
9) மாதவிடாய்ச் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் செய்யத்தக்க காரியங்களும், செய்யக் கூடாத காரியங்களும் இஸ்லாமில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாதவிடாயின் போது தொழக் கூடாது நோன்பு நோற்கக் கூடாது فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]