
முன்னுரை சத்தியமார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள், அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே. இவ்விரண்டுக்கு எதிரான எந்தவொரு கருத்துக்கும், இஸ்லாத்துக்கும் இம்மியளவுகூட சம்பந்தமில்லை. இதையறிந்து மற்ற வழிகேடான வலுவற்ற ஆதாரங்களை உதறித்தள்ளிவிட்டு, இந்த இரண்டு உண்மையான ஆதாரங்களை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இருப்பினும், இவர்களில் பலர் தங்களுடைய பெற்றோர்கள், வாழ்க்கை துணைவியர், குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் போன்றோர் நடைமுறைப்படுத்துகின்ற மார்க்கத்திற்கு முரண்பாடான காரியங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் […]