Author: Mukthiyaar Basha

பெண் நலம் பேணுவோம்!

பெண்’ – இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம்; அன்பின் உறைவிடம்; சகிப்புத் தன்மையின் உச்சக்கட்டம்;இன்னும் இதுபோன்று பல விளக்கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் அமைந்துள்ளது.இத்தகையவர்களை மனைவிகளாக பெற்ற கணவர்கள், அவர்களின் தவறுகளை மன்னித்து, மனைவியிடம் நல்ல முறையில் நடக்க வேண்டும். சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் சண்டையிட்டால், இறுதியில் மணவிலக்கு தான். விலா […]

போலி பெண்ணுரிமை!

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு […]

எதிர்ப்பை சந்திக்கும் சத்தியம்!

சத்திய இஸ்லாமை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல முனைந்தால், பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடும். சமுதாயத்தில் தலைவர்களாக இருப்பவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் தான் முதலில் நம்மை எதிர்ப்பார்கள். وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ […]

நல்ல நண்பர்களை தேர்வு செய்வோம் !

ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான்.‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். […]

பள்ளிவாசல்களும் நாமும்

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுன் நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது. அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். இவ்வுலகில் படைக்கப்பட்ட முதல் மனிதரான […]

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்

ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம்.இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம். இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் இந்த வார்த்தையை மொழிவதினால் நமக்குக் கிடைக்கும் […]

இஸ்லாம் ஒர் ஈர்ப்பு சக்தி!

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே […]

வரதட்சணை என்ற வியாபாரம்!

சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல் நடைபெறும் ஒரு வியாபாரம் தான் மாப்பிள்ளை வியாபாரம்! ஆம் மானங் கெட்டவர்களின் ஒவ்வொரு திருமண நிகழ்வின் போதும் நடைபெறும் வியாபாரம்.மணமகனை வரதட்சணை என்ற குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படும் இந்த வியாபாரம், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்திருந்தாலும், தற்போது அல்லாஹ்வின் பேரருளால் குறைந்து கொண்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்பினர் செய்யும் இடைவிடாத பிரச்சாரம் தான். இன்னும் சில ஊர்களில் இந்த விஷச் செடிகளைகளை […]

நபி மொழிகளில் வந்துள்ள தடைகள்

தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ ، وَلاَ عَنْ يَمِينِهِ فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ، أَوْ تَحْتَ قَدَمِهِ فَيَدْفِنُهَا. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே […]

தீமையை விட்டும் தடுக்கும் தொழுகை!

தொழுகையின் மூலம் அல்லாஹ் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கிறான். எவ்வாறு தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதை இந்த உரையில் காண்போம்… أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ” قَالُوا: لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: «فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الخَطَايَا ‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் […]

சபித்தல் என்பது கொலை செய்வதற்க்கு சமம்!

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது.இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம். உண்மையில் சபித்தல் என்பது கொலை செய்வதற்கு சமம்! «مَنْ حَلَفَ عَلَى مِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ، وَلَيْسَ عَلَى ابْنِ آدَمَ نَذْرٌ فِيمَا لاَ […]

சிந்திப்பது ஒரு இபாதத் !

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.சிந்திப்பதும் ஒரு இபாதத்!சிந்திப்பதும் ஒரு இபாதத் என்று இஸ்லாம் கூறுகிறது. படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து, அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் […]

முயற்சி செய்!

நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது.ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அது கைகூடாவிட்டால் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறலாம். நமது முயற்சியின்மை காரணமாக இருந்தால் அப்போது அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது பழிபோடக் கூடாது. أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ […]

அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அகிலத்தாரின் அழகிய முன்மாதிரிஇஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும்.மற்றொன்றுமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைய முடியும்.இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். அரைகுறையாகவே நம்புகின்றனர். இவ்விரு கொள்கைகளையும் அதன் முழு பரிமாணத்துடன் மக்களிடம் […]

கடைப்பிடிக்கபடாத மார்க்க சட்டங்கள்

இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் வழங்கப்பட்ட ஈடற்ற மார்க்கமாகும். اِنَّ الدِّيْنَ […]

பள்ளிவாசலின் முக்கியத்துவம்

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை.அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை […]

நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும். இஸ்லாம், பிற மதக்கொள்கை கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தோடு தனித்து விளங்க காரணம் சக மனிதர்களுக்கு நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான […]

ஒரினச் சேர்க்கையும் ஒரிறைவனின் தண்டனையும்!

உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் வசனத்தில் காணலாம். وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ […]

ஏகத்துவாதிகளே உங்களைத்தான்!

வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!குழப்பங்கள் தோன்றும் முன்! بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக […]

உணவு ஒர் அருட்கொடை!

உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிற்கான மீன்களை […]

சமூக வலைதளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது.சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன. விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. […]

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான்.ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான். وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏ அவர்களில் அதிகமானோர் இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 12:106)➚ இரண்டுமே பெண்கள் […]

இவ்வுலகமும் மறுமை வாழ்க்கையும்

மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம் மாறிவிடுகிறோம்!நபியவர்கள், ”நமக்கு அதிகமாக செல்வம் கொடுக்கப்பட்டு, அந்த உலகாசையானது இந்த சமுதாயத்தை அழித்துவிடுமோ” என்று பயந்திருக்கிறார்கள் என்றால், உலக ஆசையின், பொருளாதாரத்தின் பின் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம்பனூ ஆமிர் பின் லுஅய் […]

ஆணுக்கும் வேண்டும் ஒழுக்கம்

நவீன உலகில் இன்று விபச்சாரங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில முஸ்லிம்களும் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.விபச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் பெண்கள் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் பேண வேண்டும்; ஆடைகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என்று கண்டிக்கப்படுகிறார்கள். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று இந்தச் சமூகம் எண்ணுகிறது.பாதையில் அரைகுறை ஆடையுடன் நடமாடும் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் இணைய தளங்களிலும் அரைகுறை […]

சிறு நன்மையையும் அற்பமாக கருதாதீர்!

எவ்வளவு சிறிதாயினும் காண்பார்,இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏ وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ யார் அணுவளவு நன்மை செய்கிறாரோ அவர் அதைக் கண்டு கொள்வார்.யார் அணுவளவு தீமை செய்கிறாரோ அவர் […]

மன்னிப்பே ஆயுதம்!

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அன்று. மாறாக, இஸ்லாத்தின் பகுத்தறிப்பூர்வமான கடவுள் கொள்கை, மனிதர்கள் அனைவரும் சமம், மதகுரு என்ற ஒன்று இல்லாமை என மாற்றுமத மக்களும் ஒப்புக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இஸ்லாம் அபார வளர்ச்சியடைந்தது, இன்றைக்கும் வளர்ச்சி அடைகிறது .நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் தாறுமாறாக பரவியதற்கு மிக முக்கிய காரணம், அவர்களிடத்தில் இருந்த நளினமும், அடக்கமும், மன்னிப்புமேயன்றி வோறொன்றுமில்லை. சுமாமாவை ஈர்த்த இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை […]

அற்பமான உலக வாழ்க்கை

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான். உலகத்தின் நிலை زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ […]

நற்குணம் நிறைந்த மங்கை

பெண் இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம் அன்பின் உறைவிடம் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டம் இன்னும் இது போன்று பல விளக்கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது.ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் அமைந்துள்ளது. நவீன நாகரீகமங்கைகள் என்றாலும் பழமையான பழக்கவழக்கம் கொண்டவர்கள் என்றாலும் அகம்பாவம் கொண்டவர்களாக இருக்கும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு. எனவே பெண் என்பவள் அமைதியின் […]

பெண் கல்வி குறித்து இஸ்லாம்

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறி : ஆயிஷா (ரலி), நூல் : (ஹாகிம்: 3494) ➚ இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் […]

