Author: Naveed

16) நெருப்பு வீடு

16) நெருப்பு வீடு நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் அதிகமான இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள். இவர்களின் மண்ணறைகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக என்று இவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். தீயவர்களுக்கு மண்ணறையில் இப்படி ஒரு தண்டனையும் தரப்படலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ  الوُسْطَى حَتَّى […]

15) நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை

15) நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை இறந்தவனிடத்தில் நன்மைகள் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல் நல்லுப தேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூற மாட்டான். இதனால் அவனுடைய எலும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறையில் இறைமறுப்பாளனின் தலைப்புறமாக (நன்மை ஏதும் இருக் கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் […]

14) பதில் கூறாதவனுக்கு தண்டனை

14) பதில் கூறாதவனுக்கு தண்டனை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாத வனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப் படும். நெருப்பில் புரட்டப்படுவான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) (புகாரி: 1335) நபி (ஸல்) அவர்கள் […]

13) தீயவர்களுக்கான விசாரணை

13) தீயவர்களுக்கான விசாரணை கெட்ட மனிதன் விசாரணைக்குச் செல்லும்போது அவனுக்கு பதட்டம் ஏற்படும். வானவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் சரியான எந்த பதிலையும் சொல்ல மாட்டான். பரீட்சையில் தோற்று விடுவான். கெட்ட மனிதன் நடுக்கத்துடனும் திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கை யில் நீ இருந்தாய் என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (இப்னு மாஜா: 4258) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானின் […]

12) தீயவர்களுக்கு மலக்குகளின் வரவேற்பு

12) தீயவர்களுக்கு மலக்குகளின் வரவேற்பு கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போது அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டு செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் […]

11) புலம்பலும் சந்தோஷமும்

11) புலம்பலும் சந்தோஷமும் தனக்குக் கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறிக் கொண்டிருப்பார். தனக்குக் கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகிறது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள். إِذَا وُضِعَتِ الجِنَازَةُ، فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ […]

10) தீய வாழ்வைப் பற்றிய முன்னறிவிப்பு

10) தீய வாழ்வைப் பற்றிய முன்னறிவிப்பு மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்புச் செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார். وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ […]

09) பாவமன்னிப்பின் வாசல் அடைக்கப்படும்

09) பாவமன்னிப்பின் வாசல் அடைக்கப்படும் மலக்குகள் உயிரை கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே தாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்த பிரர்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.    اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏. وَلَيْسَتِ […]

08) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

  08) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்    மலக்குகள் உயிரை வாங்கும்போது நாம் நல்லவனாக வாழ்ந் திருக்கக்கூடாதா? என்ற எண்ணம் கெட்டவனுக்கு ஏற்படுகிறது. அப்போது தான் ஒவ்வொரு பாவியும் தான் செய்த பாவங்களை நினைத்து வருத்தப்படுவான். நன்மையை செய்வதற்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுவான். ஆனால் அவனுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காது. எனவே மரணம் சம்பவிப்பதற்கு முன்பே மறுமை வாழ்வுக்குத் தேவையான நற்காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் […]

07) தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை

  07) தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை வேதனை ஆரம்பம்    தீயவர்களின் உயிர் வாங்கப்படும் போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகின்றது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும் போது அவர்களுக்குப் கொடுக்கப்படும் வேதனையைப் பற்றி பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது. وَلَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏ (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!’ என்று கூறுவதை நீர் […]

06) உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்

06) உயிர்களை கைப்பற்றும் வானவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட ‘இஸ்ராயில்’ என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர்தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர் என்று பரவலாக நம்புகின்றனர். ஆனால் ‘இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை. இதற்குச் சான்றும் இல்லை. ஒரே ஒரு வானவர் தான் அத்தனை பேருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்த […]

05) மண்ணறையின் நிலையே மறுமையின் நிலை

05) மண்ணறையின் நிலையே மறுமையின் நிலை மண்ணறை வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்து விடும். ஆனால் மண்ணறை வாழ்க்கை சோகத்திற்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கை அதை விட வேதனைக்குரிய தாக அமைந்து விடும். எனவே சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். “சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் […]

04) பிரதிபலன் கிடைக்கும் இடம்

04) பிரதிபலன் கிடைக்கும் இடம் உலகில் நாம் செய்கின்ற நன்மைகளும் முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டைனையும் மறுமையில்தான் கிடைக்கவிருக்கிறது. மண்ணறை மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. இறந்தவர்கள் தங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டு இருபதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். «لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا» பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: […]

03) மறுமையை நினைவூட்டும் மண்ணறை

03) மறுமையை நினைவூட்டும் மண்ணறை   மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.  فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்! அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி) (முஸ்லிம்: 1777) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. அறிவிப்பவர்: […]

சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-2

சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-2   12) உறவை பேணுவோம் لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். ஆதாரம் :(புகாரி: 5984)   13) தர்மம் செய்வோம் اِتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஆதாரம் :(புகாரி: 6023)   14) நல்ல சொற்களை பேசுவோம் اَلْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். […]

02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது

02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது மண்ணறை வாழ்க்கை கிடையாது என்று சிலர் நினைக்கின்றார்கள். மண்ணறை  வாழ்க்கை உண்டு என்று இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.  எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.  காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன்: 40:45-46) ➚ ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் […]

01) முன்னுரை

01) முன்னுரை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை  நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக வாழ்க்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. நிலையில்லாத உலக வாழ்க்கையின் இன்பத்தில் மூழ்கி நிலையான மறுமை வாழ்க்கையை பலர் மறந்து விடுகின்றார்கள் இதனால் அவர்கள் நன்மையான காரியங்களை விட்டு விலகிச் செல்வதோடு தீமையின்பால் விரைந்து கொண்டிருக்கின்றார்கள். நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் தீமைகளை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இறையச்சத்தை நினைவூட்டும் காரியங்களை அறிந்து கொள்ளாததால் இத்தகைய நிலை இவர்களிடத்தில் நீடிகிறது. தடம் […]

« Previous Page