Category: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

19) பெண்ணின் குணம்

நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 5184) இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள். பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி […]

18) மனைவிக்கு மரியாதை

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இஸ்லாம் ஆண்களுக்கு சொல்லித் தருகிறது. “நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை. இஸ்லாம் எந்தப் பொறுப்பை யாரிடம் […]

17) ஆண்களின் கண்டிப்பும் பெண்களின் கரிசனமும்

ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையில் வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக அறிந்தோம். இப்போது ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு சிந்தனை முக்கியமா? நினைவாற்றல் முக்கியமா? என்று ஆராய்ந்தால், சிந்தனைதான் முக்கியம். பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்துவது, இதில் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதினால் நமக்கு இலாபமா? நஷ்டமா? என்றெல்லாம் ஆராய்பவர்கள் ஆண்கள்தான். இதில் பெண்கள் ஏமாளிகளாகத் தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. நடைமுறையில் உதாரணம் சொல்வதாக இருப்பின், 1000 ரூபாய் பொருளை 2000 ஆயிரம் ரூபாய்க்குத் தவணை முறையில் விற்கிறார்கள். அதை […]

16) அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு

குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆண்களுக்குத் தான் உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இப்படிக் கூறுவதை பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக சிலர் சித்தரிக்கிறார்கள். இஸ்லாம் ஒரு கோட்பாட்டைச் சொல்கிறது என்பதற்காக எதிர்ப்பவர்கள் அறிவியல் இது குறித்து சொல்வதையாவது கவனிக்கட்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆணுக்குப் பதிலாக பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள் பலர். இதை இன்றைய விஞ்ஞானம் எப்படிச் சொல்கிறது என்று பாருங்கள்!. மூளையின் செயல்திட்டங்கள் முதலில் மனிதன் என்று தீர்மானிப்பது மூளையிலுள்ள செயல்திட்டங்கள் […]

15) ஆணாதிக்கம்

ஒழுக்கத்தைப் பேணி வாழ்வதுதான் குடும்பவியலுக்கு மிகவும் அடிப்படை என்பதற்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். இஸ்லாமிய குடும்பவியலைப் பொறுத்தவரை, அதற்கென அடிப்படையான விதிகள் உள்ளன. அந்த அழுத்தமான விதிகளின் படிதான் இஸ்லாமிய குடும்பவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் என்னவென்பதை ஒவ்வொன்றாகத் தெரிந்து, தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நம்முடைய குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக, சரியான வாழ்க்கை நெறியில் அமைந்த குடும்பமாக இருக்கமுடியும். ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும் இஸ்லாமிய குடும்பவியலில் முக்கிய அம்சம் என்னவெனில், ஆணும் பெண்ணும் சேர்ந்து […]

14) அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்

ஒரு பெண், மஹ்ரமான ஆணைச் சந்திக்க நேரிட்டால் அவள் தனது அலங்காரத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து திருக்குர்ஆன் சில சட்டங்களைக் கூறுகின்றது. ஒரு பெண் அந்நிய ஆடவர் ஒருவரைச் சந்திக்கும் போது, பெண்ணுக்கு நெருக்கமான, திருமனத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினர் பெண்ணுடன் இருந்தாலும் அந்த நேரத்தில் சில விதிமுறைகளைப் பேண வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் […]

13) சந்திப்பின் ஒழுங்குகள்

ஒரு பெண்ணை ஐந்தாறு நபர்கள் கொண்ட, அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு விஷயமாகப் பார்க்கச் சென்றால் அதனை மார்க்கம் அனுமதிக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் அனைவரையும் விரட்டியடிக்கத் தேவையில்லை. இதுபோன்று ஒரு ஆணை, பல பெண்கள் சேர்ந்து ஏதேனும் மார்க்கம் அனுமதித்த காரியத்தை நிறைவேற்றுவதற்குச் சந்தித்தால் தவறில்லை. இதற்கு ஆதாரமாக நபியவர்கள் காலத்தில் நடந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் சம்பவத்தைக் ஆதாரமாகக் கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் […]

12) சந்திப்புகளும் உரையாடல்களும்

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், இவர் […]

11) கொலையில் முடியும் கள்ள உறவுகள்

ஆண்களோ, பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறிதவழச் செய்கின்ற காரியங்களை விட்டு விலகியிருக்க வாழவேண்டும் என இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகின்றது. அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்ற கட்டளையாகும். இதுபோன்ற தனிமை சந்திப்புகள் தான் தவறுக்குத் தூண்டுகின்றன என்பது பற்றிக் கடந்த […]

10) தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள்

குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நபியவர்கள் இந்த மனித சமூகத்திற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் எனவும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது. நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் என நபியவர்கள் நமக்கு பல்வேறு […]

09) மஹ்ரமான உறவுகள்

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் பார்த்து வருகிறோம். இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு […]

08) நெருங்காதீர்!

இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும். சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற அந்தரங்கத்தைக் காட்சியாக்குகிறார்கள். பாடல்களும் அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கின்றன. இதைப் பார்த்து ரசித்தால் விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியைத் […]

07) ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும்

குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய ஒழுக்கக் கேடுகளிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதன் ஒரு பகுதியைப் பார்த்தோம். கணவன், மனைவி என்ற உறவின் மூலமே தவிர ஒரு ஆணோ, பெண்ணோ தன் உடல் சுகத்தை அனுபவிக்கவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி யாரெல்லாம் குடும்பத்திற்கு விசுவாசமாக, ஒழுக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்துகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு […]

06) குடும்பத்தை நாசமாக்கும் விபச்சாரம்

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் அதைப் பலர் நாசமாக்கி விடுகின்றனர். இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் கணவனாக இருந்து கொண்டே தவறாகப் பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதும், ஒரு ஆணுடைய மனைவியாக இருந்து கொண்டே பிற ஆண்களிடம் உடலுறவு கொள்வதுமேயாகும். அதாவது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான விசுவாசமானவர்களாக இருப்பதில்லை. உண்மையான விசுவாசிகளாக ஒருவருக்கொருவர் இருந்தால் தான், குடும்ப அமைப்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இந்தத் தொடரில் தெரிந்து கொண்டோமோ அவை அனைத்தும் […]

05) குடும்ப அமைப்பின் அவசியம்

அல்லாஹ் மனிதனைப் படைத்த காரணமே குடும்பமாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். எனவே குடும்ப அமைப்பில் வாழ்வது தான் இயற்கை நியதியாகும். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன்: 7:189) ➚ இப்படி ஜோடியைப் படைத்ததே, அவர்கள் இருவரும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதற்காகத் தான். அதையும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை […]

04) ஓரினச் சேர்க்கை

குடும்பவியலில் முதற்கட்டமாக, குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்களைப் பார்த்து வருகின்றோம். துறவறம், யாரும் யாருடனும் சேர்ந்து கொள்ளலாம் எனப் போதிக்கும் கட்டுப்பாடற்ற உறவுகள் போன்றவற்றின் தீமைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அந்த வரிசையில் ஒன்றுதான் ஓரினச் சேர்க்கையாகும். ஆண் இனம், பெண் இனத்துடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும். அதுதான் இயற்கை. அப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். ஆனால் மனித சமூகத்தில் சில ஈனச் செயல் புரிகின்ற இழிபிறவிகள், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று சொல்லும் ஹோமோ, […]

03) குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு

குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும். “நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது’ என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், “நான் எப்படி வேண்டுமானலும் […]

02) துறவறம் – ஒரு போலி வேடம்

நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை வைத்துக் கொண்டே கட்டுப்படுத்துவதாகச் சொல்வது. இது […]

01) முன்னுரை

இஸ்லாமிய மார்க்கம் எந்தப் பிரச்சனையில் தலையிட்டாலும் அதில் முழுமையாகவும் தெளிவாகவும் அறிவுக்குப் பொருத்தமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அணுகக் கூடிய ஒரு மார்க்கம். அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் எத்தகைய நெறிமுறைகளை நமக்குச் சொல்லித் தருகிறது என்பதை பார்க்கவிருக்கிறோம். இதற்குக் காரணம் கடந்த காலங்களிலிருந்து தற்போதைய நிலையைக் கவனிக்கும் போது குடும்ப அமைப்பு நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. இப்படியெல்லாம் குடும்பங்கள் சீரழிவை நோக்கிச் செல்லக் காரணம், முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்களைத் […]