28) ➚ மார்க்க அறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சத்தை இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் உள்ளவர்களே உண்மையான அறிஞர்கள் என்பதைக் கூறி அறிஞர்கள் என்றாலே இறைவனின் அச்சம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று எடுத்துரைக்கின்றான். அவ்வாறான அறிஞர்கள் தாங்கள் ஆற்றுகின்ற மார்க்கப் பணியில் மனத் தூய்மையைக் கடைப்பிடிப்பார்கள். மக்களுக்கு மத்தியில் சத்தியத்தை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பார்கள். எப்போதும் இறை பயத்தை நினைவில் […]
06) “வன்ஹர்‘ என்பதன் பொருள்
ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும். இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற […]
05) முட்டையிடும் ஷைத்தான்?
மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை போலும். ஒரு விஷயத்தை முழுமையாக, சரியாகத் தெரிந்து கொள்ள அவற்றை ஆய்வு செய்வது அவசியமே. எனினும் நாம் செய்யும் ஆய்வு இறைவன் விதித்த வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்து நமது ஆய்வு அமைவது அவசியம். உதாரணமாக ஒருவர் விதியைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப் போகிறார் எனில் அது தொடர்பாக மார்க்கம் கூறுகிற ஒழுங்கை […]
04) அழுது புலம்பிய ஆதம் நபி (?)
விளக்கவுரை என்பது இறை வார்த்தையையும், இறைத்தூதர்களின் வாழ்க்கையையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு உதவி புரிவதாய் இருக்க வேண்டும். அதை விடுத்து அவ்விரண்டையும் கேலிப் பொருளாக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு விளக்கவுரை அளிக்கும் சிலர் இந்த இலக்கணத்தைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பல விளக்கவுரைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஒரு புறம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு எதிரான, முரணான விளக்கங்கள் என்றால் மறுபுறம் குர்ஆன் வசனங்கள், இறைத்தூதர் அவர்களின் போதனைகள் ஆகியவற்றைக் கேலி செய்யும் […]
03) விஷமத்தனமான விரிவுரை
இஸ்லாத்தை அழிக்க எண்ணும் எதிரிகள், அதன் பிரச்சாரம் மக்களைச் சென்றடையாமலிருக்க விஷமத்தனமான பிரச்சாரங்களைக் கையிலெடுப்பார்கள். இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது; இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்பது கயவர்கள் கையிலெடுக்கும் விஷமப் பிரச்சாரங்களில் சில! இது போன்ற வகையில் சில விஷமத்தனமான விளக்கங்கள் இமாம்களின் பெயரில் தஃப்ஸீர் நூல்களிலும் காணக் கிடைக்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் பிரச்சாரத்தை விட இதுவே மிகவும் அபாயகரமானது. இது இமாம்களோடு தொடர்பாவதால் உண்மை என எளிதில் மக்கள் நம்பி விடுகின்றனர். அது போன்ற […]
02) ஆகுக என்றால் ஆகாது (?)
இறைவன் என்பவன் எதையும் செய்து முடிக்கும் வல்லவன், மகா ஆற்றலுடையவன் என்று அனைத்து முஸ்லிம்களும் அவனது வல்லமையை, சக்தியை சரியாக புரிந்து வைத்துள்ளனர். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பலரின் செயல்பாடுகள் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாய் அமைந்திருந்தாலும் இறைவன் எதற்கும் வல்லமையுள்ளவன் என்ற நம்பிக்கையில் யாரும் குறை வைப்பதில்லை. அவனுடைய ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. இறைவன் தனது ஆற்றலைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான். அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் […]
01) முன்னுரை
இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அருளினான். அப்பழுக்கற்ற இறைவேதத்தின் விளக்கத்தை மனித சமுதாயத்திற்கு விளக்கிட முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக நியமித்தான். திருக்குர்ஆன் என்பது கருத்து மோதல்களற்ற, முரண்பாடுகளில்லாத ஒரு பரிசுத்த வேதம். தூய இறைவனின் தூது வார்த்தைகள். இறைவனே இதற்கு ஆசிரியர் என்பதால் திருக்குர்ஆனில் தவறு என்றே பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் தவறே இல்லாத ஒரு புத்தகம், வேதம் இருக்கும் எனில் அது திருக்குர்ஆன் […]