Category: ஹஜ் உம்ரா

q113

049. பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் தலைசீவுவது கூடாதா?

பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா? பதில் இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி […]

048. பெண்கள் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா?

பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா? பதில் பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) […]

047. காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா?

காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா? செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.

046. இஹ்ராமில் கட் ஷூ அணிந்துக் கொள்ளலாமா?

‘ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா? இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1838) நபி (ஸல்) அவர்கள் […]

045. ஹேர் ஆயில், தைலம், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவதில் அடங்குமா?

வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! […]

044. இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா?

இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா? ஆம் பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் […]

043. நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவது என்றால் என்ன?

ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா? பதில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், […]

042. ஹாஜிகள் பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா?

இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா? பதில்:  இஹ்ராமிற்கு பிறகிருந்தே முடி களையக் கூடாது. இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு […]

041. தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும். யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ செல்பவருக்கு பொருந்தாது. நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு […]

040. இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா?

இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா? இல்லை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா’வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் […]

039. இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா?

இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா? ‘லப்பைக்க உம்ரதன்’ அல்லது ‘அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்’ என்பது மட்டும் போதுமானதா? கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும். “நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி […]

038. அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ….. என்று நிய்யத் உள்ளதா?

நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று நிய்யத் உள்ளதா? இது பித்அத் ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க […]

037. இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை நோக்கி கட்டவேண்டுமா?

இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா? ஆடைக்கு இல்லை. மீக்காத்தில் தல்பியாவின் போது கிப்லாவை நோக்க வேண்டும். இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் […]

036. ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்யலாமா?

துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா?  பதில்:  செய்யலாம் ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர். இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற […]

035. ஒரே பயணத்தில் மீண்டும் உம்ரா செய்தால் இஹ்ராம் எங்கு கட்டுவது?

ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்? அதாவது, ஒரே பயணத்தில் மீண்டும் உம்ரா செய்தால் இஹ்ராம் எங்கு கட்டுவது?  பதில்: ஆயிஷா பள்ளிக்கு சென்று கட்டவேண்டும். உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, […]

034. உம்ரா செய்யும் முறை என்ன? விரிவாக

உம்ரா செய்யும் முறை என்ன? பதில் : இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும். நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். […]

033. ஹரம் பள்ளிவாசலில் தூங்கலாமா?

ஹரம் பள்ளிவாசலில் தூங்கலாமா பதில் : தூங்கலாம் கஅபாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பள்ளிவாசலாக இருந்தாலும், அதில் உறங்குவது தவறான காரியமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. 440 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ أَعْزَبُ لَا أَهْلَ لَهُ فِي […]

032. ஹரமில் தொழுவதன் சிறப்பு என்ன?

இலட்சம் மடங்கு சிறந்தது. ”(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ) مسند البزار = البحر الزخار (10/ 77) 4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن […]

031. மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை பதில் ஆயிரம் மடங்கு சிறந்தது. மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது. 1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ […]

030. உம்ரா மற்றும் 3 வகை ஹஜ் வேறுபாடு என்ன?

உம்ரா – 3 வகை ஹஜ் வேறுபாடு  நபில் தொழுகை 2 ரகஅத், பின் லுஹர் தொழுகை 4 ரகஅத் ஆகியவை எப்படி தனித்தனி வணக்கங்களோ, அதே போன்று உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டும் தனித்தனி வணக்கங்களாகும். உம்ரா என்பது குறைவான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். உம்ரா கட்டாயக் கடமையில்லை. ஹஜ் என்பது கூடுதலான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். பர்ளான தொழுகையைப் போன்று, சக்தி பெற்றவர் மீது ஹஜ் கட்டாயக் கடமை. ஹஜ்ஜை தமத்தூ என்ற […]

029. உம்ரா என்றால் என்ன?

உம்ரா என்றால் என்ன? இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும். அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை. ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட […]

028. நாள் கணக்கின்றி தொடர் உதிரப்போக்கு இருந்தால்?

தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா? பதில் மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: […]

027. கைகளை உயர்த்தி தான் பிரார்த்திக்க வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா? பதில் பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.

026. சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா? சிலர் “துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்” என்கிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா? இல்லை. பொதுவாக எப்போது பிரார்த்தனை […]

025. பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?

கேள்வி என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா? பதில்: ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதில் தடுக்கப்பட்ட எந்த அம்சமும் இல்லை.

024. கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா? ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர் இது சரியா? பதில் : இல்லை கஅபாவை காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும். المعجم الكبير – (ج 8 / ص 169) 7713 – حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن […]

023. உம்ராவின் சிறப்பு என்ன?