பொது வாழ்வில் கடமை

பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம் يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ‏ நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களும் (வேறு) யாரையும் போன்றவர்கள் அல்ல! நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்! யாருடைய உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் (தவறான) ஆசை கொள்வான். நல்ல பேச்சையே பேசுங்கள்!(அல்குர்ஆன்: 33:32)➚ இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் […]

இறைநம்பிக்கையாளர்களின் இலக்கணங்கள்

இறைநம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்! இறைநம்பிக்கை கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள் إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ அல்லாஹ்மீதும், அவனது தூதர்மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித ஐயமும் கொள்ளாமல் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரே இறைநம்பிக்கையாளர்கள். அவர்களே உண்மையாளர்கள். […]

அழுகை நேசிக்கும் அல்லாஹ்!

உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான; ஆபத்தானவை!அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதலில் அல்லாஹ்வைத் தான் நாம் […]

சோதனைக்கு பின்பே வெற்றி!

நபிகளார் காட்டிய ஏகத்துவக் கொள்கையை ஏற்று, அதன் வழிப்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஊரில் எதிர்ப்பு, ஊர் நீக்கம் ஆகியவற்றுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணற்ற துன்பங்கள் இந்த உண்மையான கொள்கையை ஏற்றதால் ஏற்படுகின்றன. இந்தக் கொள்கையின் சிறப்பினை விளங்கி ஏற்றுநடக்க முன்வரும்போது இது போன்ற துன்பங்களால் கொள்கையை விடுபவர்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள […]

பிரச்சாரமே நம் உயிர் மூச்சு!

நாம் ஏன் படைக்கப்பட்டோம்? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டும் மறுமையில் நம்மை சுவனத்தில் கொண்டு போய் சேர்க்குமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏகத்துவவாதிகள் இதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மிக வீரியமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. ஏகத்துவத்திற்கு எதிரான கப்ரு வணங்கிகளெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் […]

ஒரிறைக் கொள்கையை எடுத்து சொல்வோம்!

இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத்தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்கு கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்கு பல்வேறு நிலைகளை திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத்தான் வலியுறுத்துகிறது. இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்கு சிலர் திருமறைக்குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்கு தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டால் […]

சொர்க்கத்தில் இடம் பெறுவோம்!

இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாறாமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும். இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு […]

49) நாம் விரும்பாதது நடக்கும் போது

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ ரப்பனாa இன்னக தoஃலமு மா நுkhக்Fபீ வமா நுoஃலின், வமா யkhக்Fபா oஅல-ல்லாhஹி மின் ஷைஇன் Fபில் அர்Dளி வலா Fபிஸ் ஸமாaaஃ. பொருள்: எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது. (அல்குர்ஆன்: 14:38)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் […]

48) சத்தியம் தெளிவாக

رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ ரப்பன-Fப்தஹ் பைனனா வபைன qகவ்மினா பில்ஹqக்qகி வஅன்த khகைருல் Fபாதிஹீன். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாய மான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன். (அல்குர்ஆன்: 7:89)➚ (ஷுஐப் (அலை) அவர்களைத் தங்கள் மார்க்கத்திற்கு வந்து விடுங்கள் என்று மக்கள் கேட்ட போது ஷுஐப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை) رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَـٰنُ ٱلْمُسْتَعَانُ […]

47) இணைவைப்பிற்க்கு எதிரான உறுதிமொழி

رَبُّنَا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَـٰهًا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًا شَطَطًا ரப்புனா ரப்புஸ் ஸமாவாதி வல்அர்Dளி லன் நdத்oஉவ மின் dதூனிhஹீe இலாhஹல் லqகdத் qகுல்னாa இdhதன் ஷTதTதா. பொருள்: நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்.(அல்குர்ஆன்: 18:14)➚ (இறைவனின் நாட்டப்படி குகையில் பல வருடங்களுறங்கிய இளைஞசர்கள் எழுந்த பின் கூறிய வார்த்தைகள்)

46) அநீதி இழைக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேற எண்ணும் போது

رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ரப்பனாa அkhக்ரிஜ்னா மின் hஹாdhதிhஹில் qகர்யதிள் ளாலிமி அhஹ்லுhஹா, வஜ்oஅல் லனா மில் லdதுன்க வலிய்யவ் வஜ்oஅல் லனா மில் லdதுன்க நsஸீரா. பொருள்: எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! (அல்குர்ஆன்: 4:75)➚

45) தேவைகளை கேட்டு பெற

رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ரப்பி இன்னீ லிமாa அன்zஸல்த இலய்ய மின் khகைரின் Fபqகீர். பொருள்: என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன். (அல்குர்ஆன்: 28:24)➚ ( நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

44) எதிரிகள் மிரட்டும் போது

حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ ஹஸ்புன-ல்லாhஹு வநிoஃமல் வகீல். பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். (அல்குர்ஆன்: 3:173)➚ (‘‘மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று ஓரிறைக் கொள்கையை ஏற்ற நல்ல மனிதர்களிடம் சிலர் கூறிய போது சொன்ன வார்த்தைகள்)

43) எதிரிகள் சத்தியத்தை ஏற்க மறுக்கும் போது

حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ஹஸ்பிய-ல்லாhஹ், லாa இலாhஹ இல்லா hஹூ, oஅலைhஹி தவக்கல்து, வhஹுவ ரப்புல் oஅர்ஷில் oஅளீம். பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன். (அல்குர்ஆன்: 9:129)➚ (இணை வைப்பவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்கவில்லையானால் அப்போது நபி (ஸல்) அவர்களை இவ்வாறு அல்லாஹ் கூறச் சொல்கிறான்)

42) உணமையைக் காணும் போது

رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ ரப்பனாa ஆமன்னா Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன். பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக! (அல்குர்ஆன்: 5:83)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதைச் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட நல்லவர்கள் கண்களில் கண்ணீர் வடித்த நிலையில் கூறும் பிரர்த்தனை)

41) பிறர் நம் அறிவை பாராட்டும் போது

سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ஸுப்ஹானக லா oஇல்ம லனாa இல்லா மா oஅல்லம்தனா, இன்னக அன்தல் oஅலீமுல் ஹகீம். பொருள்: நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” (அல்குர்ஆன்: 2:32)➚ (வானவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனை)

40) அநீதி இழைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் போது

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீ நஜ்ஜானா மினல் qகவ்மிள் ளாலிமீன். பொருள்: அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 23:28)➚ (நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்க சொன்ன பிரார்த்தனை)

39) உணவு வேண்டி

وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ வர்zஸுqக்னா வஅன்த khகைருர் ராzஸிqகீன். பொருள்: எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன். (அல்குர்ஆன்: 5:114)➚ (நபி ஈஸா (அலை) கேட்ட பிரார்த்தனை)

38) கவலை நீங்கிய பின்…

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீe அdhத்hஹப oஅன்னல் ஹzஸன், இன்ன ரப்பனா லghகFபூருன் ஷகூர். பொருள்: எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன். (அல்குர்ஆன்: 35:34)➚ (சுவர்க்கவாதிகளின் பிரார்த்தனை)

37) மறுமை நாளில் இழிவு அடையாமல் இருக்க

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ ரப்பனா வஆதினா மா வoஅத்தனா oஅலா ருஸுலிக வலா துkhக்zஸினா யவ்மல் qகியாமhஹ், இன்னக லா துkhக்லிFபுல் மீoஆdத். பொருள்: எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய். (அல்குர்ஆன்: 3:194)➚ (மறுமை நாளை அஞ்சும் மக்களுக்கு அல்லாஹ் கற்று […]

36) இறைவனின் அதிசய படைப்புகளை பார்க்கும் போது

رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனா மா khகலqக்த hஹாdhதா பாTதிலா, ஸுப்ஹானக Fபqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:191)➚ (சிந்திக்கும் மக்கள் செய்ய அல்லாஹ் கற்று தரும் பிரார்த்தனை)

Next Page » « Previous Page