Category: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

13) ஏன் இந்த எளிய வாழ்க்கை….

ஏன் இந்த எளிய வாழ்க்கை? நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது. மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது. அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த […]

12) மக்களோடு மக்களாக

மக்களோடு மக்களாக… நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் […]

11) புகழை விரும்பவில்லை

புகழை விரும்பவில்லை நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மூலம் செல்வம் சேர்க்காவிட்டாலும் புகழுக்காவது ஆசைப்பட்டார்களா? எனக் கேள்வி எழலாம். நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற […]

10) நபிகளாரின் சொத்து மதிப்பு

நபிகளாரின் சொத்து மதிப்பு பொதுவாக ஒரு அரசியல்வாதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அனைத்து மக்கள் மீது கடமையாகும். அவர் அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு என்ன? வந்த பின்னர் என்ன சம்பாதித்தார்? எவ்வளவு சேமித்தார்? என மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிக்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்? நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் […]

09) வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும். நபி (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ? என யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை. […]

08) ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி

ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி! மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும் வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது. நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து […]

07) குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர்

குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர் உலகெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பலவகையான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு மிக முக்கிய காரணம், தவறு செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப் படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்ய தூண்டப்படுகிறான். மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களை செய்துவிட்டு தப்பிப்பதற்கு பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, […]

01) முன்னுரை

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனமற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது. பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் […]

06) நீதியை நிலை நாட்டியவர்

நீதியை நிலைநாட்டியவர்! ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்ப்பதற்கு, ‘அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா?’ என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். தாமும் பக்குவப்பட்டு, மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்கு மிக்கவனும், சாமானியனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த அளவுகோல் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் […]

05) நிர்வாக திறன் நிறைந்தவர்

நிர்வாகத் திறன் நிறைந்தவர் ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது. உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும். உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் […]

04) வர்க்க பேதங்களை ஒழித்து கட்டியவர்

வர்க்க பேதங்களை ஒழித்துக் கட்டியவர் ஒன்றே குலம்! அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள். ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும் நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) […]

03) ஆட்சி தலைவர் நபிகள் நாயகம்

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும். திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல், முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் […]

02) நபிகளாரின் வாழ்க்கை குறிப்பு

நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : முஹம்மது பிறப்பு : கி.பி. 570ஊர் : சவுதி அரேபியாவில் உள்ள மக்கா. குலம் : மிக உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்தார். குலப் பெருமையை ஒழித்தார்கள். நிறம் : அழகிய சிவந்த நிறம் கொண்டவர்கள். நிறவெறியை ஒழித்தார்கள். மொழி : தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்ட அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மொழிவெறியை ஒழித்தார்கள். கல்வி : பள்ளி சென்று படிக்கவில்லை. கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சென்று […]