இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் குடும்ப அமைப்பு, நட்பு வட்டாரம், வியாபாரத் தொடர்பு மற்றும் வேறு பலவிதமான தொடர்புகள் என ஏதேனும் ஒரு விதத்தில் இன்னொரு மனிதனைச் சார்ந்திருக்கிறான். சங்கிலித் தொடர்பு கொண்ட மனித சமுதாயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் தனி மனிதனுக்கு உரித்தான உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறாமல் இருத்தல் வேண்டும். மனித உரிமைகளின் பட்டியல் நீண்டு காணப்பட்டாலும் அத்தனை விஷயங்களையும் மூன்று அடிப்படைகளின் கீழ் அடக்கிவிடலாம். […]