Category: நற்செயலும் அதன் பிரதிபலனும்

04) சிறு பாவங்கள் மன்னிக்கப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்கலஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் […]

03) பாவங்கள் அகற்றப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியில் அழுக்குகள் எதுவும் எஞ்சியிருக்குமா என தோழர்களிடம் நபி () அவர்கள் கேட்டார்கள். “அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது” என நபித் தோழர்கள் கூறினர். “இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்” என்றார்கள் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) |(புகாரி: 528)

02) பாவங்கள் மன்னிக்கப்பட

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ, அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியே! அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)  (புகாரி: 6405)

01) சொர்க்கத்தில் நடமாடும் வாய்ப்பு

நற்செயலும் அதன் பிரதிபலனும நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தியதற்காகச் சுவனத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.” அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) | ஸஹீஹ் (முஸ்லிம்: 5107)