உம்ராவின் சிறப்புகள் ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) (புகாரி: 1773) ரமலானில் உம்ரா செய்வதின் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 1782) […]

022. சிறுவயதில் ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா?

நான் எனது தந்தையுடன் சிறுவயதில் ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா? எனக்கு கடமையா? கடமை இல்லையா?  பதில் ஆம். கடமை. சிறு வயதில், அதாவது பருவ வயதை அடைவதற்கு முன்னால் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்டா? என்ற கேள்விக்கு, ”ஆம்! உனக்குக் கூலி உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

021. சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா? பதில்: செய்யலாம். கடமையில்லை. சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து […]

020. முதியவர்கள், நோயாளிகள் ஹஜ் மீது கடமையா?

முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா? பதில்: சக்தியை பொருத்தது. ”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (அல்குர்ஆன்: 3:97) ➚  மேற்கண்ட வசனத்தில் அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை என்று கூறப்படுகிறது. சென்று வரும் […]

019. ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன?

ஹஜ்ஜின் சிறப்புக்கள் ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. ”அமல்களில் சிறந்தது எது?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவது என்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுஎன்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று விடையளித்தார்கள். […]

018. ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு?

ஹஜ் கட்டாய கடமையா? பதில் ஆம். ஹஜ் கட்டாய கடமை என்பதை வழியுறுத்தும் குர்ஆன் வசனம், ஹதீஸ்கள் உள்ளன. சக்தி உள்ள ஆண், பெண் இருவர் மீதும் ஹஜ் கட்டாய கடமையாகும். மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த […]

017. ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?

நான் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  எனக்கு ஹஜ் கடைமையாகிவிட்டது. எப்படி செய்வது?  பதில்: நீங்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டால், உங்களுக்கு ஹஜ் கடைமையில்லை. இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.  ”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் […]

016. ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா? மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும். இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி […]

015.தந்தைக்காக உம்ரா செய்யலாமா?

தந்தைக்காக உம்ரா    செய்யலாமா? பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்கு கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது. 1852 – حدثنا موسى بن إسماعيل، حدثنا أبو عوانة، عن أبي بشر، عن سعيد بن جبير، […]

013. பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா?

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா? அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். (அல்குர்ஆன்: 3:97) ➚ இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம். ஹலாலான வழியில் வந்த எந்தச் செல்வத்தைக் கொண்டும் ஹஜ் செய்வதற்கு தடையேதும் இல்லை. (குறிப்பு: 2004 பிப்ரவரி ஏகத்துவம் […]

012. கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா?

கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா? கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவது ஒரு வகை. வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. உதாரணமாக சொந்த வீடு இருப்பவர் மேலும் ஒரு வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மற்றொரு வீட்டை வாங்குகின்றார். […]

011. ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்யலாமா?

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை இவர்கள் கவனிக்கத் தவறி விட்டதால் இந்தத் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். பொதுவாக வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒருவர் தான் விரும்பிய அளவிற்கு உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் வணக்கங்களை நிறைவேற்றலாம். சுய விருப்பத்தின் […]

010. மதீனா ஸியாரத் அவசியமா?

மதீனா ஸியாரத் அவசியமா? பதில்: ஹஜ்ஜுக்கும், மதீனா ஸியாரத்திற்கம் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு வணக்கம் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் […]

009. ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ்ஜுக்கு செல்லலாமா?

ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ்ஜுக்கு செல்லலாமா? அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்கள் கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் பயணம் பாதுகாப்பாக இருந்தால் ஆண் துணை இல்லாவிட்டாலும் பெண்கள் […]

008. பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? தாய் தந்தையினர் உயிருடன் இருந்தால் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. 1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ […]

007. ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. 3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மாநிறத்திலேயே மிக அழகான […]

006. மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்?

மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்? இஹ்ராம் எல்லைகள் படம் (internet connection required)   ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் இவர் தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 1529حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ […]

005. குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா?

குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா? கூடாது. கொம்பு உடைந்தால் தவறில்லை. குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி), (திர்மிதீ: 1497) (1417), அபூதாவூத் […]

004. ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக […]

003. ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?

ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா? இல்லை. ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும். الكامل في ضعفاء الرجال» (8/ 248): حَدَّثَنَا على بن إسحاق، حَدَّثَنا مُحَمد بْنُ مُحَمد بْنِ ‌النُّعْمَانِ ‌بْنِ ‌شِبْلٍ، حَدَّثني جَدِّي، حَدَّثني مَالِكٌ عَنْ نَافِعٍ، عنِ […]

002. புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . .

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . . டாக்டர் த. முஹம்மது கிஸார் புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல தங்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1977 ஆம் ஆண்டு, சவூதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் […]

001. அன்பளிப்பை கொண்டு ஹஜ் செய்யலாமா?

கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். (அல்குர்ஆன்: 3:97) ➚ இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை […]

« Previous Page