Category: திருக்குர்ஆன் விளக்கவுரை

b105c

யாஸீன் விளக்கவுரை-14

v476வது வசனம் 76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன்: 36:76) ➚.) நபியவர்கள் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து கூறிய போது அவர்கள் அதை நம்ப மறுத்தது நபியவர்களுக்கு கவலையளித்தது. மேலும் நபியவர்களையும் விமர்சனம் செய்ததும் கவலையளித்தது. இதிலிருந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகதான் “(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற சில வசனங்களிலும் இவ்வாறு ஆறுதல் கூறுகிறான். (முஹம்மதே!) அவர்களின் […]

யாஸீன் விளக்கவுரை-13

v465 வது வசனம் 65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும். (அல்குர்ஆன்: 36:65) ➚ ➚ மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். வாய்க்கு முத்திரை இடப்படும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது […]

யாஸீன் விளக்கவுரை-12

v458 வது வசனம் 58. ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்று!. (அல்குர் ஆன் : 36 : 58.) இவ்வசனத்தின் துவக்கத்தில் கூறப்படும் ஸலாம் என்பது சொர்க்கவாசிகளுக்கு கூறப்படும் வாழ்த்தாகும். இதை பல வசனங்கள் விளக்குகின்றது. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான். (அல்குர் ஆன் : 33 : 44.) அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள். ஸலாம் ஸலாம் […]

யாஸீன் விளக்கவுரை-11

v450 வது வசனம் 50. அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள். மறுமை நாள் எப்போது நிகழும் என கேலியாக கேட்ட இறைமறுப்பாளர்களுக்கு மரண சாசனம் கூட செய்ய இயலாதளவிற்கு மறுமைநாள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்று இவ்வசனம் பதிலளிக்கின்றது. மரண சாசனம் என்பது ஒருவர் தன் மரணத்தருவாயில் கூறும் விஷயங்களாகும். ஒருவர் தன் மரண வேளையில் தனது சொத்துக்கள் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக கூறுவதை மரண சாசனம் […]

யாஸீன் விளக்கவுரை-10

v442 வது வசனம் 41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று. (அல்குர்ஆன்: 36:41) ➚, 42) ➚.) ஒட்டகமும் ஓர் அத்தாட்சி 42 வது வசனத்தில் அவர்கள் ஏறிச்செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.” என்று உள்ளது. இவ்வசனம் ஒட்டகம் பற்றி குறிப்பிடுகிறது. ஏனெனில் அது கப்பல் போன்றதாகும். ஒட்டகத்தை ஆய்வு செய்யும் போது இதை அறிய […]

யாஸீன் விளக்கவுரை-9

v433, 34, 35 வது வசனங்கள் 33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். 34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக ஏற்படுத்தினோம். அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? இதில் 33 வது வசனத்தில் உள்ள இறந்த பூமியை உயிர்ப்பித்தல் என்பது பற்றி […]

யாஸீன் விளக்கவுரை-8

v425, 26, 27 வது வசனங்கள் 25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்). 26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார். இதில் 25 வது வசனம் வரை நல்லடியார் சொன்ன அறிவுரைகளை அல்லாஹ் கூறிவிட்டு 26 வது வசனத்தில் “சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. […]

யாஸீன் விளக்கவுரை-7

v416, 17 வது வசனங்கள் 16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர். இவ்வரு வசனங்களிலும் அந்த மூன்று தூதர்களும் கூறிய பதில்கள் இடம் பெற்றுள்ளது. இதிலும் நமக்கு பல பாடங்கள் உண்டு. பிரச்சாரகர்கள் மென்மையாக நடக்கவேண்டும் பொதுவாக மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அதை அவர்கள் ஏற்கமறுப்பது மட்டுமின்றி நம்மை பொய்யர் என்றும் விமர்சிப்பார்கள். […]

யாஸீன் விளக்கவுரை-6

v4தஜ்ஜால் உயிர்கொடுப்பவனா? அடுத்து மறுமைநாளின் அடையாளமாக விளங்குகின்ற தஜ்ஜால் என்பவனை பற்றி பார்ப்போம். தஜ்ஜால் மக்களை குழப்புவதற்காக படைக்கப்பட்ட படைப்பினமாகும். அவன் இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாக ஹதீஸ்கள் வருகிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதற்கான விளக்கத்தை காண்போம். நல்லடியாரை கொலை செய்து மீண்டும் உயிர் கொடுப்பான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் […]

யாஸீன் விளக்கவுரை-5

v48, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம் 8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன. 9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது. 10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இந்த மூன்று […]

யாஸீன் விளக்கவுரை-4

v46 வது வசனத்தின் விளக்கம் கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்று இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 36:06) ➚.) இதில் 6 வது வசனத்தில் “முன்னோர் எச்சரிக்கப்படாமல் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக” என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நபியின் சமுதாயத்திற்கு நபியவர்களுக்கு முன் எந்த தூதரும் வரவில்லை. சிலை வணக்கம் போன்றவை கூடாது என்றும் அதனுடைய தீமைகளும் அவர்களுக்கு விளக்கி கூறப்படவில்லை. அதனாலேயே முன்னோர் […]

யாஸீன் விளக்கவுரை-3

v4 மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம் 3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். 4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான். வஹீ மட்டும்தான் நேர்வழி! உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: […]

யாஸீன் விளக்கவுரை-2

v4யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள் சிலர் முழுக் குர்ஆனைவிட அல்லது குர்ஆனிலேயே யாஸீன் சூராவை மிகச்சிறந்ததாக நினைக்கின்றனர். அதனால்தான் யாஸீன் சூராவை மட்டும் தனியாக அச்சடித்து வைத்தல். தனி ஃப்ரேமாக செய்து கடைகளில் மாட்டுதல். இவைகளை வியாபாரம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சில பலவீனமான ஹதீஸ்களும் காரணமாகும். அது பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம். குர்ஆனுடைய இதயம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உள்ளது. குர்ஆனின் இதயம் யாஸீன் […]

யாஸீன் விளக்கவுரை-1

v4முன்னுரை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நல்லதொரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தில் தொடர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம். கடந்த 2018 வருடம் ரமலான் உரையில் திருக்குர் ஆனின் 36வது அத்தியாயமாகிய யாஸீன் சூராவினுடை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அந்த தலைப்பில் தொடர் உரையாற்றுவதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் சார்பில் எனக்கு அளிக்கப்பட்டது. எப்போதும் ரமலானில் ஆற்றப்படும் தொடர் உரைக்கான தலைப்பை தேர்வு செய்ய பல […]

கஹ்ஃப் விளக்கவுரை – 4

v49-26 வது வசனம் “அந்தக் குகை’ எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்தோம். ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு “அந்தக் குகை’ – அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது. முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் […]

கஹ்ஃப் விளக்கவுரை – 3

v46 வது வசனம் கவலையினால் தன்னையே மாய்த்தல் இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள். இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் […]

கஹ்ஃப் விளக்கவுரை – 2

v404) 2, 3 வசனங்கள் தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். (2,3 வசனங்கள்) திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான். அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் […]

கஹ்ஃப் விளக்கவுரை – 1

v401) கஹ்ஃப் பொருள் கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும். அருளப்பட்ட இடம் காலம் இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் […]